UNO-Humanrightscommission-tamil02

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வல்லுநர் குழுவினர் உசாவல்களைத் தொடங்கி விட்டனர். அதற்கான, சான்றுரைகளைத் திரட்டுவதற்கான கேள்விக்கொத்து, அக்கேள்விக் கொத்துகளை உள்ளடக்கிய மாதிரிப் படிவம் கீழே தரப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்களை ஐ.நா மனித உரிமை ஆணையகம் 12 வகையாக வகைப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழரும் தங்களுக்கு எந்த வகை பொருந்துகின்றதோ அப்படிவத்தைப் பூர்த்தி செய்து ஐக்கிய நாடுகள் சபையின் மின்னஞ்சல் முகவரிக்கோ ஐக்கிய நாடுகள் சபையின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம். அதற்கான முகவரிகள் கீழே:

மின்னஞ்சல் முகவரி: OISL_submissions@ohchr.org

அஞ்சல் முகவரி: OISL UNOG-OHCHR

                   8-14 Rue de la Paix

                   CH-1211 Geneva 10

                   Switzerland

கீழே வகைப்படுத்தப்பட்டுள்ள கேள்விகள் மேல் சுட்டியை வைத்து அழுத்திப் படிவங்களைப் பொதிவாவண/PDF வடித்தில் பெற்றுக்கொள்ளலாம்.

1.

நீதிக்குப் புறம்பான, உசாவலற்ற அல்லது சட்டத்திற்குப்புறம்பான படுகொலைகள் தொடர்பான அறிக்கையாளர் கேள்விக் கொத்து.Questionnaire of the Special Rapporteur on extra-judicial, summary or arbitrary executions.

2.

சித்திரவதை, கொடூரமான, மனிதநேயத்திற்குப் புறம்பானவகையில் நடத்தப்படுதல், தண்டிக்கப்படுதல் தொடர்பான கேள்விக் கொத்து. Special Rapporteur on torture and other cruel, inhuman or degrading treatment or punishment.

3.

நீதிக்குப் புறம்பான கைதுகளும்   சிறையிடுதல்களும். Arbitrary arrests or Detentions

4.

வலிந்து அல்லது தன்னியல்பின்றிக் காணாமல் போனோர் தொடர்பான செயற்குழுவின் கேள்விக்கொத்து. Working Group on Enforced or Involuntary Disappearances

5.

பெண்களுக்கெதிரான வன்முறைகள், அவற்றின் காரணங்கள், பாதிப்புக்கள் தொடர்பான தனியர்களின் முறைப்பாட்டுக் கேள்விக்கொத்து. Individual complaint form violence against women, its causes and consequences

6.

கூலிப்படைகளின் செயற்பாடுகள் பற்றிய செயற்குழுவின் கேள்விக்கொத்து. The working group on the use of mercenaries

7.

மனித உரிமைப் பாதுகாவலர்களின் நிலைமைபற்றி அளிக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து. Special Rapporteur on the situation of human rights defenders Submitting complaints.

8.

கருத்துரிமை, கருத்து வெளிப்பாடு தொடர்பான கேள்விக்கொத்து. Freedom of Opinion and Expression – Questionnaire

9.

பண்பாட்டு உரிமைத் தளம் தொடர்பான கேள்விக் கொத்து. Form to the Special Rapporteur in the field of cultural rights

10. நீதியாளர்கள், வழக்கறிஞர்களின் தன்னுரிமைச் செயற்பாடு தொடர்பான கேள்விக்கொத்து.Special Rapporteur on the independence of judges and lawyers

11. சமய உரிமை, நம்பிக்கை பற்றிய கேள்விக்கொத்து. Special Rapporteur on freedom of religion or belief

12.

அமைதியாகக் கூடவும் ஒருங்கிணைந்து செயல்படவும் உள்ள உரிமைதொடர்பில், தனியர் முறைப்பாடுகள் தொடர்பான கேள்விக்கொத்து. Freedom of Peaceful Assembly and Association – Individual Complaints

13.

பன்னாட்டுச் சம ஒழுங்கினையும் குடியாட்சியையும் மேம்படுத்துவது தொடர்பான வல்லுநர் கேள்விக்கொத்து. Questionnaire of the independent expert on the promotion of a democratic and equitable international order

நன்றி –பதிவு / www.pathivu.com

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/eezham-genocide32.jpg