ஈழத்துப் புதின இலக்கியம் – . மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 8
அத்தியாயம் 4. புதினம்
பத்தொம்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் நிலவுடைமைச் சமூக அமைப்பில் ஏற்ப்பட்ட சீர்குலைவும், முதலாளித்துவ சமூக அமைப்பின் தோற்றம், பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, மேலைநாட்டு இலக்கியப் பரிச்சயம் முதலியவை தமிழ் இலக்கியப் போக்கில் பாரிய மாற்றங்கள் ஏற்படக் காரணிகளாயின. புதினம், சிறுகதை முதலிய நவீன இலக்கிய வடிவங்களின் தோற்றம் இவற்றுளொன்றாகும். பத்தொன்பதால் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றம் பெற்ற புதின இலக்கியம் இன்று பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.
ஈழத்துத் தமிழ்ப் புதின இலக்கியத்துக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கால வரலாறுண்டு. சித்திலெப்பையினால் எழுதப்பட்டு 1885-ஆம் ஆண்டு வௌியிடப்பட்ட அச ன்பேயுடைய கதையே ஈழத்தின் முதல் புதினமாகக் கொள்ளப்படுகிறது. ஈழத்தவரால் எழுதப்பட்டதாயினும் இந்நூல் சென்னையிலேயே வௌியிடப்பட்டது. மிசர் தேசத்து அரசகுமாரனான அசன்பேயின் வாழ்க்கை நிகழ்ச்சிகளினூடாக இசுலாமியப் பண்பாட்டின் பெருமையை நிலைநாட்ட ஆசிரியர் முனைந்திருக்கிறார் எனலாம். அசன்பேயுடைய கதை வௌிவந்து பத்து ஆண்டுகளின் பின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை எழுதிய மோகனாங்கி என்ற நூல் வௌியாயிற்று. இந்நூல் தஞ்சை நாயக்கர் வரலாற்றில் இடம்பெறும் ஒரு சிறு சம்பவத்தைக் கருவாக வைத்து கற்பனை கலந்து எழுதப்பட்டதாகும்.
இவ்வாறு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து ஈழத்தவர் புதியதொரு இலக்கிய வடிவத்தைப் படைப்பதில் ஈடுபட்டனர். எனினும் வசனத்திலமைந்த நீண்ட கதைகளாக இவை அமைந்தனவே தவிர புதினம் என்ற நவீன இலக்கிய வடிவத்தின் பண்புகளைப் பெற்றுக்கொள்ளவில்லை. சமகால வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொள்ளாமல் இதிகாச அல்லது கற்பனைக் கதைகளையே வசனத்தில் இந்நூல்கள் கூற முனைந்தன. இந்நிலைமைக்கு இன்னோர் சிறந்த உதாரணமாக சி.வை. சின்னப்பபிள்ளையின் விசய சீலத்தை (1916) குறிப்பிடலாம். விசயன் இலங்கைக்கு வந்தமை, குவேனியை மணந்தமை ஆகிய இதிகாச நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டது. சி.வை.சின்னப்ப பிள்ளையின் வேறு இரு நூல்கள் 20 ஆம் நூற்றாண்டின் சன்மார்க்க செயம் (1905) உதிரபாசம் அல்லது இரத்தினபவானி (1915) ஆகிய அவரது நூல்கள் சமகாலப் பாத்திரங்களைக் கொண்டவைபோன்று அமைந்திருப்பினும் கற்பனையான கதைகளே. இக்கற்பனைக் கதைகளில் அக்காலத் தன்மைகள் சில இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வன்னி, உதாரணமாக வீரசிங்கன்கதையில் அதன் கதைத் தலைவன் அனுரதபுரம், திருகோணமலை முதலிய பல இடங்களுக்கும் போவதாகக் கூறப்படுகிறது. ஆயினும் அவ்வவ்விடங்களுக்குரிய இயல்பு, அங்குள்ள வாழ்க்கை யதார்த்தம், அதற்கும் கதைத் தலைவனின் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அக்குறிப்பிட்ட சூழலில் பிறக்கும் மனித குணாம்சங்கள் ஆகியவை புதினத்தில் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்திலிருப்போர் உத்தியோகத்துக்காகவும் பிற தொழில்களுக்காகவும் ஏனைய பிரதேசங்களுக்குச் செல்லுதல் 20 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஒரு புதிய நிலைமையாகும். இந்நிலைமையை வெறும் நிகழ்ச்சியாக இவ்வாசிரியர்கள் கண்டனரே தவிர அந் நிலைமைகள் தனிமனித, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்திய புதிய பரிமாணங்களைத் தமது எழுத்தில் சிறைப்பிடிக்க முனைந்தாரல்லர். இதனாலேயே இந் ‘நாவல்கள்‘ யதார்த்தத்தை இழந்த கற்பனைக் கதைகளாகின. இந்லையில் கதை கொழும்பில் நிகழ்ந்தாலும் கோலாலம்பூரில் நிகழ்ந்தாலும் ஒன்றாகவே அமையும் விபரீதத்திற்குள்ளாகிறது. இந்நிலைமை இந் நூற்றாண்டின் பிற்பாதி வரை தொடர்ந்து எமது புதினஉலகில் நிலவி வந்துள்ளது. கதைகளினூடு நல்வழி உபதேசம் செய்யும் பண்பே இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் அரசோச்சி வந்துள்ளது எனலாம். சமூகத்தில் ஏற்பட்ட மாறுதல்கள், ஒழுக்கப் பிறழ்வுகள் அனைத்தையும் அறக்கண் கொண்டே நாவலாசிரியர் நோக்கினர். ஏனையோருடன் ஒப்பிடும்போது அதிகளவு சமூக நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நாவலெழுதியவர் என்று போற்றப்படும் ம.வே. திருஞானசம்பந்தபிள்ளை பின்வருமாறு கூறியுள்ளார்.
“செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதிகரித்து வரும் இக் காலத்தில் நமது தமிழ் மக்கள் பத்திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல்லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல்வழியடைய முடியாதவர்களாயிருக்கிறார்கள். இக் காரணம் பற்றியே இராமாயணம், பாரதம், முதலிய இதிகாசங்களும், கந்தபுராணம், பெரியபுராணம் , திருவிளையாடற் புராணம் முதலிய புராணங்களும் அறிஞரால் வசன நடையில் எழுதி வௌியிடப்படலாயின. மேலைத்தேசக் கொள்கையைப் பின்பற்றிப் பல நவீன கதைகள் தமிழ் மொழியில் எழுதப்படுவதும் இக் காரணம் பற்றியேயாம்.”.
இப் பண்பு இந்நூற்றாண்டின் பிற்பாதி வரை எழுந்த கதைகளில் காணப்படும் பொது நிலைமையாயினும் அவற்றுள் காணப்படும் சில சாயை வேறுபாடுகளையும் வேறு பண்புகளின் தோற்றத்தையும் கருதி அவற்றை மூன்று உட்பிரிவுகளாக நோக்குதல் இக் காலப் பகுதி புதின இலக்கிய வரலாற்றைத் தௌிவாக்க உதவும்.
1) 1915 ஆம் ஆண்டு வரை நீண்டதும் வசன ரூபத்தில் அமைந்தனவுமான கற்பனைக் கதைகளே முதன்மை பெறுகின்றன. அசன்பேயுடைய கதை, மோகனாங்கி, உதிரபாசம், விசயசீலம், வீரசிங்கன்கதை ஆகிய மேலேபார்த்த நூல்கள் இக் காலத்தில் வௌிவந்தவையாகும். இவற்றின் பொதுப் பண்புகளை மேலே பார்த்தோம். இவற்றைப் புதினங்கள் என அழைப்பதை விடக் காதலுரைகள் ( ரோமான்சு) எனக் கூறுவதே பொருத்தமானது.
2) 1915-ம் ஆண்டுக்குப் பின்னர் அதிகளவு சமுக நிலைமைகளைக் கவனத்திற் கொள்ளும் போக்கு புதின உலகில் அரும்பத் தொடங்குகிறது. பாத்திர உருவாக்கம், பாத்திர உரையாடல் ஆகியவற்றிலோ, கதைப் பின்னலிலோ ஆசிாியர்கள் அதிக கவனம் செலுத்தாவிடினும் அக்காலத்துச் சமூக நிலைமைகள் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்கள் ஆகியவற்றைச் சிறிதளவாவது தமது புதினங்களில் எதிரொலித்துள்ளனர். வெறும் கதை கூறும் போக்கிலிருந்து விடுபட்டுச் சமூக உணர்வுடன் புதினங்கள் எழுதப்பட்டமைக்கும் அக்காலச் சமூக நிலைமைகட்கும் தொடர்பிருந்தது. ஆங்கிலேயர் இலங்கையில் ஏற்படுத்திய பொருந்தோட்டப் பயிர்ச் செய்கை, விருத்தி செய்த வணிகம், அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வி, அதுசார்ந்த பதவிகள் ஆகியவை நாட்டில் புதிய நிலைமையைத் தோற்றுவித்தன. பணம் சம்பாதிப்பதில் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். அத்துடன் கிறித்ததவ மிசனாிமாாின் தீவிரமான மதமாற்ற முயற்சிகளும் இடம்பெற்றன. சுருங்கக் கூறின் பாரம்பாிய சமூக அமைப்பினுள் ஏற்பட்ட சலனங்கள் மக்கள் நடைமுறைகளையும் கருத்துக்களையும் பாதித்தன எனலாம். இக்காலப் பகுதியில் மக்களின் மனோபாவங்களிலும் நடைமுறைகளிலும் ஏற்பட்ட மாறுதல்களைக் கூர்ந்து அவதானித்திருந்த பாவலர் துரையப்பாபிள்ளை Ceylon National Review என்ற பத்திாிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
“கவனத்தை ஈர்க்கும் மாறுதல் இப்போது நம் மக்களிடை ஏற்படத் தொடங்கியுள்ளது. மக்கள் நடை முறையில் அக்கறையுடையோராகவும் பணம் உழைப்பதில் கவனம் செலுத்துவோராகவும் காணப்படுகின்றனர். அவர்கள் சமூக விழாக்கள், விளையாட்டுகள், பொழுது போக்குகள் என்பவற்றைச் சிறுபிள்ளைத்தனமாகக் கணிக்கின்றனர்.”
இப் புதிய நிலைமைகளில் காணப்பட்ட மனித ஒழுக்கலாறுகள் இலக்கியப் படைப்பாளிகளின் சிந்தையைக் கிளறும் விசயங்களாயமைந்தன. மக்களிடையே காணப்பட்ட ஏற்றத் தாழ்வுகள், சீர்கேடுகள் ஆகியவற்றுக்கு பாிகாரம் கூறும் நோக்குடன் அறவியல் சமய அடிப்படையில் இவர்கள் எழுதினர். மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914) தேம்பாமலர் (1929) தம்பிமுத்துப்பிள்ளையின் சுந்தரன் செய்த தந்திரம் (1918) ம.வே. திருஞானசம்பந்த பிள்ளையின் காசிநாதன் நேசமலர் (1924) கோபாலநேசரத்தினம் (1927) துரைரத்தினம் நேசமணி(1927) இடைக்காடாின் நீலகண்டன் அல்லது ஒரு சாதி வேளாளன் (1925) ஆகியவை இப் பண்புக்கு உதாரண விளக்கங்களாகும்.
சுந்தரன் செய்த தந்திரம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம் நேசமணி, நீலகண்டன் ஆகிய நூல்களில் அக்கால யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் நிலவிய சீர்கேடுகள் சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகின்றன. சாதி காரணமாக மக்களிடையே நிலவும் ஏற்றத் தாழ்வுகள், உயர்சாதியினாிடை காணப்படும் ஊழல்கள், சீதன வழக்கத்தினால் ஏற்படும் தீமைகள், மதுபானப் பழக்கத்தால் ஏற்படும் கேடு ஆகியவை இவற்றுள் பிரதானம் பெற்றன. மக்கள் நல்லாசாரங்களைக் கைக்கொள்வதன் மூலம் சமூகத்தில் இவற்றைக் களைந்துவிடலாம் என்பது இப் புதினங்களை எழுதியோாின் கருத்தாகவிருந்தது. சமூகக் குறைபாடுகளைத் தனிமனிதக் குறைபாடுகளாகக் கண்டதின் விளைவே இதுவெனலாம். இக் குறைபாடுகளுக்குாிய சமூகவியல் காரணிகளை இப் புதின ஆசிாியர்கள் கருத்தில் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கை, தரும விருப்பு, கல்வி அறிவினால் உண்டாகும் மன விசாலிப்பு ஆகியவை ஏற்பட முழுச் சமூகமுமே மேற்கூறிய குறைபாடுகளிலிருந்து நீங்கும் என இவர்கள் எண்ணினர்.
மேற்கூறிய புதினங்கள் சிலவற்றில் இன்னோர் பண்பும் முதன்மை பெற்றது. 19ஆம் நூற்றாண்டிலிருந்தே இலங்கையில் இடம்பெற்ற கிறித்தவ மதமாக்கல் முயற்சியும் அதற்கு எதிராக சுதேசிகளிடம் தோன்றிய சுதேச மதப் பற்றும் 20 ஆம் நூற்றாண்டிலும் முக்கிய அம்சங்களாகக் காணப்பட்டன. இவற்றின் பிரதிபலிப்பும் மேற்கூறிய சில புதினங்களில் இடம் பெற்றன. மங்கள நாயகம் தம்மையாவின் நொறுங்குண்ட இருதயம் கிறித்தவ சமய நெறியில் சன்மார்க்க சீவியம் நடத்த மக்களுக்கு வழிகாட்டும் முயற்சியாகவே எழுதப்பட்டதெனலாம். சைவசமய பாிபாலன சபையினர் வௌியிட்ட இந்துசாதனப் பத்திாிகையின் ஆசிாியராகப் பணிபுாிந்த ம.வே. திருஞானசம்பந்தபிள்ளையின் கோபாலநேசரத்தினம் சுதேச மத விழிப்புணர்வைப் எதிரொலிப்பதாகும். “சைவசமயச் சிறுமியரை அந்நிய மதத்தினர் வைத்து நடத்தும் வித்தியாசாலைகளில் கல்வி பயிலவிடவொண்ணாவென்பதை இந்நூல் எடுத்துக் காட்டும் இயல்பினது” என ஆசிாியரே அந் நூல்முகத்தில் கூறுகிறார்.
சமூக நிலைமைகளையும், சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களையும் எதிரொலிப்பனவாக மேலே பார்த்த, 1915-30க்கிடைப்பட்ட புதினங்கள் அமைகின்றன. அதே வேளையிலேயே அவை மரபு வழிப்பட்ட அறவியல் அடிப்படையிலேயே சிக்கல்களை அணுகின என்பதும் வற்புறுத்தப்பட வேண்டியதாகும்.
(தொடரும்)
சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்
Leave a Reply