தமிழ்நாடும் மொழியும் 21: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 20 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 21 பிற்காலச் சோழர் வரலாறு தொடர்ச்சி ஆதித்த கரிகாலன் இறந்த பின்பு கண்டராதித்தனின் மகனான உத்தமசோழன் அரசேற்று கி. பி. 985 வரை ஆண் டான். உத்தம சோழன் காலத்தில் ஆதித்த கரிகாலனின் உடன்பிறந்தவனாகிய இராசராசன் இளவரசனாக இருந்தான். சோழப் பேரரசில் வீணாகக் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்படாமல் இருக்க இராசராசன் உத்தம சோழனையே அரசனாக இருக்குமாறு வேண்டிக் கொண்டான். சோழப் பேரரசர்களுள் தங்க நாணயங்களை முதன் முதல் வெளியிட்ட பெருமை உத்தம சோழனையே சாரும். முதல்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 6/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-5/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 6/6 தொல்காப்பியப் பொருட்படலமும் புதிய உரையும் தொல்காப்பியத்துக்கு உரை எழுதியோர் பலர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணாக்கர்க்குத் தொல்காப்பியப் பாடம் சொல்லி வருங்கால் சிற்சில இடங்களில் உரையாசிரியர்கள் தமிழ் மரபுக்கும் தொல்காப்பியர் கருத்துக்கும் மாறுபட்டு உரை எழுதியிருப்பதைக் கண்டார். இலக்கணக் கடல் சோழவந்தான் அரசஞ் சண்முகனாரோடும், இருமொழிப் புலமைப் பெருமழைப் புலவர் பண்டிதமணியுடனும் தம் கருத்துகளைக் கலந்து பேசி இறுதியாக, தொல் காப்பியம்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 23

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ –22  தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’   இனி இயற்பெயரால் அறியப்பட்டுள்ள புலவர்களையும் அவர்கள் இயற்றியவற்றுள் நமக்குக் கிடைத்துள்ள பாடல் தொகைகளையும் காண்போம்.     புலவர் பெயர்                               பாடல் தொகை    1.  அகம்பல்பாலாதனார்                      1    2.  அஞ்சியத்தை மகள் நாகையார்             1    3.  அஞ்சில் அஞ்சியார்                                   1    4.  அண்டர் மகன் குறுவழுதியார்                2    5.  அதியன் விண்ணத்தனார்                         1    6.  அந்தில் இளங்கீரனார்                     1   …

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 18. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):19  கிடங்கில்      அகழி சூழ்ந்த கோட்டையைக் கிடங்கில் என்றும் கூறுவதுண்டு. முன்னாளில் கிடங்கில் என்னும் பெயருடைய கோட்டையின் தலைவனாகவும், கொடை வள்ளலாகவும் விளங்கிய நல்லியக்கோடன்  என்ற சிற்றரசனது பெருமையைச் சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது. அவன் காலத்தில் அவ்வூர், கோட்டை மதில்களாலும், அகழிகளாலும் நன்றாக அரண்செய்யப்பட்டிருந்தது. இன்றும் அங்குக் காணப்படும் சிதைந்த சுவர்களும் தூர்ந்த கிடங்குகளும் அதன் பழம் பெருமையை அறிவிக்கின்றன. கிடங்கால் என்னும் பெயர் கொண்டு வழங்கும் அவ்வூருக்கு அண்மையில் திண்டிவனம் இப்போது சிறந்து…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 85

(குறிஞ்சி மலர்  84 தொடர்ச்சி) குறிஞ்சி மலர், அத்தியாயம் 30 அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும். சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் பசுமண்கலத்துள் நீர்பெய்து இரீஇ யற்று.      — திருவள்ளுவர் மதுரைக்கே ஒரு புதிய சுறுசுறுப்புக் களை உண்டாகியிருந்தது. நகரம் முழுவதும் ஏதோ பெரிய போருக்குத் தயாராகிற மாதிரித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. பழைய காலத்து அரசியல் வெள்ளாற்றுப் போர், தலையாலங்கானத்துப் போர் என்றெல்லாம் போர்கள் நடந்த மாதிரி அடிக்கடி போர்கள் ஏற்பட இன்றைய அரசியலில் வாய்ப்பும் இல்லை;…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 585-596

( தமிழ்ச்சொல்லாக்கம் 581-584 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 585- 596 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 585. பிரமாணம்    –           உறுதி 586. சிருட்டித்தல் –           பிறப்பித்தல் 587. நியதி   –           கட்டளை 588. பரிவாரம்       –          …

உ.வே.சா.வின் என் சரித்திரம் 21

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 20  தொடர்ச்சி) என் சரித்திரம் அத்தியாயம் 12 தொடர்ச்சி அரியிலூர் ஞாபகங்கள் இங்குள்ள விட்ணு கோயில் பெரியது. பெருமாளுக்கு வேங்கடேசப் பெருமா ளென்பது திருநாமம். கோயிலின் மகா மண்டபத்தில் மகா விட்ணுவின் பத்து அவதாரங்களின் திருவுருவங்களும் தூண்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் அம்மண்டபத்திற்குத் தசாவதார மண்டபமென்ற பெயர் வழங்குகின்றது. அங்கே மூர்த்திகளெல்லாம் மிக அழகாக அமைந்திருக்கின்றன. இங்கே ஒரு சிவாலயமும் இருக்கிறது. சிவபெருமானுக்கு ஆலந்துறை ஈசரென்றும் அம்பிகைக்கு அருந்தவநாயகி யென்றும் திருநாமங்கள்  வழங்குகின்றன. சமீன்தார்கள் குலதெய்வமாகிய ஒப்பிலாதவளென்னும் துருக்கையின் கோயிலும், காமாட்சியம்மன் கோயில், விசுவநாதசுவாமி…

தமிழ்நாடும் மொழியும் 20: பிற்காலச் சோழர் வரலாறு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 19 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 20 6. பிற்காலச் சோழர் வரலாறு சோழர் எழுச்சி சங்கக்காலத்தில் சீரும் சிறப்பும் கொண்டு விளங்கிய சோழர்கள் பிற்காலத்தில் பல்லவர்க்குக் கீழ்க் குறுநில மன்னர்களாகவும் அதிகாரிகளாகவும் வாழ நேரிட்டது. பல்லவர் காலத்தில் இவ்வாறு அழிந்த சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்திலே மறுபடியும் தம் பண்டைச் சிறப்பை நிலை நாட்டக் கிளர்ந்து எழலானார்கள். பிற்காலச் சோழப்பேரரசை நிறுவியவன் விசயாலயன் என்பவனாவான். பிற்காலச் சோழர்க்குத் தலைநகர் தஞ்சை மாநகராகும். விசயாலயன் காலம் கி. பி. 850-71 என்பதாகும். பல்லவர்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 5/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-4/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 5/6 இந்நூற் கருத்துகளுடன், தாம் ஆராய்ந்த வேறு சில கருத்துகளையும் சேர்த்து ‘பண்டைச் சேரரைப் பற்றிய சில ஆராய்ச்சிகள்’ (Some Studies about the Cheras of yore) என்னும் தலைப்பிட்டு ஆங்கில நூல் ஒன்றும் எழுதி நாவலர் பாரதியார் வெளியிட்டார். சேரர் தாய முறை சேரர் தலைநகரான வஞ்சி குறித்துத் தமிழறிஞர் பெரு மக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவன போன்றே, சேரர்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 6. பழந்தமிழ் இலக்கியம்   மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18

(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 17. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):18   வெளி      வெளி என்னும் சொல் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கின்றது. நாகபட்டினத்துக்கு அருகே வடக்குவெளி என்னும் ஊர் உண்டு. சங்ககாலத்துப் புலவரில் இருவர், வெளி என்னும் பெயருடைய ஊர்களில் பிறந்ததாகத் தெரிகின்றது. எருமை வெளியனார் என்பது ஒருவர் பெயர். வீரை வெளியனார் என்பது மற்றொருவர் பெயர். அவ் விருவரும் முறையே எருமை வெளியிலும், வீரை வெளியிலும் பிறந்தவ ரென்பது வெளிப்படை. அரணும் அமர்க்களமும்      தமிழகத்தில் முன்னாளில் கோட்டை கொத்தளங்கள்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 84

(குறிஞ்சி மலர்  83 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  29 தொடர்ச்சி மணிமேகலையைப் பற்றி எண்ணியபோது உடன் வந்திருப்பவர்களையெல்லாம் எங்காவது விலக்கித் துரத்தி விட்டுத் தனியாக அந்தத் தீவின் மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கொந்தளிப்பின்றி அடங்கிக் கிடக்கும் கடலைப் பார்த்தவாறே தன் முகமாகத் தனக்குள்ளே நினைவுகளில் ஆழ்ந்து மௌனமாக அழவேண்டும் போலப் பைத்தியக்காரத்தனமானதொரு ஆசையும் அவளுக்கு உண்டாயிற்று. விலை மதிப்பற்றனவும், மீட்டு எடுக்க முடியாதனவுமாகிய பழைய பொற்காலத்தின் அழகிய நினைவுகள் அந்தக் கடற்கரைப் பகுதிகள் எங்கும் ஒளிந்திருப்பதை அவள் உணர்ந்தாள். மாலையில் அவர்கள் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள்….