தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்க்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இல்லையா? – தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 21 (திரைத்துறையினரின் தமிழ்க்கொலைகளைத் தடுத்து நிறுத்துக! : தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 20 -இன் தொடர்ச்சி) மாண்புமிகு முதல்வர் மு.க.தாலின் பிறந்த நாளில் அவர் எல்லா நாளும் நலமும் வளமும் மகிழ்ச்சியும் நிறைந்து மக்கள் மகிழ நல்லாட்சி வழங்கி நூறாண்டு வாழ வாழ்த்துகிறோம். இந்தியத் துணைக்கண்டத்திற்கு வழிகாட்டியாகவும் அதன் தலைமையை நோக்கியும் பீடு நடை போடுவது மகிழ்ச்சி யளிக்கிறது. உலகத் தமிழர்களும் தலைவர்களும் வாழ்த்துவதுபோல் தமிழன்னையும் மனங்குளிர்ந்து வாழ்த்த வேண்டுமல்லவா? அதற்கான…
தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தங்கள் பொறுப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்பை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள். சிறப்பாகச் செயலாற்றி நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சி, தமிழின…
முப்பால் வழியில் முதல்வர் மு.க.தாலின் – இலக்குவனார் திருவள்ளுவன்
மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்
மு.க.தாலினுக்குப் பாராட்டுகள்! மாநிலக்கட்சிகள் கூட்டமைப்பு அமைத்திடுக! தமிழ்நாடு-புதுவையில் ஓரு தொகுதி நீங்கலாக அனைத்திலும் தி.மு.க. கூட்டணியை வாகை சூட வைத்துள்ளார் மு.க.தாலின். அவரது தனித்தன்மையை ஏற்க வேண்டுமே தவிர, அவரின் தந்தை கலைஞர் கருணாநிதியுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். எனினும் அவ்வாறு ஒப்பிட்டுப் பேசுநருக்கும் விடையிறுக்கும் முகமாக வெற்றிக் கனிகளைப் பறித்துள்ளார். சிறப்பான வெற்றிக்கு அடிததளமாகவும் அரணாகவும் இருந்த மு.க.தாலினுக்குப் பாராட்டுகள். தலைமைய(மைச்ச)ர் பதவி ஆசையில் கூட்டணிக்கு உடன்படாத மே.வங்க, உ.பி. முதலான வட மாநிலத் தலைவர்கள் மு.க.தாலின் வழியைப்…
வல்லமையாளர் தாலின் வெல்க! – இலக்குவனார் திருவள்ளுவன்
வல்லமையாளர் தாலின் வெல்க! திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம். திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு…
தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்! திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள (12.08.2049/28.08.2018) தாலினுக்கும் பொருளாளராகப் பொறுப்பேற்றுள்ள துரை முருகனுக்கும் வாழ்த்துகள். துரை முருகன் நகைச்சுவையாகப் பேசுபவர். எனவே, யாரையும் கசக்கிப் பிழியாமல் தன் பேச்சு மூலமே பொருளைத் திரட்டுவார் என எதிர்பார்க்கலாம். இதேபோல் நிகழ்ச்சிகள் நடத்தும்பொழுது பொதுமக்களிடம் பணம் பறிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறோம். பன்முகத் திறமை கொண்ட கலைஞர் மு.கருணாநிதிக்குப் பின்னர் மு.க.தாலின், திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். கட்சியைப் பிளவிலிருந்து காப்பாற்றல், தேர்தல்களில் வெற்றிகளை ஈட்டச் செய்தல், அதற்காகக் கூட்டணிகளைச்…
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! – இலக்குவனார் திருவள்ளுவன்
உளவுத்துறை ஊடுருவலுக்கு உள்ளாகித் திமுகவைச் சிதைக்க வேண்டா! வேட்டைக்காரன் காத்துக் கொண்டுள்ளான். பாய்ந்து குதறி எடுக்க நேரம் பார்த்துக்கொண்டுள்ளான். வேட்டை நாய்களையும் ஆயத்தமாக வைத்துள்ளான். குறி வைக்கப்பட்டவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் வலிமையும் ஒற்றுமையும் இருப்பின் எதற்கும் அஞ்ச வேண்டியதில்லை. இந்த உண்மை ஒன்றும் மறைபொருளன்று. அறிந்திருந்தும் சிலர் வலையில் விழ விழைவதால் அனைவருக்குமே தீங்கு நேரும் பேரிடர் உள்ளது. இந்தச் சிந்தனையுடன் நாம் கட்டுரையைத் தொடருவோம்! மேனாள் முதல்வரும் அதிமுக தலைவியுமான செயலலிதா மறைந்த பின் பல நேர்வுகளில் அதிமுக ஒற்றுமை…
மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! – தாலின்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்: மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கக் கூடாது! தாலின் அறிக்கை “தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அதிகாரம் அளிக்கும் அவசரத்தில் மாநிலங்களின் உரிமைகளைப்பறிப்பதையும், மாநிலங்களிலுள்ள ‘பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களை’ செயலிழக்க வைப்பதையும் நிச்சயம் ஏற்றுக் கொள்ளமுடியாது” என்று தி.மு.க.ச் செயல் தலைவர் மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தளபதி மு.க. தாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- ‘தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு’ அரசியல் சட்டத் தகுதி அளிக்கும் 123 ஆவது அரசியல் சட்டத்…
செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(மாசி 18, 1984 / மார்ச்சு 01, 1953) செயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே! இன்றைய அரசியலின் திருப்புமுனையாகச் செயல்பட்டு வருபவர் மு.க.தாலின். தன் பதினாறாம் அகவையிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்தார்; கட்சியில் படிப்படியாகப் பல முன்னேற்றங்களைக் கண்டார். தந்தையின் ஒத்துழைப்பால் இவர் வட்டச்சார்பாளர், மாவட்டச்சார்பாளர், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர், இளைஞர் அணிச் செயலர், துணைப்பொதுச்செயலர் எனப் பல்வேறு பொறுப்புகளுக்கு வந்துள்ளார். வேறு உயர் பதவிக்கு வர விழைந்தும், தந்தையின் இப்போதைய உடல்நிலையில் தி.மு.க.வின் செயல்தலைவராக உயர்ந்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு…