கலைச்சொல் தெளிவோம் 206. அந்தர ஊர்தி – Hovercraft: இலக்குவனார் திருவள்ளுவன்

  Propellers push the hovercrafat forward Passenger cabin Air intaker Fan (blows air downward) Air escaper (through gaps in skirt) Area of high air pressure under craft Air makes skirt balloon out and down Flexible rubber skirt Radar

கலைச்சொல் தெளிவோம் 195 – 204(அறிவியல் துறைப் பெயர்கள்)

மரபு இயைபியல் – genecology: தாவரத் தொகுதியின் மரபு இயைபை வளர் இடர்த் தொடர்பாக ஆராயும் துறை: மரபு வழியியல் – geneology: ஒரு தனி உயிரி அல்லது குடும்பம் பற்றிஆயும் துறை: புவி வேதியியல் – geo chemistry: புவியின் வேதி இயைபை ஆராயும் துறை புவி வடிவ இயல் – geodesy: புவி மேற்பரப்பை படமாக்குதல் , அளவிடுதல் ஆகியவை பற்றி ஆராயும் துறை புவியியல் – geography: புவி மேற்பரப்பின் இயல்புகள், அவற்றின் பரவல் வினை ஆகியவை பற்றி ஆராயும்…

கலைச்சொல் தெளிவோம் 165 – 174 (அறிவியல் துறைப் பெயர்கள்)

வானியல் – astronomy : ஞாயிறு பிற கோள்கள் விண்மீன்கள் முதலிய வானில் உள்ளவற்றை ஆராயும் துறை வான இயற்பியல் –   astrophysics : விண்வெளியில் உள்ளவற்றின் இயல்பையும் அவற்றால் காற்றுவெளியில் நேரும் நிகழ்வுகளையும் ஆராயும் துறை உயிரிய வேதியியல் –   biochemistry: உயிரின் வேதிச்செயல்பாடுகளையும் வேதிப்பொருள்களையும் ஆராயும் துறை. உயிரிய வேதி வகைப்பாட்டியல் –   biochemical taxonomy: வேதிப்பண்புகளின் அடிப்படையில் உயிரிகளைப் பாகுபாடு செய்யும் ஆய்வுத் துறை. உயிரிய மின்னணுவியல் – bio electronics : உடலில் மின்னணுக் கருவி அமைப்புகளைப் பதிய…

கலைச்சொல் தெளிவோம்! 164.பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி

கலைச்சொல் 164. பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி – araskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia   வெள்ளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில் 29 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் வெள்ளி மாழையையும், சிறுபான்மை வெள்ளிக் கோளையும் குறிக்கும் வகையிலேயே காணலாம். வெள்ளிக் கோளால் அமைந்த நாளே வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் நாள் அமையும் பொழுது வரும் பேரச்சமும், பிற கிழமையில் வரும் பதின்மூன்றாம் நாள் குறித்த பேரச்சமும் உள்ளன. அவை வருமாறு: பதின்மூன்றாம் நாள் வெள்ளிவெருளி- Paraskavedekatriaphobia/Paraskevidekatriaphobia/Friggatriskaidekaphobia . இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 162. வெகுள்பு வெருளி-Angrophobia; 163. வெள்ள வெருளி-Antlophobia

கலைச்சொல் 162. வெகுள்பு வெருளி-Angrophobia  வெகுண்டனள்(1), வெகுண்டு(6), வெகுள்(1)வெகுள்வர்(1), வெகுள்வாய்(1), வெகுள்வோள்(1), வெகுளி(4), வெகுளும்(1) என்பன வெகுள்வதை அடிப்படையாகக் கொண்ட சங்கச் சொற்கள் உள்ளன. வெகுளி பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் வெகுள்பு வெருளி–Angrophobia கலைச்சொல் 163. வெள்ள வெருளி-Antlophobia   சங்க இலக்கியங்களில் வெள்ளம் என்பதுசில இடங்களில் பேரெண்ணைக் குறிக்கும் வகையில் வந்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறித்து ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் வெள்ள வெருளி-Antlophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 160. விலங்கு வெருளி-Zoophobia; 161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia

கலைச்சொல் 160. விலங்கு வெருளி-Zoophobia  விலங்கு என்றால் குறுக்காக அமைதல் என்று பொருள். மக்கள் இனம் போல் நேராக இல்லாமல் குறுக்காக அமைந்த உயிரினமே விலங்கு எனப்பட்டது. விலங்கு என்பதன் மூலப் பொருளிலும் விலங்கினம் என்னும் பொருளிலும் ஆக 38 இடங்களில் விலங்கு என்னும் சொல்லைச் சங்கப்புலவர்கள் கையாண்டுள்ளனர். விலங்குகள், பறவைகள் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய விலங்கு வெருளி-Zoophobia கலைச்சொல்  161. வீழ்பு வெருளி-Basophobia/Basiphobia  சங்கப்பாடல்களில் விழு(85) சிறப்பினைக் குறித்தாலும், வீழ்வதையும் குறிக்கின்றது. விழுந்த மாரிப் பெருந் தண் சாரல…

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia; 158.வம்பலர் வெருளி-Katikomindicaphobia;159. வானிலை வெருளி-Astraphobia

கலைச்சொல் தெளிவோம்! 157. மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia மெலி(1), மெலிக்கும்(2), மெலிகோல்(1), மெலிந்த(2), மெலிந்தார்(1), மெலிந்திட்ட(1), மெலிந்திலள் (1), மெலிந்து(9), மெலிய(3), மெலியர்(2), மெலியா(2), மெலியாது(1), மெலியும்(1), மெலிவு(5) என மெலிவு தொடர்பான சொற்கள் சங்கப் பாடல்களில் வருகின்றன. மெலிவு பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் மெலிவுவெருளி-Blennophobia/Myxophobia   கலைச்சொல் தெளிவோம்! 158. வம்பலர் வெருளி-Katikomindicaphobia  வம்பலன்(1), வம்பலர்(33), வம்ப மாக்கள், வம்ப மாந்தர் ஆகியன அயல்நாட்டில் இருந்து வந்து தங்கும் புதியோரைக் குறிக்கின்றது. அயல் வாழ்நர் (அயல்நாட்டில் இருந்து இங்கு வந்து வாழ்நர்) மீதான…

கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia; 156. மாப்பொருள் வெருளி-Carbophobia

கலைச்சொல் தெளிவோம்! 155. மாலைமாற்று வெருளி-Aibohphobia  ஒரு சொல்லைத் திருப்பிக் கடைசி எழுத்தில் இருந்து வாசித்தாலும் அதே சொல் வருதலை இருவழிச் சொல் என்பர். இதனை அவ்வாறு சொல்வதைவிடத் தமிழிலக்கணவியலில் உள்ள மாலைமாற்று என்னும் கலைச்சொல் பொருத்தமாக அமைகிறது. பிற மொழிகளில் அத்தகைய சொற்களைத்தான் பார்க்க முடியும். தமிழில் தொடர்களும் பாடல்களுமே உள்ளன. அத்தகைய பாடலுக்கு மாலை மாற்று எனப் பெயர். அதுவே இரு வழியாகவும் அமையும் சொல்லிற்கான பெயராக இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய இயல்பு மீறிய பேரச்சம் மாலைமாற்று வெருளி-Aibohphobia கலைச்சொல்…

கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia

கலைச்சொல் தெளிவோம்! 153. பெருவெளி வெருளி-agoraphobia  மனைஅறிவியல், மருந்தியல், ஆகியவற்றில் agoraphobia திறந்தவெளி அச்சம் எனப் பயன்படுத்துகின்றனர். திறந்த வெளி என்பதை விடப் பெரு வெளி என்பதே பொருத்தம். திறந்த பெரு வெளியைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் பெருவெளி வெருளி-agoraphobia கலைச்சொல் தெளிவோம்! 154. பேய் வெருளி-Phasmophobia/Spectrophobia  மாணா விரல வல் வாய்ப் பேஎய் (நற்றிணை : : 73: 2) ”பேஎய்க் கொளீஇயள்” இவள் எனப்படுதல் (குறுந்தொகை : : 263:5) பேஎய் அனையம், யாம்; சேய் பயந்தனமே. (ஐங்குறுநூறு…

கலைச்சொல் தெளிவோம்! 149 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia

 புற்றுநோய் வெருளி-Cancero Phobia/Carcinophobia   புற்று என்பது குறித்துப் பின்வருவனபோல் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த (அகநானூறு : 8:1) செம் புற்று ஈயல் போல (புறநானூறு : 51: 10) புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் (பதிற்றுப்பத்து : 45:2) நெடுங் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி (நற்றிணை :59:2) பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் (பெரும்பாண் ஆற்றுப்படை : 277) புற்று போன்ற தன்மையில் உடலில் ஏற்படும் நோய்தான் புற்று நோய். வேளாணியல்,…

கலைச்சொல் தெளிவோம்! 148 புதைவு வெருளி-Taphephobia

புதைவு வெருளி-Taphephobia அடி புதை அரணம் எய்தி, படம் புக்கு (பெரும்பாண் ஆற்றுப்படை : 69) வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு (பெரும்பாண் ஆற்றுப்படை : 123) முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே (ஐங்குறுநூறு : 197.2) மயிர் புதை மாக் கண் கடிய கழற (பதிற்றுப்பத்து : 29.12) தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான் (கலித்தொகை : 39.2) முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப (அகநானூறு : 86.23) நிலம் புதைப் பழுனிய மட்டின்…