53pirapakaran_maalaipozhuthu_kaviyarnagam01

60 கவிஞர்கள் கூடும் பிரபாகரன் மாலைப் பொழுதுகவியரங்கம்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டுச் சென்னையில் 60 கவிஞர்கள் கூடும் கவியரங்கம் நடைபெற உள்ளது.

 

 

புலவர் புலமைப்பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை (மெரீனா) கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பின்புறம் நடைபெற உள்ளது.

 

கிறித்து பிறப்பிற்கு முந்தைய நாளான 24 அன்று கிறித்துமசு மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60 ஆவது பிறந்த நாளான 26 ஆம் நாளுக்கு முந்தைய நாளான 25- கார்த்திகை 9, 2045 அன்று ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்தக் கவியரங்கு நடைபெற உள்ளது.

அனைவரும் வருக!

53maavirarnaal_veliyeedukal