தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! – மா.கந்தையா
யார் இவர் ? ! ” தமிழைப் பழித்தவனை என்தாய் தடுத்தாலும் விடேன் எதிரிகள் கோடி இட்டு அழைத்தாலும் தொடேன் “ வஞ்சினம் கூறிய வாதில்புலவன் பாவேந்தர் வழிவந்த மறவன் தமிழ்அறம்பாடி வந்தஅறிஞன் ! சங்கத்துமது ரையில்தமிழைப் பங்கப்படுத்திப் பேசிய ஓங்குபுகழ் அறிஞரெனினும் ஒவ்வாதசொல் லைத்தாங்காது தமிழைப் பழித்தவர்க்கு தக்கறிவூட்டி கருத்தினை உமிழ்ந்து தள்ளியதற்கு ஓர்சான்று உண்டன்றோ ! விடுதலையான நம்நாட்டில் கெடுதலையேதரும் பொருள்நிலையை சடுதில்மாற்றி இந்தியநாடு சமநிலைகாண நிதிஅமைச்சராகவும் சர்ச்சிலொடு வாதிட்டுவென்று ‘சர்பட்டம் ‘ பெற்ற ஆர்….
இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 7 – மறைமலை இலக்குவனார்
(ஆவணி 06, 2046 / ஆக.23, 2015 தொடர்ச்சி) 7 எனினும் இத்தகைய உண்மைகளை உணரப்பெறா வையாபுரியார் தொல்காப்பியரை மேலும் கடன்பட்டவராகவே காட்ட விழைகிறார். தொல்காப்பியத்தில் ‘மொழிமரபு’ இயலில் அமைந்துள்ள இரண்டு நூற்பாக்கள் வரருசி இயற்றிய ‘பிராகிருதப் பிரகாசா’ எனும் இலக்கணநூலில் காணப்படும் இரு நூற்பாக்களின் மொழியாக்கமே என வாதிடுகிறார், வையாபுரியார். ‘அகர இகரம் ஐகாரமாகும்’ ‘அகர உகரம் ஔகாரமாகும்’ என்பவை அவ்விரு நூற்பாக்களுமாகும். ‘இவற்றுள் காணப்படும் புதுமை என்ன? பிராகிருத நூல்களிலிருந்து கடன்பெற்றுச் சொல்லவேண்டிய இன்றியமையாமை யாது உளது? மொழிவரலாற்றில் ஐயும்…
தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
உலக மொழிகளின் தாயான தமிழ் மொழி, தனக்குரிய செம்மை நிலையைப் பன்னூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டது. உலகின் பல பகுதிகளில் மொழியே பிறந்திருக்காத பொழுது, ஏன், மக்களினமே தோன்றியிராத பொழுது இத்தகைய உயர்தனிச் செம்மை நிலையைத் தமிழ் அடைந்து விட்டது. அத்தகைய வளர்ச்சிக்கும் அதன் தொடர்ச்சியான செம்மைக்கும் பல்வேறு புலவர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கட்டுரையாளர்கள், படைப்பாளர்கள், சொற்பொழிவாளர்கள் எனப் பல நிலையில் உள்ளவர்களும் பாடுபட்டுள்ளனர்; பாடுபட்டு வருகின்றனர். இத்தகையோருள் 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர்களில் குறிப்பிடத்தக்க முதன்மையானவர்களில் ஒருவராகத்…
இலக்குவனாரின் “பழந்தமிழ்”-ஆய்வுநூல்: 6 – மறைமலை இலக்குவனார்
“திராவிடமொழியின் தொன்மையை நிலைநாட்டப் பேரளவில் பெறலாகும் துணையினைச் செந்தமிழே அளிக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்” என்னும் அறிஞர் கால்டுவெல் (திரா. ஒப். – ப. 106) கூற்றினையும் தம் கருத்துக்கு அரண்சேர்க்கும் வகையில் மேற்கோள் காட்டுகிறார். திராவிடமொழிகள் பன்னிரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்து இவையனைத்தும் ஒரு குழுவைச்சார்ந்தனவே எனத் திட்டவட்டமாக ஆய்ந்து நிறுவிய அறிஞர் கால்டுவெல் “பழந்தமிழ்தான் இவையனைத்துக்கும் தாயாகும் உரிமையும் சிறப்பும் உடையது என்பதை வெளிப்படையாகக் கூறினாரிலர்” (பழந்தமிழ் – ப. 67) என வருந்தும் பேராசிரியர், “அவர் அவ்வாறு கூறாது போயினும், அவருடைய ஆராய்ச்சி…
காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்
காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . ….
தமிழ்க் கடவுள் வணக்க வழிபாட்டை ஆரியத் தொடர்பால் ஏற்பட்டதாகத் திரித்துக் கூறினர் – சி.இலக்குவனார்
திணையைக் குறிப்பிடும் பொழுது அத்திணைக்குரிய இயற்கை வளத்தையோ உற்பத்தியான விளைபொருளையோ குறிப்பிடுவது வழக்கமாகும்; என்ற போதும் தொல்காப்பியர் பல்வேறு திணைகளுக்குரிய முதன்மையான தெய்வங்களையும் அவற்றின் முதன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு புலவர் தெய்வத்தன்மை முதன்மையையும் மக்களுக்குரிய இன்றியமையாமையையும் குறிப்பிட்டுள்ளார். மாயோன், சேயோன், வேந்தன், வருணன் எனக் கடவுளர்களை குறிப்பிடுவது, சிலரால் அவர்கள்தான் ஆரியர்களால் வழங்கப்பட்ட விட்ணு, முருகன், இந்திரன், வருணன் என்ற முடிவுக்கும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கடவுள் வணக்க வழிபாடுகள் ஆரியர்களுடனான தொடர்பால் ஏற்பட்டது என்ற முடிவுக்கும் கொண்டு வந்துவிட்டது. –…
நான்மறை என்பது முந்தைய தமிழ்மறையே! – சி.இலக்குவனார்
‘அதர்வண வேதம்’ ஒரு வேதமாக ஒப்புக் கொள்ளப்பட்டு, நான்கு வேதங்கள் என்ற எண்ணிக்கை கொண்டது மிக மிகப் பிற்பட்ட காலத்தில்தான் என்று வரலாற்றாசிரியர் தத்தர் கூறுகின்றார். (R.C.Dutt, early Hindus clivilization Page 116) ஆதலின் மிக முற்பட்ட நூலான தொல்காப்பியப் பாயிரத்தில் நான்மறை என்று சுட்டப்பட்டது ஆரிய நான்கு வேதங்களாக இருத்தல் இயலாது. அன்றியும் தென்னாட்டுத் தமிழர் ஒருவர் வடநாட்டு ஆரிய மொழியில் உள்ள நான்கு வேதங்களையும் முற்றக் கற்றல் அவ்வளவு எளிதன்று. ஆரிய மொழியில் நல்ல பயிற்சியும் புலமையும் உடைய ஆரியரே,…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 2 – மறைமலை இலக்குவனார்
(அகரமுதல 19.07.15 தொடர்ச்சி) 2 தொல்காப்பியர்காலத்தமிழுக்கும் திருவள்ளுவர்காலத்தமிழுக்கும் இடையே நிலவிய சில வேற்றுமைகளைப் பட்டியலிடுகிறார் (மே.ப. ப.139-140). ‘அடிப்படையில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிலது. விகுதிகள், உருபுகள், இடைநிலைகள், சொற்கள் புதியனவாகத் தோன்றியுள்ளன. பழையன புதிய பொருள்கள் பெற்றுள்ளன’ என்று இவற்றைச் சுருக்கமாகத் தொகுத்துரைத்து, இவ்விருவர் கால இடைவேளை ஆறு நூற்றாண்டுகள் என்பதையும் சுட்டி ‘ஆறு நூற்றாண்டுகட்குள் மேலைநாட்டு மொழிகளில் பல அடைந்துள்ள மாற்றங்களோடு தமிழ்மொழி அடைந்துள்ள மாற்றங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தமிழ்மொழி மாற்றமே அடையவில்லை என்று கூறிவிடலாம்’ (மே.ப. ப.139-140) என அறுதியிட்டுரைக்கிறார்….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 – மறைமலை இலக்குவனார்
செந்தமிழின் செம்மொழிச்சீர்மையை விளக்கும் இலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோற்றம் ஏனைய மொழிகளின் சார்பின்றியிருத்தலும் வேண்டும். என்கிறார் அமெரிக்கத் தமிழறிஞர் சார்சு கார்ட்டு (George Hart). ஒரு மொழியின் இலக்கியப்பழமையே அதனைச் செம்மொழியாகப் போற்றுதற்கு முதன்மைக் காரணம் எனக் கூறுவதுடன் சங்க இலக்கியங்களின் செழுமையையும் அவர் விரிவாக விளக்கித் தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்குவது குறித்த ஆய்வு தேவையற்றது என்கிறார். தமிழுக்குச் செம்மொழித் தகுதிப்பேறு வழங்கவேண்டும் என்று…
தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதேயன்றி முதல்நூலன்று – சி.இலக்குவனார்
தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்று கூறப்படுகின்றது. தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் நமக்குக் கிடைத்தில. ஆதலின் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல்கள் இல்லையென்று கூறிவிட இயலாது. தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். எம்மொழியிலும் இலக்கியம் தோன்றி வளர்ந்த பின்னரே இலக்கணம் தோன்றும். இதற்குத் தமிழ் மொழியும் புறம்பன்று. தமிழிலும் இலக்கியங்கள் தோன்றிய பின்னரே இலக்கணங்கள் தோன்றியுள்ளன. தொல்காப்பியமும், இலக்கியங்கள் மட்டுமின்றி இலக்கணங்களும் பல தோன்றிய பின்னரே இயற்றப்பட்டுள்ளது என்பதைத் தொல்காப்பியமே தெற்றெனப் புலப்படுத்துகின்றது. ஆதலின் தொல்காப்பியம் இன்று நமக்குக்…
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும் – சி.இலக்குவனார்
இந்திய வரலாறு குமரிநாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். தமிழகம் மிகவும் தொன்மை வாய்ந்த வரலாற்றினையுடையது. ஆனால் வரலாற்றாசிரியர்கள் தமிழகத் தொன்மையை நன்கு ஆராய்ந்து வரையறுத்து எழுதுவதில் கருத்துச் செலுத்திலர். இந்திய வரலாற்றாசிரியர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைப் பற்றிய நினைவே கொண்டிலர். வட இந்தியாவிலும் தென்னிந்தியாவே மிகவும் தொன்மை வாய்ந்தது. வரலாறு மிகத் தொன்மையான காலத்திலிருந்தே எழுதப்பெறுவது மரபென்றால் இந்திய வரலாறு குமரி நாட்டிலிருந்தே தொடங்கப் பெறுதல் வேண்டும். குமரி ஆறும் குமரி மலையும், பனி மலையினும் கங்கையாற்றினும் மிக மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். “மன்பதை முதலில்…
சாதி அமைப்பை வலுவாக்கப் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் – சி.இலக்குவனார்
சாதி எதிர்ப்பை நலிவாக்கவும் சாதி அமைப்பை வலுவாக்கவும் புகுத்தப்பட்ட இடைச்செருகல்கள் தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டில் சாதிமுறை அமைப்பு இல்லை. எனவே தொல்காப்பியத்தில் சாதி குறித்த எவ்வகைக் குறிப்பும் காணப்படவில்லை. வடஇந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் பின்பற்றிய காரணத்தினால் தமிழ்நாட்டில் படிப்படியாகச் சாதி அமைப்பு ஏற்பட்டது. முனிவர்களும் அறிஞர்களும் சாதி முறையை எதிர்த்தனர். தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட புலவரும், மெய்யியல் அறிஞருமான திருவள்ளுவர், சாதி அமைப்பை “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” “அந்தணர் என்போர் அறவோர் மற்றுஎவ்உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்” எனக் கண்டிக்கிறார்….
