திருக்குறள் அறுசொல் உரை: 127. அவர்வயின் விதும்பல்: வெ. அரங்கராசன்
(திருக்குறள் அறுசொல் உரை : 126. நிறை அழிதல் தொடர்ச்சி)
3. காமத்துப் பால்
15. கற்பு இயல்
127. அவர்வயின் விதும்பல்
பிரிவுக் காலத்தில் ஒருவரை
ஒருவரைக் காணத் துடித்தல்.
(01-08 தலைவி சொல்லியவை)
- வாள்அற்றுப், புற்(கு)என்ற கண்ணும்; அவர்சென்ற,
நாள்ஒற்றித் தேய்ந்த விரல்.
எதிர்பார்த்துக், கண்கள் ஒளிஇழந்தன.
நாள்எண்ணி, விரல்கள் தேய்ந்தன.
- இலங்(கு)இழாய்! இன்று மறப்பின்,என் தோள்மேல்
கலம்கழியும், காரிகை நீத்து.
தோழியே! காதலை மறந்தால்,
தோள்கள் மெலியும்; வளைகழலும்.
- உரன்நசைஇ, உள்ளம் துணையாகச் சென்றார்,
வரன்நசைஇ, இன்னும் உளேன்.
அறிவுபெறச் சென்றார் வரவினை
விரும்பியே, இன்னும் உள்ளேன்,
- கூடிய காமம் பிரிந்தார் வர(வு)உள்ளிக்
கோடுகொடு ஏறும்என் நெஞ்சு.
கூடிப் பிரிந்தாரது வரவை
நெஞ்சம் கிளைதோறும் ஏறிப்பார்க்கும்.
- காண்கமன், கொண்கனைக் கண்ஆரக்; கண்டபின்,
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
காதலரைக் கண்ஆரக் கண்டபின்தான்,
தோள்களின் நிறமாற்றம் நீங்கும்.
- வருகமன் கொண்கன், ஒருநாள்; பருகுவன்,
பைதல்நோய் எல்லாம் கெட.
காதலர் வரட்டும்; பிரிவுத்துயர்
எல்லாம் கெடும்படி இன்புறுவேன்.
- புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?
கண்அன்ன கேளிர் வரின்.
கண்போன்ற தலைவர் வந்தால்,
ஊடுவேனா? தழுவுவேனா? கூடுவேனா?
(08 தலைவன் சொல்லியது)
1268.வினைகலந்து, வென்(று)ஈக வேந்தன்; மனைகலந்து,
மாலை அயர்கம் விருந்து.
மன்னன் வென்றபின் இல்சென்று,
மனைவியோடு கூடி விருந்திடுவேன்.
(09-10 தலைவி சொல்லியவை)
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும், சேண்சென்றார்,
வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு.
தொலைவில் சென்றாரை எதிர்பார்த்து
ஏங்குவார்க்கு, ஒருநாள் ஏழ்நாள்போல்.
- பெறின்என்ஆம்? பெற்றக்கால் என்ஆம்? உறின்என்ஆம்?
உள்ளம் உடைந்(து)உக்கக் கால
உள்ளம் உடைந்தபின், பிரிந்தார்
வரினும்என்? பெறினும்என்? தழுவினும்என்?
Leave a Reply