திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்
‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ – புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி ஆய்வுரை இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட திருக்குறள் உலகப் பொதுநூலாக அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 5/6 ‘கல்வி’ க்கான விளக்கம் ‘கல்வி’ என்னும் அதிகாரத்தை விளக்கும் பொழுது தாய்மொழிவாயிலான கல்வியையே பெரும்பேராசிரியர் விளக்குவது வேறு யாரும் தெரிவிக்காத ஒன்றாகும். அவரின் விளக்கம் வருமாறு: “கற்றற்குரிய நூல்களைக் கற்றல் கல்வியாம். இங்குக் கல்வியென்பது தாய்மொழி வாயிலாகக் கற்பதுதான். மக்கள் ஆட்சி நன்கு நடைபெற மக்கள் எல்லாரும் கல்வி கற்றவர் ஆக வேண்டுமென்றால் அவர்கள் தம் தாய்மொழியில் கற்றலைத்தான் குறிக்குமேயன்றி வேற்று…
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை உலகம் உய்ய வழிகாட்டியிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவரது திருக்குறள் உலக வாழ்வியல் நூலாகவும் மனித குலத்திற்கு வழிகாட்டிக் கைந்நூலாகவும் திகழ்ந்து வருகிறது. திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை நம் மனித குலத்திற்கு மிகவும் இன்றியமையாததாக உள்ள கடவுளைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே வழிகாட்டுகின்றது. இதில் என்ன வியப்பென்றால், திருவள்ளுவர் காலத்தில் பல தெய்வ வழிபாட்டு முறைகள் தோன்றிவிட்டபோதிலும் திருவள்ளுவர் ஒரே கடவுள் கொள்கையை வலியுறுத்தியிருப்பதுதான். முதலதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ எனும் இறை வாழ்த்து அதிகாரத்தில் இறைவனது…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன்-குறளேந்தி ந.சேகர்
திருவள்ளுவரின் உயிரியல் பார்வைத் திறன் தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியச் செல்வங்களுள் தலை சிறந்தது திருக்குறள். தமிழரே அல்லாமல் அயலவரும் உரிமை பாராட்டிப் பயன் எய்துதற்கு மிக்க துணையாவது இந்நூல். தான் தோன்றிய நாள் முதல் தலைமுறை தலைமுறையாக எத்தனையோ நாட்டவரும், மரபினரும், மொழியினரும், சமயத்தினரும் நுகர்ந்து பயன் பெறுமாறு செய்தும் அழியாச் செல்வமாகத் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். இது சான்றாண்மை நிறைந்த அரும் பெரும் புலவர் பெருமானார் என உலகில் உள்ள எல்லா மொழிப் புலவர்களாலும் சிறப்பித்துப் பாராட்டப்பெறும்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6 உரைநயம் உணர்த்தும் உரை வளம் இலக்குவனார், இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார். பேராசிரியரின்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 : செ. இரவிசங்கர்
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறள் உரைச் சிறப்பு 1/2 தொடர்ச்சி) திருக்குறள் உரைச் சிறப்பு 2/2 சுருக்கம்: ‘சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் ’ என்பது போல திருக்குறளுக்கான உரையை மிகச் சுருக்கமாகச் சொல்லி புரிய வைத்துள்ளபணியை இலக்குவனார் மிகத் தெளிவாகச் செய்துள்ளார். இலக்குவனார் சுருக்கமாக உரை யெழுதக் காரணம் யாது? “ஓரளவு படிப்பறி வுடையோரும் புரிந்துகொள்ளும் வகையில் திருக்குறள் எளிய பொழிப்புரை எழுதினார்” என்று மறைமலை கூறுகிறார். எனவேதான் சுருக்கமான கருத்தை எழுதியுள்ளார் எனலாம். திருக்குறளில் அதிகாரத்திற்கு அமைந்துள்ள தலைப்பை உரையாசிரியர்கள் விளக்க…
திருக்குறள் அறுசொல் உரை 108. கயமை : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 107. இரவு அச்சம் தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 108. கயமை மானுட அறங்களைப் பின்பற்றாத கீழ்மை மக்களது இழிதன்மை. மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்ட(து) இல். மக்கள்போல், தோன்றும் கயவரோடு ஒப்பாவார், எவரும் இலர். நன்(று)அறி வாரின், கயவர் திருஉடையார்; நெஞ்சத்(து) அவலம் இலர். நல்லாரைவிடக் கீழோர் பேறுஉடையார்; ஏன்எனில், கீழோர் கவலைப்படார். தேவர் அனையர் கயவர்,…
திருக்குறள் அறுசொல் உரை 107. இரவு அச்சம் : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 106. இரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 107. இரவு அச்சம் உழைக்கும் திறத்தர், மானத்தர், பிச்சை எடுக்க அஞ்சுதல். கரவா(து), உவந்(து)ஈயும், கண்அன்னார் கண்ணும், இரவாமை கோடி உறும். மறைக்காது, மகிழ்ந்து கொடுப்பாரிடமும், பெறாமை கோடிப் பெருமை. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக, உல(கு)இயற்றி யான் பிச்சையால்தான் வாழ்வுஎன்றால், ஆட்சியான், அலைந்து திரிந்து கெடட்டும். “இன்மை இடும்பை, இரந்து,தீர் வாம்”என்னும்…
திருக்குறள் அறுசொல் உரை 106. இரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 105. நல்குரவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 106. இரவு உழைப்புத் திறன்இல்லார், பொதுநல உதவியாளர் கேட்டுப் பெறலாம். இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின், அவர்பழி தம்பழி அன்று. தகுதியாரிடம் உதவி கேட்க; மறைத்தால், மறைத்தார்க்கே, பழி. இன்பம் ஒருவற்(கு) இரத்தல், இரந்தவை துன்பம் உறாஅ வரின். துன்பம் இல்லாமல் வருமானால், கேட்டுப் பெறுதலும் இன்பம்தான். கரப்(பு)இலா நெஞ்சின் கடன்அறிவார்…
திருக்குறள் அறுசொல் உரை 105. நல்குரவு : வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின் இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது. இன்மை எனஒரு பாவி, மறுமையும், இன்மையும் இன்றி வரும். வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும். தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக, …