முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் நலம் பெறட்டும்! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி இடட்டும்!     தமிழக முதல்வர் செயலலிதா உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனை  ஒன்றில் கடந்த புரட்டாசி 06, 2047 / 22.09.16 அன்று சேர்க்கப்பட்டார். காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடுமே நலக்கேட்டிற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேர்ந்த பின்னர், சருக்கரை மிகுதி, நுரையீரல் பாதிப்பு, அவ்வப்பொழுது மூச்சிரைப்பு போன்ற காரணங்களும் சொல்லப்படுகின்றன. தன் கட்சித்தொண்டர்களால் ‘அம்மா’ எனப் பாசத்துடன் அழைக்கப்படும் அவர், அன்பர்களின் வேண்டுதலால் விரைவில் நலம்  பெறுவார் என எதிர்பார்க்கிறோம். தமிழ் மருத்துவத்தையும் கடைப்பிடித்தார்கள்…

மாம்பூவில் நோய் தாக்குதல்- உழவர்கள் கவலை

      இந்தியாவின் தேசியப் பழமான மாம்பழம் தன்னுடைய மணத்தாலும் சுவையாலும் நம்மை மயக்க வல்லது. மாம்பழ உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் இந்தியா கிட்டத்தட்ட உலக உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது.      சேலத்திற்கு அடுத்தபடியாகப் பெரியகுளம், போடி, தேவதானப்பட்டி பகுதியில் பல காணி பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிட்டு வருகின்றனர். மாங்காயிலிருந்து வடு, மாங்காய் வற்றல், மாம்பழம் எனப் பலவகை கிடைக்கிறது. தற்பொழுது பெய்த மழையால் மாந்தளிரில் பலவகையான பூச்சிகள் தாக்கியுள்ளன. தத்துப்பூச்சிகள், மாங்கொட்டைக் கூண்வண்டு, அசுவினி, செதில் பூச்சி, பூங்கொத்துப்…

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை

நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை   தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது.   தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….