கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்!   நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…

எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!

எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது!   தங்கள் ஆசைகளை மக்கள் கருத்துகளாகவும் கட்சித் தொண்டர்கள்  அல்லது பொறுப்பாளர்கள் கருத்துகளாகவும் கதைவிடும் இதழ்களில்,  செயலலிதா, எசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு  மாநிலங்களவை உறுப்பினர் பதவி தந்து,  வாசனுக்குப் புத்தி புகட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 அகவை முதியவரான எசு.ஆர்.பாலசுப்பிரமணிம்போல் பதவி ஆசை கொள்ளாமல் கட்சி நலன் கருதுபவர் என இதன் மூலம் வாசனுக்குப் பெருமைதான் சேர்ந்துள்ளது.  காங்கிரசு அல்லது தமாகா வில் இருந்துகொண்டே அதிமுகவாக நடந்து கொண்ட எசு.ஆர்.பாலசுப்பிரமணியம் அக்கட்சியில் சேர்ந்ததே நல்லது. ஆனால், முதலில் அக்கட்சியில்…

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்

முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி     வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா  என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது.   எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…

மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது

மக்கள் நலக்கூட்டணியின் வலு கூடுகிறது தே.தி.மு.க.-மக்கள் நலக்கூட்டணியில்  வாசனின் தலைமையில் இயங்கும் தமிழ் மாநிலக் காங்கிரசு இணைந்துள்ளது.  தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 20 தொகுதிகளைத் தே.மு.தி.க.வும் 3 தொகுதிகளை ம.தி.மு.க.வும் ஒவ்வொரு தொகுதியைப் பிற 3 கட்சிகளும் என 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இதனால் போட்டியிடும் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை பின்வருமாறு உடன்பாட்டிற்கு வந்துள்ளது : தே.மு.தி.க. – 104 தொகுதிகள் ம.தி.மு.க. – 29 தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் – 25 தொகுதிகள் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி – 25 தொகுதிகள் இந்தியப…

வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

  வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன்     ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.   தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது…

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்துவேன் – வாசன்

திருவள்ளுவர்  நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் புகழ்பாடும் தமிழ் இசை நிகழ்ச்சி புதன்கிழமை (தை 2, 2045/ சனவரி 15.2014) நடந்தது. இதில் 133 தமிழ் இசைவாணர்க்ள பங்கேற்று, இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: “உலகப் பொதுமறையான திருக்குறள், உலகின் புனித நூல்களான குர் ஆன் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்ட நூலாகும். அதனால்தான் இனம்,  மொழிகளைத் தாண்டி உலகப் பொதுமறையாகத் திருக்குறள் விளங்குகிறது. அனைத்து நாட்டு…

கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதா? மத்திய அமைச்சர் வாசன் கடுஞ்சினம்!

சென்னை, தண்டையார்பேட்டை, துறைமுகக் குடியிருப்பில், முன்னாள் துணைத் தலைமையாளர் பாபு செகசீவன்இராம் சிலை திறப்பு விழா  சனவரி 12,2014 அன்று   நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்தியக் கப்பல் துறை அமைச்சர், வாசன், இந்தியச் சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்’ என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது  நல்லிணக்கப் பேச்சிற்கு  உகந்ததல்ல என்றும்   கச்சத்தீவை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்  ஆர்ப்பரிப்புடன் கூறினார். ஆனால், மத்திய அரசு சிங்கள மீனவர்களை விடுவித்துள்ளது. கச்சத்தீவிலும் எதிரான நிலைப்பாடுதான் உள்ளது. வாசன் தனிக்கட்சிக்குப் பாதை வகுப்பதற்காக…

சேதுத்திட்டம்: தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல – வாசன்

சேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல – மத்திய அமைச்சர் வாசன்  தூத்துக்குடி: “சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் அளித்த  உறுதியுரை ஆவணம் சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.  மேலும்,.  இது  நாட்டின்ம் தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த  காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.