தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்)   தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)  ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே இந்நூற்பாவை இயற்றியுள்ளார்.   ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிது மாறுபடினும் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று கூறப்பட்ட தம் இயல்புகளில் மாறுபடா…

மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார்

   (பங்குனி 09, தி.ஆ.2045 / 23, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) 13.பொருள்வயின் நீடலோ இலர் – தோழி   – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    (தலைவன் பொருள்தேடச் சென்றபின் வருந்தும் தலைவியும் ஆற்றும் தோழியும்) தோழி : அம்ம! ஏன் இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்றாய். கண்ணீர் ஆறாகப் பெருகிவழிந்தோடுகிறதே. தலைவி : இளமை நிலைத்து நில்லாது என்பதை அவர் அறியாதாரா என்ன? தோழி :  ஏன் அவர் அறியமாட்டார்? நன்றாக அறிவார்! தலைவி : பொருளை…

தொல்காப்பிய விளக்கம் – 10 : முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பிய விளக்கம் – 10 (எழுத்ததிகாரம்)   தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   (தை 6 , 2045/19 சனவரி 2014 இதழ்த் தொடர்ச்சி)   ட,ர, எனும் இவை மொழிமுதல் எழுத்துக்களாக வருதல் இல்லை. ‘ன்’க்குப் பிறகு ‘ட’வும் ‘ள்’க்குப் பின்னர் ‘ர’வும் வருதல் இல்லை. ஆனால் ‘வல்லெழுத்து இயையின் டகாரம் ஆகும்’ எனும் இடத்திலும் ‘அவற்றுள், ரகார ழகாரம் குற்றொற்று ஆகும்’ எனும் இடத்திலும் விதிக்கு மாறாக வந்துள்ளன. இந்நூற்பாக்களில், ட, ர, என்பனவற்றின் இயல்பு விளக்கப்படுகின்றது. ஆதலின்…

மாமூலனார் பாடல்கள் – 11சி.இலக்குவனார்

   –சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    (சன.26, 2014 இதழ்த் தொடர்ச்சி) தோழி! வருந்தாதே – “வினையே ஆடவர்க்கு உயிர்” என்ற கோட்பாட்டில் சிறந்த உள்ளம் கொண்டவனாய், தலைவன் வெளியூர் சென்றுவிட்டான். தலைவி தலைவன் பிரிவால் நாள்தோறும் மெலிந்து கொண்டே இருந்தாள். தோழி ஒரு நாள் உற்று நோக்கினாள். ஆறுதல் கூறத் தொடங்கிவிட்டாள். “தோழி! வருந்தாதே, குவளை மலர் போன்ற கண்கள் தம் அழகை இழந்துவிட்டனவே, தொய்யில் எழுதி அழகுடன் விளங்கும் உன் தோள்கள் இன்று என்ன இப்படிக் காணப்படுகின்றன?…

இலக்குவனார் எழுதுகோல்-வீழாமல் காக்கும் ஊன்றுகோல்!

  மண்ணுக்கும் பொண்ணுக்கும் பொன்னுக்கும் போராடும் மாந்தரிடை மொழிக்காய்ப் போராடி, தமிழர் இனமானம் காத்தபேரா சிரியர் இலக்குவனார் தனக்கு இலக்கு தமிழர் முன்னேற்றம் காசுபணம் விலக்கி நேர்மைத் திறத்தால் மாசிலா மனத்தால் போராடும் குணத்தால் ஓரிடம் நின்று பணியாற்ற வழியின்றி வேறுவேறு ஊர்கள் தோறும் சென்று காலத்தை வென்று சாதனை படைத்தவர்! கால்பதித்த இடமெலாம் தன்தடம் பதித்தவர்! கன்னித் தமிழை உயிராய் மதித்தவர்! செல்லும் இடமெலாம் தமிழ்முழக்கம் செய்ததால் செல்லரித்த மனங்கள் மலர்ந்தன! சோம்பிய இறகுகள் துடித்தன! சாம்பிய இமைகள் திறந்தன! தமிழை நினைந்து,…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும் “பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள்” பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 4/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in சொல்லாய்வுப்பணி   சொல்லாய்வின் மூலமாகத் தமிழின் தொன்மை, தூய்மை, காலம் முதலியவற்றைப் பேராசிரியர் இலக்குவனார் வரையறுக்கிறார்.   தமிழின் தோற்றமும் வளர்ச்சியும்/Origin and Growth of Tamil, தமிழ்ச்சொற்கள் பற்றிய சிற்றாய்வு/A Brief study of Tamil words, தமிழிலக்கண உருவாக்கம்/ Making of Tamil Grammar, தமிழ்மொழியில் முதல்நிலைச் சொற்களும்…