களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி:  இணைய வழிக் கூட்டம் 10/12/22

“தொன்மை! தொடக்கம் !! தொடர்ச்சி!!!” குழுவின் இணையவழிக் கூட்டம் தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்? தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள்…

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா

தலைமுறை தாண்டியும் தமிழ் – பேரவைத் தமிழ் விழா விழா மலருக்குப் படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்வரி malar@fetna.org 750 சொற்களுக்கு மிகாமல் சீருருவில்(ஒருங்குகுறி) சொற்கோப்பில் இருக்க வேண்டும். கடைசி நாள்: மாசி 17, 2053 / 01.03.2022 கூடுதல் தகவலறிய : http://fetna-convention.org    

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இரு நிகழ்வுகள்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை புரட்டாசி 09, 2052 / 25.09.2021 இரு நிகழ்வுகள்   1. பொருநை நதி நாகரிகம்  இந்தியத் தொல்லியல் வரலாற்றில் ஓர் எல்லைக்கல். இந்திய வரலாற்றில் 5000 ஆண்டு கால நாகரிகத்தின் தொடர்ச்சியைக் காட்டிய காலக் கண்ணாடி. அண்மையில் வெளிவந்த பொருநை நதி நாகரிகம் குறித்தும் , அதன் வரலாற்று இன்றியமையாமை குறித்தும்  தமிழகத் தொல்லியல் துறையின் கல்வி – ஆய்வு அறிவுரைஞர் பேராசிரியர் கா. இராசன் அவர்கள் விரிவாக விளக்க இருக்கிறார். அனைவரும் தவறாமல் கலந்து…

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்  – பல்வழி அழைப்பு வழியாகக் கலந்துரையாடல்

பேரன்புடையீர், வணக்கம்.  பேரவையின் மாத இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை மாதந்தோறும் நடத்தும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம்,  வரும் தை 15,  ஞாயிற்றுக்கிழமை  சன.  28 அன்று, கிழக்கு நேரம் இரவு 8:00 மணி முதல் 9:00 மணிவரை பல்வழி அழைப்பு வாயிலாக நடக்கவுள்ளது. இம்மாத இலக்கிய கூட்டத்தில் நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்ற இருக்கின்றார் முனைவர் மு. இளங்கோவன். இந்த இலக்கியக் கூட்டத்தில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இலக்கியச்…

பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்     அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .

கார்த்திகை 12, 2047 / திசம்பர் 29, 2016  பிற்பகல் 2.00 மணி முதல் பசும்பொன் தேவர் மண்டபம், சென்னை 600 017 வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)யின் தமிழிசைத் திருவிழா, சென்னை .   வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தமிழகத்தில் தமிழிசைப்பணியை முன்னெடுக்கும் வகையில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவைத் திசம்பர் மாதத்தில் நடத்தி வருகின்றது.  சென்னையில் உள்ள இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையோடு இணைந்து பேரவை, 4-ஆம் ஆண்டுத் தமிழிசை விழாவினை மிகச்சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. தமிழிசை ஆர்வலர்கள்…

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 /  சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன? நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது? அதற்கு…

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை: மறைமலை இலக்குவனாரின் கூட்டிணைப்புத் தொலையுரை

வைகாசி 09, 2047  / 2016  மே  22  ஞாயிறு  இரவு 8:30 மணி முதல் 9:30 மணிவரை (கிழக்கு நேரம்/ET) (கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்) வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை         Federation of Tamil Sangams of North America இலக்கியச் சொற்பொழிவு     “மணிப்பிரவாளமும்        தனித்தமிழ் இயக்கமும்”    வழங்குபவர்:   பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்   தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம்கொண்ட தமிழறிஞர். சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியர் பணியாற்றிவுள்ளார். கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறையின் தமிழ்ப்புலத்தில்…