(சட்டச் சொற்கள் விளக்கம் 371-380 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

381. accommodateஇணக்குவி

இடங் கொடு  
382. accommodation  இடவசதி

உறையுள்;

தங்கியிருத்தல்  
கடனுதவி; பணஉதவி   ஏற்பமைவு, தகவமைப்பு, இசைவாக்கம்   குடியிருப்பு, அறை, வாழ்விடம், பணியிடம், தொழிலிடம் போன்றவற்றிற்குத் தேவையான வாய்ப்பு நலனை வழங்குவது.  

அவசரக்காலத்தில், கடனாக அல்லது பணமாக அல்லது வேறு வகையில் தேவைப்படுவதை அல்லது விரும்புவதை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடு.
383. accommodation acceptorகடனுதவி ஏற்பவர்;

பணஉதவி ஏற்பவர்.  

கடனைச் செலுத்துவதற்குக் கைம்மாறு கருதாமல் பொறுப்பளிக்கும் சட்ட பூர்வ ஏற்பாகும்.
384. accommodation billகடனுதவி உண்டியல்;

உதவியுண்டியல்  

ஒருவரால் மற்றவர்க்குப்பணம் திரட்டுவதை  அல்லது  கடன் பெறுவதைப் பொருட்படுத்தாமல் வரையப்படும் அல்லது ஏற்கப்படும் அல்லது மேற்குறிப்பிடப்படும்  ஓர் உண்டி,ஒரு வரைவு,  அல்லது குறிப்பு.

உண்டியலைப் பணமாற்றுச்சீட்டு என்றும் குறிக்கின்றனர். (ப.மா.ச. பிரிவு 59)
385. accommodation controllerஇடக் கட்டுப்பாட்டாளர்

இடக் கட்டுப்பாட்டு அலுவலர்  

இடவசதியைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்காக அமர்த்தப்படுபவர் இடக் கட்டுப்பாட்டு அலுவலர். (குடியரசுத் தலைவர் சட்டம் 2/1965, பிரிவு 2)  

இட வசதி என்பது வீட்டு வசதியையும் குறிக்கும். நில வசதியையும் குறிக்கும்.
386. accommodation facilityஇட வசதி  

தன்னக வசதி கொண்ட சிறு குடில்,

ஏந்தூர்தி(caravan)- வாய்ப்பு நலன்கள் கொண்ட அறைவசதி  முதலியன கொண்டதாகும்.  

இடவசதி என்பது, பொதுமக்கள் பணம் செலுத்தி வசதி வாய்ப்புகளை அடையக்கூடிய கட்டடம், வளாகம், பகுதி முதலியன ஆகும்.   அறைகள், படுக்கைகள் முதலியவற்றை விருந்தோம்பல் வசதியுடன் தருவதும் இடவசதியே.
387. accommodation partyஏற்புத் தரப்பு  

சட்டமுறை ஆவணத்திலோ வணிகத் தாளிலோ உடன்படிக்கையிலோ மற்றொரு தரப்பாருக்குப் பொறுப்பாக இருக்கும் வகையில் கையொப்பமிடுபவர் ஏற்புத் தரப்பு/ஏற்புத் தரப்பினர் ஆகும்.
388. Accommodation, houseவீட்டு வசதி அளித்தல்  

பணியாற்றுநருக்கு அவர் தனித்தோ குடும்பத்தினருடனோ தங்கி வாழ்வதற்கு மாத வாடகைக்கு இடவசதி அளித்தலாகும்.  

குடியிருப்புப் பகுதியில் வீட்டை  அல்லது மனையை விலைக்கு ஒதுக்கித் தருவதும் இடவசதியே.
389. Accommodation, subject to the availability ofவாய்ப்பிற்கு உட்பட்ட இடவசதி  

கிடைப்புத் தன்மைக்கேற்ப தரப்படும் இட வசதி.
390. Accommodativeஒத்துப்போகும் இயல்புடைய  

ஒருவரின் விருப்பம் அல்லது தேவைகளுடன் பொருந்தி இருப்பது.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்