கார்த்திகை 27, 2051 சனி 12.12.2020

கிழக்கு நேரம் இரவு 8.30

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

இலக்கியக் கூட்டம்

தமிழரின் மெய்யியல் மரபு

பேரா.கரு.ஆறுமுகத் தமிழன்

அன்புடையீர்

வணக்கம்,

நான் யார்? இந்த அண்டத்தின் தோற்றம் எவ்வாறு? என்ற கேள்விகளுக்கான விடை தேடிய பயணம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக மனிதரிடையே நடக்கிறது. உலக நாகரிகங்களில் தொன்மையான நாகரிகமான தமிழர்கள் இது குறித்து 2000 ஆண்டுகளுக்கு மேலாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை. பன்முகத்தன்மைக்குப்  பெயர் பெற்ற தமிழர் பண்பாடு கொடுத்த உரிமையில் பல்வேறு மெய்யியல் கொள்கைகள் இங்குத் தோன்றி, பரவி வளர்ந்து உள்ளன. 2500 ஆண்டுகள் பழமையான தமிழரின் மெய்யியல் வரலாற்றை நம் கண்முன்னே மீட்டுருவாக்கம் செய்ய வருகிறார் பேராசிரியர் கரு.ஆறுமுகத் தமிழன் அவர்கள். இவர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் மெய்யியல் துறையில் பேராசிரியராகப்  பணிபுரிகிறார் .


இணைப்பு: http://tinyurl.com/fetna2020ik

பேரவையின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள பேரவையின் முகநூல் பக்கத்தை விரும்பவும்.
https://www.facebook.com/fetnaconvention

இப்படிக்கு
பேரவை இலக்கியக் குழு