தொல்காப்பிய விளக்கம் – 4

எழுத்துப்படலம்    –          பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்  (முந்தைய இதழின் தொடர்ச்சி)   நூன்மரபு   3.   அவற்றுள்     அ, இ,உ,     எ, ஒ என்னும் அப்பால்  ஐந்தும்     ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப   4. ஆ, ஈ, ஊ,  ஏ, ஐ     ஓ, ஔ என்னும் அப்பால் ஏழும்    ஈர்  அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப      பன்னிரண்டு உயிர்களையும் குற்றெழுத்து  நெட்டெழுத்து என இருவகைப்படுத்தினர். குற்றெழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரையும்…

பூவுலகம் மகிழ்ச்சியின் எல்லை….. -முனைவர். ப. பானுமதி

கேவலம் மரணத்திடம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாகப் பரிட்சித்துப் பார்.     இவை உடல்நலம் குன்றிய நிலையில் நியூயார்க்கு மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள்  தலைமையாளர் திரு வாசுபாய் அவர்கள் எழுதிய கவிதை வரிகள். துன்பங்களும் துயரங்களுமே வாழ்க்கை என்றிருந்த நம் எழுச்சிக் கனல் பாரதியும் மரணப் படுக்கையில் இருந்த போது, “காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்! . . .              …

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள் 2.

முதல் இதழ் (01.11.2044/17.11.2013) தொடர்ச்சி தமிழ்வழிப் பள்ளிகளின் வளர்ச்சியும் தளர்ச்சியும்   கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழிக் கல்வியை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டும் பள்ளிகள் நம் தமிழ் வழிப்பள்ளிகளும் தாய்த் தமிழ் பள்ளிகளும். அப்பள்ளிகளின் வளர்ச்சியைப் பற்றியும் அவற்றின் தளர்வு நிலைகளைப் பற்றியும் காண்போம். தொடக்கக் காலத் தமிழ்வழிப்பள்ளிகள் தொடக்க காலப் பள்ளிகள் நம் தாய்மொழியான தமிழில்தான் அமைந்தன என்றறிவோம். ஆங்கில மாயையும் அடிமை மனநிலையும், கல்வியை வணிகப் பொருளாய் மாற்றிய இழிவும் ஆங்கிலப் பள்ளிகளைத் தெருவெங்கும் தொடங்கச் செய்தன….

புரட்சிப் பூ புவியை நீங்கியது! மண்டேலாவிற்குத் தலைவர்களின் போலிப்புகழாரம்!

தென் ஆப்பிரிக்கக் கருப்பர் இன மக்களின் அடிமைத்தளையை உடைத்தெறிந்த தலைவர்  நெல்சன் மண்டேலா மறைந்தார். உலக மக்கள் பலரின் கண்ணீர் அஞ்சலிகளிடையே உலகத்தலைவர்களின் போலிப்புகழாரங்களும் சூட்டப்பட்டன. இன விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவரை தேசிய இனங்களை ஒடுக்கும் தலைவர்களும் இன வாழ்விற்காக வாழ்ந்தவரை இனப்படு கொலைபுரிந்தவர்களும் அதற்குத் துணை  நின்றவர்களும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவரை வீட்டுமக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும்  அறவழியில் இருந்து மறவழிக்கு மாறிய ஆயுதப்புரட்சியாளரை, புரட்சிக்கு எதிரானவர்களும் வாழ்த்துப்பாக்கள் சூடி அஞ்சலி செலுத்தினர்.  மண்டேலாவின் இயற்பெயர் உரோலிலாலா மண்டேலா(Rolihlahla Mandela) 1918 சூலை…

சாதிக்கொரு நீதி- சரிதானா? முறைதானா? அறம்தானா? – இதழுரை

     தண்டனை என்பது குற்றச்  செயலுக்கு என்பதே உலக நடைமுறை. அதுவும் “ஓர்ந்து கண்ணோடாது யார்மாட்டும் தேர்ந்து செய்”வதாக இருத்தல் வேண்டும் என்பதே தமிழ்மறையாம் திருக்குறள்(541) நமக்கிட்டுள்ள கட்டளை. ஆனால், யாரையேனும் தண்டித்தாக வேண்டும் என்பதற்காக அப்பாவிகளைத் தண்டிப்பதும் குறிப்பிட்ட யாரையாவது தண்டிக்கக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகளை விடுதலை செய்வதுமான போக்கே நம் நாட்டில் நிலவுகிறது.

தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்தவர்களுக்குக் கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணி

மொத்த  ஒழிவிடங்கள்: 402 அகவை வரம்பு : 30-11-2013  நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். . கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய  பிரிவில்  தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப் பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ. 14000 நேர்முகத் தேர்வு,   செயல்முறைத் தேர்வு நடைபெறும்  நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com> என்ற இணையத்தளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும். இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 15.12.2013

பாரத மின்நிறுவனத்தில்(BHEL) பொறியாளர், மேற்பார்வையாளர் பணியிடங்கள்

மொத்த  ஒழிவிடங்கள்:   38 அகவை வரம்பு 33 இற்குள் கல்வித்தகுதி பொறியாளர் பணி (15 இடங்கள்):  பொறியியல் துறையில் ஏதாவதொருபிரிவில் பட்டம்( B.E/ B.Tech) முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.43,550 மேற்பார்வையாளர் பணி(23 இடங்கள்):  60 %மதிப்பெண்களுடன் பட்டயம்  முடித்திருக்க வேண்டும். சம்பளம்:ரூ.21,690 இணைய வழி (ஆன்லைனில்) விண்ணப்பம் தொடங்கும் நாள் : 30.11.2013 இணைய வழி விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 21.12.2013 அச்சுப்படி அஞ்சலில் சென்று சேரக் கடைசி  நாள்: 28.12.2013 முழு  விவரங்கள் அறிய www.bhel.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

மீனியல் (Icthyology)

– முனைவர் இலக்குவனார் மறைமலை (சென்ற இதழின் தொடர்ச்சி) இக்கட்டுரையில் பயிலும் கலைச்சொற்கள்: குறுக்கம்-Depression;  நெருக்கம்-Compression;  தோள்துடுப்பு-Pelvic Fin;  கால்துடுப்பு- Pectoral Fin;  புறத்துடுப்பு-Dorsal Fin; அகத்துடுப்பு-Ventral Fin;  வால்துடுப்பு-Caudal Fin; இளகி-Plastic Fin; குறுக்கு வெட்டு-Transverse Section; உள்நுழைக்கோணங்கள்- Entering Angels;  வளைவும் இடப்பெயர்வும்-Curves and Displacement; துள்ளல்–Runs;  புதையிர்த்தடம்-Fossil

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…

நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் : வைகோ வெளியிட்டார்

சென்னையில் நீந்திக் கடந்த நெருப்பாறு – நூல் ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ அவர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை – எழும்பூரில் உள்ள தூய அந்தோணியார் அரங்கத்தில் நடைபெற்ற அரவிந்த குமாரனின் “நீந்திக் கடந்த நெருப்பாறு” எனும் நூலை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட,

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 3

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3. மன்பதை வாழ்க்கை தொல்காப்பியம் தமிழ் மக்களின் முன்னேறிய மன்பதையைப் பெரிதும் வெளிப்படுத்துகிறது. வாழ்க்கையின் இலக்கு இப்பொழுதும், இனி எப்பொழுதும் மதிப்பு மிக்கதாக மிகவும் முன்னேறிய நிலையினதாகக் காணப்படுகிறது. தொல்காப்பியர் வாழ்க்கையின் இலக்காகப் பின்வருமாறு கூறுகிறார். காமம் சான்ற கடைக்கோட் காலை, ஏமம் சான்ற மக்களொடு துவன்றி, அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே. (தொல்காப்பியம்: பொருள்.192) எனவே அனைவரும் பிறருக்கும், தமக்கும் பயன்தரக்கூடிய பெரும் செயல்களை அடைவதை இலக்காக கொண்டு அறவாழ்க்கை நடத்துவதையே…

மாவீரர் உரைகளின் மணிகள் சில!

(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற  விடுதலைத் தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.