கலைச்சொல் தெளிவோம்! 87. அனைத்து வெருளி

87. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது. எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர். அனைத்தும், புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266) கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22) அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68) அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16) இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்        அறி அறிவு ஆகாச் செறிவினை…

கலைச்சொல் தெளிவோம்! 85 & 86. அழுக்கு வெருளி & குப்பை வெருளி

 85. அழுக்கு வெருளி – Automysophobia/Mysophobia 86. குப்பை வெருளி-Rupophobia ‘அழுக்கு’ என்பது சங்கக்காலத்திலேயே வழங்கிய சொல். புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் (புறநானூறு : 126:11) என மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடும் பொழுது கபிலர் பற்றிக் குறிக்கின்றார். பின்னர உரைகளிலும் இன்றளவில் மக்கள் வழக்கிலும் அழுக்கு, அப்பழுக்கு என்பன இடம் பெறுகின்றன. தூய்மையின்மை அல்லது துப்புரவின்மையால் -அஃதாவது அழுக்கினால் – ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அழுக்கு வெருளி-Automysophobia/Mysophobia அழுக்கின் பிறப்பிடங்களில் ஒன்றாகிய குப்பை பற்றிய பேரச்சம் குப்பை…

கலைச்சொல் தெளிவோம்! 84. அழிவுவெருளி-Atephobia

 84. அழிவுவெருளி-Atephobia  அழி(74), அழிக்குநர்(1), அழிக்கும்(6), அழித்த(8), அழித்தரும்(1), அழித்தலின்(2), அழித்தான்(1), அழித்து(15), அழிதக்கன்று(2), அழிதக்காள்(1), அழிதக(6), அழிதகவு(1), அழிதரு(2), அழிந்த(14), அழிந்தன்று(1), அழிந்தனள்(1), அழிந்து(37), அழிந்தோர்(3), அழிப்ப(3), அழிப்படுத்த(1), அழிபவள் (1), அழிபு(4), அழிய(26), அழியர்(1), அழியல்(2), அழியலன்(1), அழியா(3), அழியாதி(1), அழியாது(1), அழியின்(1), அழியுநர்(1), அழியும்(4), அழிவது(3), அழிவல்(1), அழிவு(14), அழீஇ(1) ஆகிய சொற்கள் அழிவு தொடர்பாகச் சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.  மனையியலில் destroy அழி, நிலைகுலை, தகர எனவும், பொறிநுட்பவியலில் destroyer அழிகலன் எனவும் பயன்படுத்துகின்றனர். எனினும் அழிவு பற்றிய…

கலைச்சொல் தெளிவோம்! 80-83 கூர்மை தொடர்பான வெருளிகள்

80-83  கூர்மை தொடர்பான வெருளிகள்  கூர் (109), கூர்த்த (1), நுனி (1) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. முனை என்பது போர்க்களப் பகுதியைக் குறிக்கின்றது. நுனை (17) கூரிய முனையைக் குறிக்கின்றது. அயில்(9) கூர்மையையும், கூர்மையாக உள்ள வேலையும் குறிக்கின்றது. வை (49) என்னும் சொல் கூர்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. கூர்முனையைக் குறிக்க வைந்நுதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஊசி அல்லது கூரிய முனை உடைய பொருள்களைப் பார்த்தால் ஏற்படும் இயல்பிற்கு மீறிய பேரச்சம் அயில்/ ஊசி வெருளி-Enetophobia கூர்…

கலைச்சொல் தெளிவோம்! 79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia

79. அயலார் வெருளி-Xenophobia/Zenophobia அயலார் + வெருளி அயல்(27), அயலிலாட்டி(3), அயலிற்பெண்டிர்(1), அயலார்(2), அயலோர்(3), அயல(9), அயலது(25) ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களி்ல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அயலாரைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய அயலார் வெருளி-Xenophobia/Zenophobia – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 78.வெருளி-phobia

78.வெருளி-phobia அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்  ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, போபியா(phobia) எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத பொழுதும் விடாப்பிடியான அல்லது இயல்பிற்கு மீறிய அல்லது பகுத்தறிவிற்கு முரணான அச்சம் ஏற்படுவதையே இது…

கலைச்சொல் தெளிவோம்! 77. கொண்மூ-Cirrus

77. கொண்மூ-Cirrus  கொண்மூ ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ (புறநானூறு : 35.17) நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி, (குறிஞ்சிப்பாட்டு : 50) மா மலை அணைந்த கொண்மூப் போலவும், (பட்டினப்பாலை : 95) இமிழ் பெயல்தலைஇய இனப்பலக் கொண்மூ (அகநானூறு : 68.15) பெய்துவறி தாகிய பொங்குசெலற் கொண்மூ (அகநானூறு : 125.9) உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல (கலித்தொகை : 104.16) முதலிய அடிகளில் வருவதுபோல் 17 இடங்களில் கொண்மூ குறிக்கப்படுகிறது. முதலில் இச்சொல் பொதுவான பெயராக…

கலைச்சொல் தெளிவோம்! 76. கணம்-Cirrostratus

 76. கணம்-Cirrostratus   கணம் அடுத்த அடுக்கில் 8000 பேரடி(மீட்டர்) உயரத்தில் கூட்டம் கூட்டமாக உள்ள குவியடுக்கு முகிலின் பெயர் கணம். மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் (புறநானூறு : 131.1) அமிழ்துதிகழ் கருவிய கணமழை தலைஇக் (பதிற்றுப்பத்து : 17.11) இவ்வாறு இடி, மின்னல் இணைந்த மழை முகிலைக் கணம் எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. இதனையே சிர்ரோசுதிரட்டசு/Cirrostratus எனக் குறிப்பிடுகின்றனர். கணம்-Cirrostratus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 75. செல்-Cirrocumulus

 75. செல்-Cirrocumulus   செல்   செல்(117) என்பதற்கு உள்ள சில பொருள்களில் ஒன்று முகில் என்பதாகும். “வான்முழக்குச் செல்” (பரிபாடல் 13.44) என்னும் பொழுது இடி முழக்கத்துடன் இணைந்த மழைமுகிலைக் குறிப்பிடுகின்றது. இத்தகைய தன்மை உடைய 7000 பேரடி (மீட்டர்) உயரத்தில் உள்ள சுருள்குவிவு முகில் சிர்ரோகியூமுலசு/Cirrocumulus எனப்படுகின்றது. செல்-Cirrocumulus – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைச்சொல் தெளிவோம்! 74. மை-Altostratus

 74. மை-Altostratus  மை 6000 பேரடி(மீட்டர்) உயரத்தில் உள்ள இடைஅடுக்கு முகிலே மை என்பது. மை(110) எனில், கருநிறம், வண்டி மை, பசுமை, குற்றம் என்பன போன்று பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முகில் என்பது. மைபடு சென்னி (கலித். 43), “மைபடு மால்வரை”(நற்றிணை : 373:3. ) “மைபடு சிலம்பின்” (குறுந். 371 & பரிபாடல் : 16:2) “மைபடு குடுமிய குலவரை” (பரிபாடல் : 15:9-10) என்னுமிடங்களில், ‘மை’ மலைகளில் தவழும் முகிலைக் குறிக்கின்றது. மழைக் கருக்கொண்டபின் கருமையாய் அமையும்…

கலைச்சொல் தெளிவோம்! 73. கார்-Altrocumulus

 73. கார்-Altrocumulus   கார் கடல் முகந்து வந்தன்று, கார்! (முல்லைப்பாட்டு : வெண்பா 2) காரும் ஆர்கலி தலையின்று. தேரும் (அகநானூறு : 54.3) கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப் (குறுந்தொகை : 162.1) தளி தரு தண் கார் தலைஇ (நற்றிணை : 316.9) கார்கலித்து அலைப்ப (ஐங்குறுநூறு : 496.2) என்பன போல் சங்க இலக்கியத்தில் 139 இடங்களில் வந்திருந்தாலும் கார் முகிலையும் கார் பருவத்தையும் இச் சொல் குறிக்கின்றது. 5000 பேரடி(மீட்டர்) உயரத்தில் மழை பெய்யும் நிலையில்…

கலைச்சொல் தெளிவோம்! 72. விண்டு-Stratocumulus

72. விண்டு-Stratocumulus விண்டு   விண்டு சங்க இலக்கியத்தில் 8 இடங்களில் பயன்படுத்தப் பெற்றுள்ளது. எனினும் மலையைத்தான் குறிக்கிறது. ஆனால், விண்டுச் சேர்ந்த வெண்மழை போல (பதிற்றுப்பத்து 55.15) விண்டு முன்னிய புயல்(பதிற்றுப்பத்து (84.22) என்பன போல், பெரும்பாலும் மழை முகிலோடு தொடர்பு படுத்தியே விண்டு குறிக்கப்பெறுகின்றது. பிங்கல நிகண்டு விண்டு என்பதன் ஒரு பொருளாக முகிலையும் குறிக்கின்றது.   விண்டு ஆகிய மலையில் குவியும் முகில் பின்னர் விண்டு என்றே அழைக்கப் பெற்றிருக்க வேண்டும். எனவே, சங்க இலக்கியங்களில் பயன்பெற்ற சொல் என்ற…