(சட்டச் சொற்கள் விளக்கம் 701-710 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

711. Actus Reus Non Facit Reum Nisi Mens Sit Rea குற்றம் புரியும் நோக்கில் செய்யாத செயல் குற்றமாகாது.

  குற்ற மனமில்லாத வரை செயல் ஒருவரைக் குற்றவாளியாக்காது,  என்பதே இதன் விளக்கமாகும்.  

பொது விதியாக, மனப் பிழை இல்லாமல் மேற்கொள்ளும் செயலுக்குக் குற்றவியல் சட்டம் பொறுப்பாக்காது. எனவே, மனமும் செயலும் சட்டமுரணாக இருந்தால்தான் ஒருவரைக் குற்றவாளி என்று சொல்ல இயலும்.

  இலத்தீன் தொடர்
712. Acuteகடும்  தீவிர

நாட்பட்ட  

மருத்துவத் துறையில் நெடுநாட்களாக உள்ள புண் அல்லது நலிவைக் குறிப்பது.  

நீதிமன்றத்தில் கடும் நிலை என்பது, பொதுவாகத் திடீரென்று தோன்றும், விரைவாக முன்னேறும்,

ஒப்பீட்டளவில் குறுங்கால நிலைகள்.
 713. Ad Coelumவான் வரை,  

Cuius est solum eius est usque ad coelum et ad infernos  என்னும் தொடரின் சுருக்கம் இது.  

நில உரிமையாளர் வானத்திற்குக் கீழே நிலத்திற்குக் கீழேயும் மேலேயும் புவியின் உள்ளகம் வரையும் உரிமையுடையவர்.

நிலத்தில் உள்ள அனைத்துக் கனிமவளங்களுக்கும் இது பொருந்தும்.  
இலத்தீன் தொடர்;

ad = ; coelum = வானம்
714. Ad Colligenda Bonaபொருட்களைத் திரட்டு  

வழக்காடுவதற்குக் கொடுத்தல் அல்லது ஒன்றுக்கு ஒன்று (quid pro quo) தொடர்புடைய வழக்குகளில் வழக்குரைஞருக்கு அவர் பெறத் தகுதியுடைய சில பொருள்கள கோரமுடியாதனவாக இருந்தால் அரசே திரட்டித் தருதல்.  

இறுதி முறி (will)எழுதி வைக்காமல் ஒருவர் இறந்தால் அல்லது இறந்தவர் எழுதி வைத்த இறுதி முறி, செல்லத்தகாததாக இருந்தால், அந்நேர்வில் அரசே உரிய ஆவணத்தைத் திரட்டித் தருவதை இது குறிக்கும்.

இலத்தீன் தொடர்.
715. Ad Hocஅமைவு  

தனிப்பட்ட,

குறிப்பிட்ட,

தற்காலிக,

ஒன்றற்குரிய,

அதற்கென அமைந்த,

குறித்த நோக்கத்திற்கான

  இவற்றுள் தற்காலிக என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.    

ஒரு குறிப்பிட்ட சிக்கல் அல்லது பணிக்காக அமைக்கப்படும் விதி அல்லது குழு.

நிலையான விதியோ குழுவோ உருவாக்கப்படும் முன்னர் உடனடித் தேவை கருதி இடைக்காலமாக உருவாக்கப்படுவது.  

இலத்தீன் தொடர்
716. Ad Hoc Committee  அமைவுக் குழு  

இடைக்காலக் குழு

  தற்காலிகக் குழு என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. தற்காலிக என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.  

Ad hoc  – இலத்தீன் தொடர்

committere, என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து committee உருவானது.
717. Ad Hoc Ruleஅமைவு விதி  

இடைக்கால விதி  

தற்காலிக விதி என்பது வழக்கில் நிலைத்துவிட்டத் தவறான சொல்லாட்சி.  

நிலையான விதி உருவாக்கப்படும் முன்னர் அதற்கென அமைக்கப்படும் விதி.
718. Ad Hominemஆளுக்கு  

ஆளைநோக்கிய வாதம்

(argumentum ad hominem)  என்பதன் சுருங்கிய வடிவம்.

மறுதரப்பாரின் வாதத்திற்குத் தக்க எதிருரை அளிக்க இயலாமல் அவரின் பண்பு, நோக்கம், வேறு சில இயல்புகளுக்கு எதிராகத் தொடுக்கும் தனியர் தாக்கு.  

அரசியலில் தனியர் தாக்கு பரவி வருகிறது.

நீதிமன்றங்களில் வாதுரைக்கு மாற்றாகத் தாக்குரை இடம் பெறுவது சிறப்பானதல்ல.  

இலத்தீன் தொடர்
719. Ad Idem  கருத்தொருமித்து  

ஒரே பொருள் குறித்து   உடன்படிக்கையில் குறிக்கப்பெறுவது  

இலத்தீன் தொடர்.
720. Ad Infinitumமுடிவின்றி

முடிவிலி

எல்லையற்ற

வரம்பற்றது

என்றென்றும்  

என்றென்றும் தொடரக்கூடிய முடிவற்றதைக் குறிப்பது.  

இலத்தீன் தொடர்.