அறிவியல்தமிழறிஞர் திரு. மணவை முசுதபா அவர்களின் 80 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வைகாசி 31, 2046 / சூன் 14, 2015 மாலை சென்னையில் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள இந்திய அலுவலர் சங்ககக்கட்டடத்தில் மாலை 5.00 மணிமுதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

   தேநீர் விருந்துடன் தொடங்கும் விழா, இரவு விருந்துடன் நிறைவடைகிறது.

  அந்நிகழ்வின் பொழுது அறிவியல் தமிழ் அறக்கட்டளை அமைப்பினை அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்க விண்ணியல் அறிவியல் துறையில் அருந்திறல் ஆற்றியுள்ள மதிற்பிற்குரிய முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் இசைந்துள்ளார்கள்.

 

முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, முனைவர் ச.முத்துக்குமரன், முனைவர் சாதிக்கு, முனைவர் மறைமலை இலக்குவனார், முனைவர் நெல்லை சு.முத்து, முனைவர் மலையமான், முனைவர் அறிவுநம்பி, திருவாட்டி சாந்தகுமாரி சிவகடாட்சம், பன்மொழிஅறிஞர் கண்ணன் ஆகிய அறிஞர் பெருமக்களுக்கு

மணவை முசுதபா அறிவியல்தமிழ் அறக்கட்டளை விருதுகளை

வழங்கிச் சிறப்பிக்க

நீதியரசர். பு. இரா.கோகுலகிருட்டிணன் அவர்கள் இசைந்துள்ளார்கள்.

 azhai_manavai01 azhai_manavai02

 

 

விழாக்குழுவினருடன் இணைந்து

அன்புடனும் அறிவியல் தமிழுடனும் அழைப்பவர்

மரு. மு.செம்மல்

மேலாண் இயக்குநர்

அறிவியல் தமிழ் அறக்கட்டளை