திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 4
(மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)
10.2. இறையனாரதுநிறைபாடல்— 03
- சொல்தொடர்:
என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல்.
- பொருள்உரை
எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள்.
- நுட்பங்கள்
- சொல்: தேன்
தேனின்மருத்துவக்குணங்கள்
- கண்பார்வையைத்தெளிவாக்கும்
- ]இருமலைத்தீர்க்கும
- குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்
- குருதியைத்தூய்மைப்படுத்தும்
- கொழுப்பைக்குறைக்கும்
- இதயத்தின்ஆற்றலைக்கூட்டும்
- தேன்உடல்நோய்களைத்தீர்க்கும்.
- திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து.
- தேன் சுவைக்கச்சுவைக்கத் தெவிட்டும்.
- திருக்குறள் சுவைக்கச் சுவைக்கச் சுவைகள் கூடும்; தெவிட்டாது; இனிக்கும்.
- தேன்மரங்களில், மலைகளின் உச்சிகளில் இருக்கும்.
திருக்குறளும் உச்சியில் இருக்கும் உயர்அறப் பெருநூல்.
- தேன் பருப்பொருள் வடிவ மருந்து.
- திருக்குறள் நுண்பொருள் வடிவ மருந்து..
- தேன்மனநோயைத்தீர்க்காது.
- திருக்குறள்மனநோய்களையும்தீர்க்கும்.
- தேன்இனிக்கும்; நல்ல வண்ணத்தது; இயற்கையாது. .
- திருக்குறள் படிக்கப்படிக்க இனிக்கும்.
பல்வகை ஒலிவண்ணங்களால் நல்லிசை தருவது.
மனிதனுக்குத் தேவையான இயற்கையான / இயல்பான
வழிகளையும், நெறிமுறைகளையும் காட்டுவது.
- சொல்தொடர்: நின்றுஅலர்தல்
- பொருள்உரை
மலர்ந்துநிலைத்துநிற்றல். அதாவதுகூம்பல்இல்லாதது.
- நுட்பம்
- திருக்குறள் அன்று மலர்ந்தது; இன்றும் மலர்ந்த நிலையிலேயே உள்ளது. என்றும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். திருக்குறளும் கூம்பல் இல்லாதது.
- சொல்தொடர்: வள்ளுவன்வாய்ச்சொல்
- நுட்பங்கள்
திருக்குறளைத் திருவள்ளுவர் ஒருவரே செய்திருக்கமுடியாது; பலர் பாடிய குறட்பாக்களைத் திருவள்ளுவர் தொகுத்தார் என்றெல்லாம் சொல்வார்க்கு வள்ளுவன் வாய்ச்சொல் [இறையனார்பாடல் — 03] என்னும் சொல் தொடரில் பதிலின் பதிவு உள்ளது. அதாவது, திருவள்ளுவரது வாயிலிருந்து வந்ததுதான் திருக்குறள் என்பதும், அது தொகுப்புநூல் அன்று என்பதும் அச் சொல்தொடர் நுட்பமாக அறிவிக்கின்றது.
- இக்கருத்தை நுட்பமாவும், நேரடியாகவும், வலியுறுத்தும் திருவள்ளுவமாலைப்பாடல்தொடர்கள்
- வள்ளுவன்வாயது –– நாமகள் பாடல் — 01
- வள்ளுவனார்தாம்அளந்தகுறள் — பொன்முடியார் பாடல் — 14
- வள்ளுவர் வாய்மொழி — மாங்குடிமருதனார் பாடல் — 24
- வள்ளுவர்ஓதியஇன்குறள் — பெருஞ்சித்திரனார் பாடல் — 32
- வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள் — நரிவெரூஉத்தலையார் பாடல் — 33
- வள்ளுவர்வாய்மொழி — செயலூர்க்கொடுங்கண்ணனார் பாடல் — 42
- வள்ளுவனார் ஓதுகுறள் — வண்ணகஞ்சாத்தனார் — பாடல் 43
- வள்ளுவனார் தம்வாயால் கேளாதன எல்லாம் கேட்டு –– கொடிஞாழல்மாணி பூதனார் பாடல் — 50
- வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா —மதுரைப்பாலாசிரியனார்பாடல் — 52
– பேரா.வெ.அரங்கராசன்
(மணக்கும்)
Leave a Reply