தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 / சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது.
சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும்.
தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது?
அப்போதிருந்த சூழல் என்ன?
அவர்கள் செய்தது என்ன?
அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன?
தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன?
நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது?
அதற்கு என்ன செய்யப்படவேண்டும்?
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை, தமிழ்ச்சங்கங்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்.
என்பன குறித்துக் கலந்தாய்வு நிகழும்.
அனைவரும் வந்து கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்
Leave a Reply