பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!

அடுத்தடுத்து இப்படியா ?


சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்
அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்
தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் 
இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பது
பாவலர் தமிழேந்தியின் பாடல்.

” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்
பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்
கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமே
அந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றி
வருகிறார் ”  என்று பாவலர் அறிவுமதி 
வியந்து பேசுவது வழக்கம்.

‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதை
யாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.
அரசியல் கவிதை அற்றுப்போகாமல்
காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்
பயணம் நின்றுவிட்டது.

தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்
டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்
பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சி
முழக்கமிடும் போராளித் தமிழேந்தி
குரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!

பாவலர் தமிழேந்தி உலகவாழ்விலிருந்து
விடைபெற்றுக் கொண்டார்.

இன்று சித்திரை 22, 2050 /  5-5-19 ஞாயிறு மாலை 5 மணிக்கு
உடல் கொடை அளிக்கப்பட உள்ளது.

இல்லம் : 44 இராசாசி தெரு, 
சுவால் பேட்டை ,
அரக்கோணம்.
தொடர்புக்கு: 
மகன் : பாவேந்தன் 94432 32069

 செந்தலை கவுதமன்

மார்க்சியத்தின் பால் ஆழ்ந்த பற்றும் -பெரியார் அம்பேத்கர் கொள்கையில் உறுதியும் கொண்ட பாவலர்.

  • காஞ்சி அமுதன்யோகநாதன்

தமிழ்த் தேசிய விடுதலையையும் பெரியாரித்தையும் உயிர் மூச்சாக கொண்டு, களம் பல கண்டு வாழ்ந்தவர்.

தமிழீழம், தலைவர் பிரபாகரன் குறித்து பல பாடல்கள் எழுதியுள்ளார்.

விசுவநாதன் கரிகாலன்

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமை கட்சியின் முன்னணியாளர் எழுச்சிக் கவிஞர் தோழர் தமிழேந்தி.

சில மாதங்களுக்கு முன்பு, தோழர் ‘குலுக்கை’ செல்லையா அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, ஐயா தமிழேந்தியின் உடல்நிலை குன்றிக்கொண்டு வருகிறது, அவரிடம் விரிவான நேர்காணல் செய்யவேண்டும் என்று சொன்னார். அதற்கான வாய்ப்பு அமையாமலே போய்விட்டது.

இத்தனைப் புதுமைத் தொழில்நுட்பங்கள் நம் கைக்குக் கிடைத்த பிறகும், இப்படிப் பலரையும் முறையாக ஆவணப்படுத்தாமல் வெறுமனே வழியனுப்பி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

பிரபாகரன் அழகர்சாமி