marumalarchi01

காட்டுமன்னார்கோவில் அருகே வாழ்ந்து மறைந்த வள்ளல் இராசு(படையாட்சி).

அவரது வரலாற்றை மையமாக வைத்து ‘மறுமலர்ச்சி’ என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ்நாட்டிற்கு அந்த வரலாற்றை அறியத்தந்தவர் இயக்குநர் பாரதி..

அதன்பிறகு சில திரைப்படங்களை அவர் இயக்கினாலும் கூட மறுமலர்ச்சி எட்டிய வெற்றியை அவற்றால் எட்ட முடியவில்லை..

தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் “தில்லானா மோகனாம்பாள்” அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது “மறுமலர்ச்சி”
இதுவே இத்திரைப்படத்தின் சிறப்பை வெளிப்படுத்தும்.

இயக்குநர் பாரதி இதுவரை தான் சம்பாதித்த எதையுமே தனக்கென்று சேர்த்துக்கொள்ளாமல் ஏழை மாணவர்களின் கல்விக்காய் கொடுத்து விட்ட கொடையாளராய் இருந்திருக்கிறார்.

அதன் விளைவு..

பழுதடைந்த தன் சிறுநீரகத்தை சரிசெய்து கொள்ள.. சிறுநீரக மாற்று அறுவைப் பண்டுவம் செய்துகொள்ள வசதியற்றுப் போய்விட்டார்.
அவரின் குடும்பமும் வறுமையில் வாடுகிறது..

தனக்குத் தெரிந்த பெரியவர்களிடம் உதவி கேட்டும் கிடைக்காத சூழ்நிலையில் மருத்துவத்திற்காகப் போராடுகிறார் பாரதி..
இவரைக் காப்பாற்ற நம்மால் என்ன செய்ய முடியும்?

ஏன் முடியாது?

ஆளுக்கு ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்தால் கூட இலட்சங்கள் ஆகிவிடுமே..

பாரதியைக் காப்பாற்றுங்கள்.. வாழ்நாளிலேயே ஒரு கலைஞனுக்கு உதவி செய்யுங்கள்..

தொடர்புக்கு :- 99767 81511, 88839 95631,

கே.பாரதி,இந்திய அரசு வங்கி (ஃச்டேட் பாங்க் ஆஃப் இந்தியா) போரூர் கிளை.
20001226133
Branch Code :- 5200
IFSC Code :- SBIN0005200

முகவரி :-
கே.பாரதி
மனை எண் 13/80, கிருட்டிணா நகர், 3 ஆவது தெரு,
மதுரவாயல், சென்னை – 95.

தரவு : முகநூல்