தமிழ் இளையோர் அமைப்பு

பார்த்திபனைப் போல் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு அவரின் நினைவால் உதவிடுவோம்!

காந்தி தேசத்திடம் ஐந்து குறிப்பு வேண்டுகோளை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இலில்இருந்து பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் இன்னாசெய்யாமை(அகிம்சை) வழியில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்தார் திலீபன் அண்ணா. தொடர்ச்சியாக 12 நாட்கள் உண்ணாமலிருந்து இந்தியத் தேசத்திடம் இருந்து எந்த பதிலும் வராமல் தன்னுடைய உயிரினை  26.09.1987 அன்று காலை 10.48 மணிக்குத் துறந்தார். யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் துணைமாநாயகர்(லெப். கேணல்) திலீபன் அவர்கள் ஒரு மருத்துவப்பீட மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது வேறு எந்த இழப்பு மட்டுமல்ல. இது பல இதயங்களை வலிக்கும்,  ஆயிரக்கணக்கானோரின் உயிர்ப்பைத் தொடும் ஓர் இழப்பு. அவர் ஒரு போராளி, அவர் விடாமுயற்சியுடன் இருந்தார், அவருடைய வாழ்க்கை தமிழர்களின் மீட்பிற்கு முதன்மை  வாய்ந்ததாக இருக்க வேண்டும், நம்முடைய விடுதலையைப் பெறுவதற்காக. அவர் 12 நாட்கள் பட்டினி கிடந்தார், நாங்கள் எங்கள் வீட்டில் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் வாழ்வதற்காகத் தனது உயிரை ஈகம் செய்தார்.

இலட்சிய உறுதியின் உச்சக்கட்டமாக திலீபன் தன்னை அழித்துக் கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை; காலத்தால் சாகாத வரலாற்று மைந்தனாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

விடுதலையின் கனவுகளுடன் தன்னை உருக்கி ஒளிதந்த ஈகைப்பேரொளி, உண்ணாமல் தன் உயிரை ஈழ மக்களின் விடியலுக்காய் மறைத்த சூரியன் திலீபன் அவர்களின் நினைவாகப் புரட்டாசி 11, 2051 /  27 ஆம் நாள் ஞாயிறு காலை 11 மணி முதல் 2 மணி வரை இலண்டனின் 3 முதன்மை இடங்களில் தேவைப் படுபவர்களுக்கு உதவும் விதமாகத் தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில் இடம் பெறும் இந்த உணவு இரங்கல் திட்டத்துக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்ன வகையான உணவு வகைகள், பொருட்கள் தந்து உதவலாம் என்ற விவரம் பகிரப்பட்டிருக்கும் படத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த இக்கட்டான காலத்தில் உணவுக்கும்  இன்றியமையாப் பொருட்களுக்கும் அவதிப் படும் மக்களுக்கும் நாடு திரும்ப இயலாமல் துன்பப்படும் மாணவர்களுக்கும் இந்த உதவி சென்றடையும்.

பார்த்திபன் இப்பொழுதும் பசியுடன் தான் உள்ளான் அவன் நினைவில் பசியுடன் இருக்கும் உறவுகளுக்கு எம்மாலான உதவிகளைச் செய்வோம். இந்த நேரத்தில் திலீபன் அண்ணாவின் 12 நாட்களின் நிகழ்வுகளை ஆங்கிலத்தில் வாசிக்க கூடியவாறு மொழியாக்கம் செய்து எமது இணையத்தளத்தில்  ஏற்றியுள்ளோம். 27ஆம் நாள் இடம்பெறும் எமது நிகழ்வினைத் துண்டு வெளியீடு மூலம் அந்த அந்த இடங்களில் வசிக்கும் மக்களுக்குக் கொடுப்போம். அதில் திலீபன் அண்ணாவின் வரலாற்று இணைப்பும் அவர்கள் வாசிக்கக் கூடியவாறு செய்யப்பட்டுள்ளது.