முப்பது நாள்களில் தமிழ்
அன்புடையீர், வணக்கம்.
தமிழம்.வலை உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும்/ தமிழ் மழலையர்களுக்கும் தமிழ் கற்பிக்க விரும்புகிறது. அவர்கள் எந்த அகவையினராக இருந்தாலும் சரி, தமிழ் கற்றுக் கொண்டதில் எந்த நிலையினராக இருந்தாலும் சரி, ஒரு நாளைக்கு அரை மணி நேரம் மட்டும் படிப்பதற்காக ஒதுக்கினால், 30 நாள்களில் யாரை வேண்டுமானாலும் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்கக்கூடியவராக, மாற்ற முடியும். ( எனது 25 ஆண்டு கல்விப்பணியில் நான் கண்டறிந்தவை இவை )
தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பதற்கான பாடத்திட்டங்களும், அணுகுமுறைகளும் என்னிடம் உள்ளன.
இதனைக் கற்பிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு ஒரு மணி நேரத்தில் வானைலை(skype) வழியாகப் பயிற்சியும் தர இயலும். நான் உருவாக்கி உள்ள 32 அட்டைகளின் வழியாகக் கற்பித்தால், மிக எளிமையாகக் கற்பித்து விடலாம். இதன் தொடரியாக ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த மழலையை நுட்பமாகச் சிந்தித்துச் செயலாற்றக்கூடியவராக, ஆக்குவதற்கான பாடத்திட்டங்களையும் முறைபடுத்தி வருகிறேன்.
அமெரிக்கா, இலண்டன், ஆசுதிரேலியாவிலுள்ள நண்பர்கள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக வெற்றியும் பெற்றுள்ளார்கள்.
உங்கள் பகுதியில் உள்ள இரண்டு மழலையர்களை இணைத்துக்கொண்டு கற்பிக்கத் தொடங்குங்கள். உங்களைச் சுற்றி ஆற்றலுள்ள தமிழர்கள் உருவாக்கப்படுவார்கள். உங்கள் ஓய்வு நேரங்களில் ஒரு வாரத்திற்கு அரை மணிநேரம் நீங்கள் செலவழித்தால் போதும்.
30 வாரங்களில் அவர்கள் தமிழ்ச் செய்தித்தாளைப் படிப்பார்கள்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் – நீங்கள் அந்த மழலையர்களுக்குக் கண் கொடுக்கும் தெய்வமாகிறீர்கள்.
தமிழைப் படிக்க, பேச, எழுதத் தெரிந்தால் தான் நம் தமிழ் மன்பதை தமிழராக மேலெழும்.
விருப்புடையோர் இணையவும்.
பொள்ளாச்சி நசன்.
தமிழம்.வலை பார்க்கவும் / visit http://www.thamizham.net
தொடர்பு மின்வரி pollachinasan@gmail.com பேசி 97 8855 2061
Leave a Reply