சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 1043-1046 தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050
| 1047. Appreciation | ஆராய்தல்; பாராட்டுதல்; மதிப்பிடுதல்; விளங்கிக் கொள்ளுதல் சட்டத்தில் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள் முறையீட்டின் போது வழங்கப்பட்ட ஆதாரத்தை மதிப்பீடு செய்து ஆராய்ந்து பார்க்கும் செயல்முறையைக் குறிக்கும். இது நீதித்துறை எடுத்துரைப்பு, முழு நம்பகம், நிகழ்தகவு விதி, நீதித்துறை தவறாக செயல்படுவதைத் தடுத்தல் முதலியவற்றை உள்ளடக்கியது. |
| 1048. Appreciation of evidence | சான்றின் மதிப்பீடு சட்டத்தில் சான்றின் அல்லது ஆதாரத்தின் மதிப்பீடு என்பது நீதிமன்றங்கள். சட்டநடவடிக்கைகளின் போது அளிக்கப்பட்ட ஆதாரத்தின் ஏற்கத்தக்க தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை ஆராய்ந்து மதிப்பீடு செய்யும் செயல்முறையைக் குறிக்கும். |
| 1049. Apprehend | அச்சத்தோடு எதிர்பார் தளையிடு கைது செய் புரிந்துகொள் பெரும்பாலும் குற்ற வழக்குகளில், சட்ட அதிகாரத்தினால் ஒருவரைப் பிடித்தல் அல்லது தளையிடுதல் என்பதைக் குறிக்கிறது. இது குற்றவாளியைக் கையோடு பிடிப்பதைக் குறிக்கும். இது பெரும்பாலும் காவல் அறிக்கைகளிலும், தளையாணைகளிலும் பதிவு செய்யப்படுகிறது. |
| 1050. Apprentice | தொழில் பயிலுநர் விற்பனை மேம்பாட்டு பணியாளர்கள் (சேவை நிபந்தனைகள்) விதிகள், 1976, பிரிவு 2.ஈ. [The Sales Promotion Employees (Conditions Of Service) Rules, 1976,Sec. 2(d)] பணியாளர்களுள் தொழில் பயிலுநர்களும் அடக்கம் எனக் குறிக்கிறது. (S. 2(d) SPE(CS)A, 1976) |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

Leave a Reply