காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள் – சி.இலக்குவனார்
காதல் வாழ்விற்கு முதன்மை தந்த பழந்தமிழ் மக்கள்
தமிழ் இலக்கியப் படைப்புகள் அகம், புறம் என இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ள மரபைக் கொண்டுள்ளன. அகம்பற்றிய படைப்புகள் தலைவன் தலைவியின் உளவியல் செயல்பாடுகள் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றன. அவை பெரும்பான்மையும் உளவியல் ஆர்வம் கொண்டுள்ளன. உணர்வுகள் மேலோங்கி இருக்கக்கூடிய ஒடிசி போன்று அவை ஆழமாகத் தனிநிலையாக விளங்குவன. பொதுவாக அகம் காதல் குறித்தும், புறம் இவற்றின் புறநிலைச் செயல்பாடுகள் குறித்தும் கையாளுவதாகச் சொல்லப்படுகிறது . . . . . . . . .
அகமாக இருந்தாலும், புறமாக இருந்தாலும் தமிழ் இலக்கியங்களில் காதலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடமானது பழந்தமிழ் மக்கள் குறிப்பிட இயலாத மனித உணர்வின் உயர்ந்த ஆற்றலை எவ்வாறு அறிந்து ஏற்றுள்ளார்கள் எனக் காட்டுகின்றது. உண்மையிலேயே எந்த மனித உணர்வும் காதலைப்போன்று உலக இலக்கியத்திற்குத் தம் பங்களிப்பை அளித்தது இல்லை; எனவே தமிழ்நாட்டின் தொன்மையான இலக்கியப்படைப்புகளில் இதன் எழிலார்ந்த வெளிப்பாடு மிக்கு இருப்பதில் வியப்பே ஏதும் இல்லை.
மனித உணர்வுகளில் காதல் மிகவும் பண்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஒரு நாட்டின் குடிமையியல், பண்பாட்டையும் அறிய உரைகல்லாகத் திகழ்கிறது. சாதியாலும், சமயத்தாலும் வேறுபட்டு நிற்கும் குமுகாயத்தை (சமுதாயத்தை) ஒன்றிணைப்பதும் காதலின் வலிமையாகும். அக இலக்கியங்கள் காதல் வழக்காறுகள் குறித்து முதன்மையாகக் குறிப்பிடுவதனால் செய்யுட் போக்கில் அவை முன்னதான திறமையான இடத்தைப் பெற்று விளங்குகின்றன.
காதல், ஏன் அகம் என்று அழைக்கப்படுகிறது? நச்சினார்க்கினியர் தன்னுடைய உரையில் பின்வருமாறு இது குறித்து விளக்குகிறார்.
இலக்கணத்தோடு ஒத்துநிற்கக்கூடியது. தொல்காப்பியர் தன் நூலில் குறிப்பிட்டவாறு இத்தகைய போக்கினை தொடக்க தமிழிலக்கியங்களில் நாம் காணலாம்.
– பேராசிரியர் சி.இலக்குவனார் :
தொல்காப்பிய ஆங்கிலமொழிபெயர்ப்பும் திறனாய்வும்
( Tholkappiyam in English with critical studies) : பக்கம் 393-394
தமிழாக்கம்: இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply