திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்
(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி)
01. அறத்துப் பால்
03.துறவற இயல்
அதிகாரம் 027. தவம்
தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை,
தூயநல் அறச்செயல்கள் செய்தல்.
- உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை,
அற்றே, தவத்திற்(கு) உரு.
துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை
தூய தவத்தின் இலக்கணம்.
.
- தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை
அஃ(து)இலார், மேற்கொள் வது.
மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு;
பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு.
- துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி, மறந்தார்கொல்…..?
மற்றை யவர்கள் தவம்.
துறவிகட்கு உதவவே, இல்லறத்தார்.
துறவு வாழ்வைத் துறந்தாரோ….?
- ஒன்னார்த் தெறுதலும், உவந்தாரை ஆக்கலும்,
எண்ணின், தவத்தால் வரும்.
பகையை நீக்கவும், நட்பை
ஆக்கவும், தவத்தால் முடியும்.
- வேண்டிய வேண்டியாங்(கு) எய்தலால், செய்தவம்,
ஈண்டு முயலப் படும்.
வேண்டியதை வேண்டியபடி கொடுக்கும்,
உண்மைத் தவத்தை முயல்க.
- தவம்செய்வார், தம்கருமம் செய்வார்;மற்(று) அல்லார்,
அவம்செய்வார் ஆசையுள் பட்டு.
தவத்தார் கடமையும், தவத்தை
அறியார் வீண்முயற்சியும், செய்வார்.
- சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம்
சுடச்சுட, நோற்கி பவர்க்கு.
சுடச்சுடப், பொன்ஒளிரும்; துன்பத்துள்
படப்படப், தவத்தர், ஞானியர்.
- தன்உயிர், தான்அறப் பெற்றானை, ஏனைய
மன்உயிர் எல்லாம் தொழும்.
உயிர்ப்பற்றை, ஆணவத்தை அறவே
விட்டாரை, உயிர்கள் வணங்கும்.
- கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
தவஆற்றல் பெற்றால், ஆற்றல்மிகு
எமனையும், வெல்லல் கைகூடும்.
- இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார்
சிலர்;பலர் நோலா தவர்.
பொய்த்தவத்தார் பலர்ஆனார்; காரணம்,
மெய்த்தவத்தார் சிலர்ஆனார் என்பதால்.
-பேராசிரியர் வெ. அரங்கராசன்
Leave a Reply