ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்
ல கரத்தை rh எனக் குறிப்பிடுவோம்! லகர, ளகர, ழகரங்களை ஆங்கிலத்தில் எவ்வாறு நாம் வேறுபடுத்திக் குறிக்கலாம்? தமிழில் இவற்றை நாம் எவ்வாறு குறிப்பிடுகிறோம் என முதலில் பார்ப்போம். ல – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம். எழுத்து மேல்நோக்கி முடிவதால் மேல்நோக்கு லகரம் என்றும் சொல்வர். ள – நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும்….
