விளையாட்டு

பந்துருட்டி ஆடுகின்ற

பாலகர்கள் ஓர்புறம்!

பந்தயத்தில் முந்திமுந்திப்

பாயுமன்பர் ஓர்புறம்!

 

மூச்சடக்கி நீர்க்குளத்தில்

மூழ்குமக்கள் ஓர்புறம்!

பேச்சடக்கி யோகமங்குப்

பேணுமன்பர் ஓர்புறம்!

 

தட்டியொன்றை நோக்கியோடித்

தாவுமன்பர் ஓர்புறம்!

விட்டெறிந்த ஈட்டிதேடி

விரையுமன்பர் ஓர்புறம்!

 

எட்டிநின்று பார்த்துளத்துள்

ஏங்குகின்ற பையனே!

மட்டிலாத இன்பமுண்டு!

வாட்டமென்ன? வாஉளே!

 

 – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன்

 புன்னகைப் பூக்கள்  பக்கம் 35