முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! – இலக்குவனார்திருவள்ளுவன்

முதல்வர் மு.க.தாலின் மொழிக் கொள்கையிலும் இந்தியாவிற்கு வழி காட்ட வேண்டும்! நரேந்திரர், அமித்து சா, ஒன்றிய அரசு வெளிப்படுத்தும் இந்தி, சமற்கிருதத் திணிப்பு தொடர்பான பேச்சு, தீர்மானம், நடவடிக்கை முதலியவற்றிற்கு மு.க.தாலின் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமற்கிருதத் திணிப்பிற்கு வழிகோலவே இந்தித்திணிப்பு நடைபெறுவதாகக் கூறி வருகிறார். இவற்றின் மூலம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற நிலைப்பாட்டைக் கொணர்ந்து மக்கள்நாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் நாட்டுத் தொண்டு சங்கம்/ இரா.சே.சங்கத்தின் செயற்திட்டத்தைப் பாசக நிறைவேற்றி வருவதாகவும் குற்றம் சாட்டி வருகிறார். அண்மையில் வானொலியில்…

புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

புதிய கல்வித்திட்டத்தில் மொழிக் கொள்கை : அரசு தடம் புரள்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன் பொதுவாகத் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எதிர் நிலையில் செயற்பட்டாலும் இந்தி எதிர்ப்பு, மும்மொழித்திட்ட எதிர்ப்பு, தமிழ் முழக்கம், தமிழ் நலத்திட்டங்கள், ஆட்சித்தமிழை வலியுறுத்தல் போன்றவற்றில் செய்வனவற்றிலும் செய்யத் தவறுவனவற்றிலும் ஒற்றுமை உண்டு. ஆட்சி மாறினாலும் அரசு மாறாது என்பதற்கு இவர்களின் இவை தொடர்பான கொள்கைகளே சான்றாகும். இரு கட்சிகளின் அரசுகளுமே  அனைத்து வகுப்புகளிலும் தமிழ் கற்பிக்கப்பட வெவ்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளன, இப்போதும் ஆளும் அரசு எடுத்து வருகிறது. தமிழ் மக்கள்…

நமக்குரிய மொழிக் கொள்கை – சி.இலக்குவனார்

நமக்குரிய மொழிக் கொள்கை            உரிமைநாட்டில் அந்நாட்டு மொழியே அந்நாட்டு மக்கள் கருத்தை அறிவிக்கும் கருவியாகப் பயன்படும். செருமன் நாட்டையோ ஆங்கில நாட்டையோ எடுத்துக் கொண்டால் அந்நாடுகளில் அந்நாட்டு மொழிகள்தாம் எல்லாவற்றுக்கும் என்பது யாவரும் அறிவர். ஆட்சித்துறை,  அரசியல் துறை, கல்வித்துறை, சமயத்துறை, பண்பாட்டுத்துறை முதலிய யாவற்றுக்கும் அந்நாட்டு மொழி ஒன்றேதான். ஆகவே தேசியமொழி, ஆட்சிமொழி, தொடர்பு மொழி, கல்விமொழி சமயமொழி, எல்லாம் ஒரே மொழிதான். ஆனால் இங்கு நமக்கோ தேசியமொழி, சமயமொழி, எல்லாம் வெவ்வேறாக அமைகின்றன.             தேசியமொழி இந்தியாம், ஆட்சிமொழி…