திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 033. கொல்லாமை

(அதிகாரம் 032. இன்னா செய்யாமை தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 033. கொல்லாமை எவ்உயிரையும் கொல்லாது, எல்லா உயிர்களையும் காப்பாற்றும் கொள்கை   அறவினை யா(து)?எனின், கொல்லாமை; கோறல்,      பிறவினை எல்லாம் தரும்.   கொல்லாமையே அறச்செயல்; கொல்லுதல்,        எல்லாத் தீமைகளையும் நல்கும்.   பகுத்(து)உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.          பகுத்[து]உண்டு, பல்உயிர்களைக் காத்தல்,        அறங்களுள் தலைமை அறம்.   ஒன்(று)ஆக நல்லது, கொல்லாமை; மற்(று),அதன்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 032. இன்னா செய்யாமை

(அதிகாரம் 031. வெகுளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல்   அதிகாரம் 032. இன்னா செய்யாமை   என்றும் எதற்காகவும் எங்கும் எவர்க்கும் எத்துயரும் செய்யாமை.   சிறப்(பு)ஈனும், செல்வம் பெறினும், பிறர்க்(கு)இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.          சிறப்பு தருசெல்வம் பெறுவதற்காக,          எவர்க்கும் எத்தீமையும் செய்யாதே.   கறுத்(து),இன்னா செய்தவக் கண்ணும், மறுத்(து),இன்னா      செய்யாமை, மா(சு)அற்றார் கோள்.           துன்பத்தைத் தந்தார்க்கும் துன்பத்தைத்        தராமையே தூயார்தம் கொள்கை.   செய்யாமல், செற்றார்க்கும், இன்னாத…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 031. வெகுளாமை

(அதிகாரம் 030. வாய்மை தொடர்ச்சி) 01. அறத்துப் பால்  03. துறவற இயல்   அதிகாரம் 031. வெகுளாமை எப்போதும், எவரிடத்தும், எதற்காகவும், சினமோ, சீற்றமோ கொள்ளாமை.     செல்இடத்துக் காப்பான், சினம்காப்பான்; அல்இடத்துக்      காக்கின்என்? காவாக்கால் என்?       செல்இடத்தில் சினம்அடக்கு; செல்லா        இடத்தில் அடக்கு; அடக்காமல்போ.   செல்லா இடத்தும் சினம்தீ(து); செல்இடத்தும்      இல்,அதனின் தீய பிற.     செல்இடத்தும், செல்லா இடத்தும்,        சினத்தலைவிடத், தீயது வே[று]இல்லை.   மறத்தல் வெகுளியை, யார்மாட்டும்;…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 030. வாய்மை

(அதிகாரம் 029. கள்ளாமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 030. வாய்மை       தீமை இல்லாதவற்றைச் சொல்லலும், பொய்த்தல் இல்லாது வாழ்தலும்.   வாய்மை எனப்படுவ(து) யா(து)?எனின், யா(து)ஒன்றும்,      தீமை இலாத சொலல்.            எச்சிறு அளவிலேனும், தீமை          இல்லாதன சொல்லலே வாய்மை.   பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த      நன்மை பயக்கும் எனின்.        யார்க்கும் குற்றம்இலா நன்மையான          பொய்யும், வாய்மையின் இடத்தது.   தன்நெஞ்(சு) அறிவது, பொய்யற்க; பொய்த்தபின்,…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 029. கள்ளாமை

(அதிகாரம் 028. கூடா ஒழுக்கம் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 03. துறவற இயல் அதிகாரம் 029. கள்ளாமை உள்ளத்தாலும், பிறரது பொருள்களை எள்அளவும் திருட எண்ணாமை.   எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்(து)ஒன்றும்,      கள்ளாமை காக்க,தன் நெஞ்சு.     இகழ்ச்சியை விரும்பாதான், எந்த        ஒன்றையும் திருட எண்ணான்.   உள்ளத்தால் உள்ளலும் தீதே, “பிறன்பொருளைக்,    கள்ளத்தால் கள்வேம்” எனல்.          “பிறரது பொருளைத் திருடுவோம்”        என்று, நினைப்பதும் திருட்டே..   களவினால் ஆகிய…

முதல்நூலும் முதல்வனும் – திருக்குறளார் வீ.முனுசாமி

1. மனத்துக்கண் மாசிலன் ஆதல் ‘அனைத்தறன்’ ஆகுல நீர பிற. 2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான். 3. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.   உலகின் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ள நூல்களுக்கெல்லாம் முதன்மையாக இருப்பது திருவள்ளுவர் அருளிய திருக்குறளாகும். காலத்தினால் சொல்லுவதென்பதல்லாமல், கருத்தினாலும் சொல்லப்படுவதாகின்றது.   உலகில் காணப்படுகின்ற நூல்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையினையே கருத்துட்கொண்டு எழுதப்பட்டுள்ளன. தெய்வீகம், பொருளாதாரம், அரசியல், காதல் வாழ்க்கை, இல்லறம், துறவறம் இவ்வாறாக ஒவ்வொன்றில் நின்று எழுந்த…