பூவுலகு நெடுஞ்செழியன் நினைவேந்தல்
மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.00
சென்னை 4
காணொளி நேர்காணல்
தமிழகத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுதியவருள் முதன்மையானவராக அடையாளங்காணப்படுபவர் தோழர் நெடுஞ்செழியன்.
தாராளமய உலகமயப் பொருளாதார மாற்றங்கள், சூழலிய நிலைமைகளில் ஏற்படுத்திய எதிர்விளைவுகளை இடதுசாரிப் பின்புலத்தில் திறனாய்ந்தவகையிலும், சூழலியல் சிக்கல்களை சித்தாந்தப் பின்புலத்தில் அணுகியவகையிலும் இன்றளவிலும் அவரது சிந்தனைகள் மீள் வாசிப்பு கோருபவகையாகவே உள்ளன. அவ்வகையில் பசுமை இலக்கியத்திலும் சூழலியல் அமைப்புகளுக்கும் தோழரின் சிந்தாந்த/நடைமுறை பங்களிப்புகளை நினைவுகூர்வது அவரது நினைவு நாளில் அவருக்குச் செலுத்துகிற சிறந்த அஞ்சலியாக இருக்கமுடியும். அவர் கூறுவது போலப், பூவுலகின் அழிவுக்கு எதிராக ஒப்படைப்புடன் குரல் கொடுக்கிற சிறு துரும்பை எடுத்துப்போடுகிற அனைவருமே பூவுலகின் நண்பர்கள்தான்.
வாய்ப்புள்ள தோழர்கள் நமது பூவுலகின் நண்பனின் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பூவுலகின் நண்பர்கள்
Leave a Reply