மதுவிற்கு அடிமையாகும் மாணாக்கியர் – வைகோ கவலை

திருநெல்வேலி: “ஈரோட்டில் பள்ளி இறுதியாண்டில் படிக்கும் மாணவியர், மதுக் கடையில் மது அருந்திய செய்தி, தமிழகத்தின் எதிர்காலத்தை நினைத்து கவலையடையச் செய்திருக்கிறது’ எனக், கவலை தெரிவித்திருக்கிறார், ம.தி.மு.க.,வின் பொதுச் செயலர் வைகோ. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை: தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் அருகில்,  த.மா.வா.க.(‘டாசுமாக்’) மதுபானக் கடைகள் இயங்குகின்றன. ஆண்டுக்கு, 24 ஆயிரம் கோடி உரூபாய் வருமானத்திற்காகத் தமிழக அரசு, பண்பாட்டைக் குழிதோண்டி புதைத்து, சமூக அமைதியை கெடுக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு, மது காரணமாக…

10, 12 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணைகள்

கருத்தூன்றிப் பயிலுக! கவனமாக எழுதுக! சிறப்பாகத் தேர்ச்சி பெறுக! வாழ்வில் உயர்க! என மாணாக்கர்களை ‘அகரமுதல’ வாழ்த்துகிறது! + 2 தேர்வு அட்டவணை தேர்வு நேரம்:  காலை 10.00  மணி –  நண்பகல் 1.15 மணி   நாள் பாடம் மார்ச்சு 1    மொழித்தாள் 1 மார்ச்சு 4     மொழித்தாள் 2 மார்ச்சு 6     ஆங்கிலம் 1 மார்ச்சு 7     ஆங்கிலம் 2 மார்ச்சு 11     இயற்பியல், பொருளியல் மார்ச்சு 14     கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவு…

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் அரசு முனைப்புடன் வாதாட வேண்டும் : கலைஞர்

தமிழருக்கே உரிய சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு பணியாட்சியின்(நிருவாகத்தின்) கீழ்க் கொண்டு வந்து பணியாள்வதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசு மூத்த வழக்குரைஞரை நியமித்து, முனைப்புடன் வாதாட வேண்டும் என்று திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் நடராசர் கோயிலை அரசு நியமித்த அதிகாரிபணியாண்மைபுரிய உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கில், தமிழக அரசு சார்பில் வாதாடி…

பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு

  குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு…  போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…

தமிழர்கள் இந்தியரல்லரா? கேரள அரசால் ஏதிலிகளாகும் அட்டப்பாடித் தமிழர்கள் – தினமலர்

கோவை : கேரள மாநிலம், அட்டப்பாடியில், பல தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் நிலம் முதலான  சொத்துக்களைக் கவர்ந்து,  ஏதிலிகளாக்கி வெளியேற்றும் முயற்சியில், கேரள மாநில அரசு ஈடுபட்டிருப்பதாகக், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தின் வடகிழக்கில், மன்னார்க்காடு  வட்டத்தில் உள்ளது, அட்டப்பாடி. மேற்குத்தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனம்சார்ந்த இப்பகுதி சுற்றுலா இடமாகவும் விளங்குகிறது. கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, அட்டப்பாடியில்தான் ஆதிவாசிகள்  மிகுதியாக வசிக்கின்றனர்; இதன் எல்லை, ஏறத்தாழ 750 சதுரஅயிரைக்கோல்(கி.மீட்டர்). இங்கு இருளர், முடுகா, குரும்பா இனத்தவர் குறிப்பிட்ட…

காவிரிபாயும் மாவட்டங்களில் நீருரிமை ஆர்ப்பாட்டங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கழிமுக மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்     “இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!  அரசமைப்புச் சட்டவிதி 355-இன் கீழ் கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!”   “உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையைக் கைவிடு!” “இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே!” “தமிழக அரசே! கருநாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய எஞ்சிய தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை…

மாமூலனார் பாடல்கள் – 4

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   ங. அவர் பிரிந்தார் என்று கூறுவார் இலரே! தலைவி :  தோழி”! “அம்ம!” “ஊரிலுள்ள பெண்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா?” “அறிவேன் அம்ம! ஆடவர்க்குத் தொழில்தானே உயிர்; ஏதோ அலுவலாகத் தலைவர் சென்றால், தலைவி சில நாட்களுக்கு அவர் பிரிவைக் கருதி வருந்தாது பொறுத்திருத்தல் வேண்டாமா? இப்படியா வருந்துவது?” என்கின்றனர்.” “தோழி! அவர்கள் இரக்கமற்றவர்கள். உண்மை நிலை உணராது கூறுபவர்கள். ‘ஒரு பெண்ணை வீட்டில் வருந்த விட்டு விட்டு, அவர் இப்படிச் செல்லலாமா?’…

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ஆ. அரண்  சென்ற பகுதியில் “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு’’ என்று நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆகவே, இப் பகுதியில் ‘அரண்’ என்பதுபற்றி ஆராய்வோம்.  நாடுகள் தனித்தனியாக இருக்கும் வரையில், தனது அரசே பேரரசாக விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டியதுதான். ‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியன ‘அரண்’ எனப்படுகின்றன. திருக்குறள் இயற்றப்பட்ட காலத்தில் அரணாய் இருந்தவை இக்காலத்திற்கு…

சடுகுடு – வெற்றிச்செழியன்

  சடுகுடு ஆட்டம் ஆடு – நம்                 உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம்                 மண்ணை மீட்டிடப் பாடு – 2    (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ                 சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம்                 பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2        (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ                 எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன்                 தோல்வியை அவரிடம்…

எந்நாளோ? – இறைக்குருவனார்

  கனலுகின்ற உள்ளக் கனவெல்லாம் நனவாகிப் புனலுறுபூம் பொய்கையெனப் பொலியுநாள் எந்நாளோ? அந்தமிழாம் நந்தாயை அரியணையின் மேலிருத்தி வெந்திறல்சேர் பெருமையுடன் விளங்குநாள் எந்நாளோ? கல்விக் கழகமெலாங் கவின்றமிழே கமழ்வித்துப் பல்கலையும் நந்தமிழர் பயிலுநாள் எந்நாளோ? திருநெறியாஞ் செந்நெறியின் திறனெல்லாம் உலகறிந்தே அருமையுணர்ந் ததன்வழிவாழ்ந் தகமகிழ்தல்  எந்நாளோ? அடிமைவிலங் கொடித்தே அரியணையில் நந்தமிழன் முடிபுனைந்து கொடியுயர்த்தி முழங்குநாள் எந்நாளோ? கொத்தடிமை யாங்கறையைக் குருதிகொண்டும் நாங்கழுவி முத்தமிழின் சீர்மை முழங்குநாள் எந்நாளோ? நாடும்இனமும் நன்மொழியும்  நந்தமிழர் பீடும் பெருமையுமாய்ப் பிறங்குவித்தல் எந்நாளோ? உழைத்தும் பயன்காணா(து) உலைவுறு நெஞ்சினரெல்லாம்…

அயல்மொழி எதற்கடா தமிழா?

– கலைமாமணி கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   அன்னைத் தமிழில் அனைத்தும் இருக்கையில் அயல்மொழி எதற்கடா? – தமிழா அயல்மொழி எதற்கடா? முன்னைய மொழியாம் மூவா மொழியெனும் முத்தமிழ் நமதடா! – அது எத்துணைச் சிறந்ததடா! வீட்டிற்கொரு மொழி நாட்டிற்கொரு மொழி ஆட்சிக்   கொரு மொழியா? -வழி பாட்டுக் கொரு  மொழியா?   பாட்டிற்கொரு மொழி படிப்புக்கொரு மொழி பலமொழி எதற்கடா? – தமிழா பலமொழி எதற்கடா? தமிழில் பேசு தமிழில் எழுது தமிழில் பாட்டிசைப்பாய் – இன்பத் தமிழில் வழிபடுவாய்! தமிழில் கல்வியைக் கற்பதே…

வழி சொல்வீர்! – தங்கப்பா

  உப்பினிலே உப்பென்னும் சாரம் அற்றால்   உலர் மண்ணின் பயன்கூட அதனுக்கில்லை குப்பயைிலே கொட்டி அதை மிதித்துச்செல்வார்!   குணம்கெட்ட பொருளுக்கு மதிப்பும் உண்டோ?   தமிழன்பால் தமிழின்றேல் அவனும் இல்லை   தலைநின்றும் இழிந்தமயிர் ஆவானன்றே! உமிழ்ந்திடுமே நாய்கூட அவன் முகத்தில்.   உணராமல் தமிழ்மறந்து கிடக்கின்றானே!   பிறவினத்தர் தம்மைத்தாம் காத்துக் கொள்ளப்   பேதையிவன் எலும்பில்லாப் புழுவேயானான்! மறவுணர்ச்சி முழுதழிந்தான்;  மானங்  கெட்டான்;   வன்பகையின் கால்கழுவிக் குடிக்கின்றானே!   நெருப்பிருந்தால் சிறுபொறியும் மலைத்தீ யாகும்   நீறாகிப்…