(சட்டச் சொற்கள் விளக்கம்  201-205 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம்  206-210

206. absolute duty  பூரணத் தீர்வை

வரைக்கட்டு(நிபந்தனை) அற்ற தீர்வை

  முழுமைக் கடமை    

உடனிணைந்த உரிமைகளற்ற கடமை  

வணிகவியலில் தீர்வை வரியைக் குறிக்கிறது.  

நேரம், முயற்சி, செலவு ஆகியவற்றைப்பொருட்படுத்தாமல்  தொடர்புடைய ஒழுங்குமுறைக்கேற்பக் கடமையாற்றுதல்.  

அ.) பிற தீயரைத்தவிர்த்தல், ஆ.) மக்களைச் சமமாக மதித்தல், இ.) பிறரிடம் உள்ள நல்லனவற்றை ஊக்குவித்தல் ஆகிய முந்நிலைப்பாடும் உள்ளவற்றை முழுமையான கடமை என்பார்கள்.  

பூரணம் என்பது தமிழ்ச்சொல்லே. நிறைவு, முழுமை, மிகுதி, முடிவு எனப் பொருள்கள்.

மிகுதியான மதிப்புடைய 1 எண்ணுக்கு அடுத்து, 52 சுழிகள் இடப்படும் எண்ணின் மதிப்பு பூரி. பூரி எண் பயன்பாட்டில் இருந்த பொழுது முழுமையான எண்ணாக மதிக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் உயர்நத மதிப்புள்ள எண்கள் தமிழில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.
207. absolute estateமுழுவுரிமைச் சொத்து  

வரம்புகளோ கட்டுப்பாடுகளோ வரைக்கட்டுகளோ இல்லாத முழு உரிமையுடைய சொத்தாகும்.
208. absolute groundsமுழுமையான காரணங்கள்  

ஒன்றை ஏற்பதற்கு அல்லது மறுப்பதற்காள முழுமையான காரணங்கள்.
209. absolute immunityபூரண விடுபாட்டுரிமை  

அரசு அதிகாரிகளுக்கான ஒரு வகை இறையாண்மை.

தங்கள் கடமையை ஆற்றும் பொழுது ஏற்படும் சேதங்களுக்காகக் குற்றவியல் வழக்கு அல்லது உரிமையியல் வழக்கு தொடுக்கப்படுதிலிருந்து முழு விடுபாட்டுரிமை பெற்றவராவர்.  

Immunity என்றால் தடுப்பாற்றல். எனவே, மருத்துவத் துறையில் நோய்த்தடுப்பாற்றலைக் குறிக்கிறது. இத்துறையில் முழுத்தடுப்பாற்றலைக் குறிக்கிறது. சிலர் சட்டத் துறையிலும் இதே பொருளில் குறிப்பது தவறாகும்.
210. absolute interest  முழுமை நலன்  

முழுமை உரித்தம்

முழு நலன்


முழு ஆர்வம்   முழு வட்டி   ஒன்றின் மீதான அரைகுறை மனத்துடன் இல்லாத முழு அளவிலான நிறைவான ஆர்வத்தைக் குறிக்கிறது.  

வங்கியியலில் வட்டியை முழுமையாகச் செலுத்த வேண்டியது/செலுத்துவது குறித்துக் கூறுகிறது.    

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்