அனைவரும் பார்க்க வேண்டிய முள்ளிவாய்க்கால் முற்றம்
– வழக்கறிஞர் இரா.இராசேந்திரன், கரூர்.
தஞ்சை விளார் சாலையில் 2009 மே 17,18,19 நாள்களில் இலங்கை அரசபடையினர் தமிழ்ஈழ முள்ளிவாய்க்காலில் 1,50,000 தமிழர்களை கொன்று ஒழித்த இனஅழிப்பு போரில் உயிர்நீத்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நினைவிடமாக உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் முயற்சியால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றம் கடந்த 8 ஆம் நாள் திறக்கப்பட்டு, 9,10 நாள்களில் பலதுறைசார் பேச்சரங்குகள் நடத்தப்பட்டன. தமிழறிஞர்கள் பலர் பங்கேற்றனர். தமிழ் அன்னை சிலை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பலதுறைகளிலும் தமிழ்ப்பணியாற்றியோரின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பகுதிகளை மற்ற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்தவர் என்பதால் காமராசர் படமும், திராவிடம் பேசியவர் எனபதால் பெரியார் படமும் அங்கு இடம் பெறவில்லை என்று சொல்லப்பட்டது எனக்கு ஏற்புடையதாக இல்லை. மற்றபடி அனைவரும் பார்க்கவேண்டிய இடம்தான் இது..
Leave a Reply