திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்
திருவள்ளுவர் நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது:
“உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம், மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது.
அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்வியல் நெறிமுறைகளை விளக்கும் திருக்குறளை, தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை எழுந்துள்ளது. அந்த அடிப்படையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவேன். “
இவ்வாறு அமைச்சர் வாசன் பேசினார்.
Leave a Reply