நாணுத்தக உடைத்தன்றோ? – பேராசிரியர் சி.இலக்குவனார்

  இளங்கலை வகுப்புக்களில் தமிழ் வழியாகப் படித்தற்கு  மாணவர்கள் முன்வரவில்லையாம். அதனால் தமிழ் வழியாகப் படிக்கும் திட்டத்தைச் சில கல்லூரிகளில் கைவிடப் போகின்றனராம். தமிழ்நாட்டில், தமிழர்கள் தமிழை ஆட்சிமொழியாகக் கொண்டுள்ள அரசில் தமிழ்வழியாகப் படிக்க மாணவர்கள் விரும்பவில்லையென்பது காணுங்காலை நாணுத்தகவுடைத்தன்றோ?   மாணவர்கள் ஏன் விரும்பிலர்? பள்ளியிறுதித் தேர்வு வரையில் தமிழ் வழியாகப் படிக்கும் மாணவர்கள் கல்லூரியில் சென்றவுடன் தமிழ் வழியாகப் படித்தலை வெறுப்பார்களா? மாணவர்கள் வெறுக்கவில்லை; அதனை விரும்புகின்றனர். அங்ஙனமாயின் தமிழ் வழிப் பயிலும் வகுப்புகளுக்கு அவர்கள் ஏன் சென்றிலர்?  தமிழ்நாட்டு அரசு,…

பூங்கோதை 5 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 25, 2045 / 08 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘கண்ணம்மா அவள் கைகளை நன்றாகப் பிடித்துக் கொள். அவள் உண்மையிலேயே ஒரு காட்டுப்பூனையாக மாறிவிட்டாள்.’’ ‘‘வெட்கமில்லை’ ஒரு ஆண்பிள்ளையோடு சரியாக மல்லுக்கு நிற்கிறாயா? அதுவும் எனக்குக் கஞ்சி ஊற்றி வளர்க்கிற அந்தப் புண்ணியவதியின் மகனை அவர் தானே இந்த வீட்டுக்கே தலைவர்’’ என்று கூறினாள் கண்ணம்மா. ‘‘தலைவர்! அவர் இந்த வீட்டுக்குத் தலைவராக இருக்கலாம். ஆனால் எனக்கு இல்லை. நான் என்ன ஒரு பணிப்பெண்ணா?’’ ‘‘இல்லை; அதை விட ஒரு படி…

தமிழ் இணையக் கல்விக் கழகம் – தொடர்சொற்பொழிவு 2

தமிழ் இணையக் கல்விக் கழகம்   தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உயர்திரு சுவாமிநாதன் அவர்கள் (புதுகோட்டை)   புதுக்கோட்டை மன்னர்கள் வராறுகள் பற்றி நீண்ட பொருள் மிகு சொற்பொழிவு  நிகழ்த்தினார்.   வந்திருந்த அனைவருக்கும் புதிய புதிய செய்திகள் வரலாற்று உண்மைகள் தெரிய வாய்ப்புகள் ஆயிற்று   மன்னர்களின் பரம்பரை மட்டுமல்லாது அங்குள்ள கோயில்களின் வரலாறு, தொன்மம் வேளிர்களின் கோயில்கள்,  சமணக் கோயில்கள் எனும் பலவகையான பொருள்கள் பற்றி சிறப்பான கருத்து வைப்பு படங்ககளுன் நல்  விருந்தாக அமைந்தது இந்நிகழ்வு.   தரவு :…

(முதன் முதலாக) உலகத் திருக்குறள் மாநாடு!

முதன் முதலாக  உலகத் திருக்குறள்  மாநாடு!    இலக்கியக் கூட்டங்களுக்கு நுழைவுக் கட்டணம் 10 டாலர்! உணவு வழங்கப்படும், ஆனால் கட்டணம் உண்டு! கேள்வி-பதில் நேரம் முடிந்துவிட்டால் அடுத்த நாளும் கூட்டம் தொடரும்! இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் யார் வருகிறார்கள் 20- 30 பேர் வந்தாலே பெருங்கூட்டம் என அங்கலாய்த்துக் கொள்ள வேண்டிய சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறதென்பது நூறு சதவிகிதம் உண்மை. ஆனால், ஆசுதிரேலிய நாட்டின் தலைநகரான சிட்னியில் கடந்த ஏப் பிரல் மாதம் உலகத் திருக்குறள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றோர்…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) 50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,      பதிகம் 24-25   51.  மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் –  சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம்  97-98     52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139   53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டுஇனிது…

மாண்புமிகு தமிழக முதல்வரை ‘அகரமுதல’ பாராட்டுகிறது.

    மாநில முதல்வர், தலைமையாளரைச் சந்திப்பதும் மாநிலநலன்களுக்கான வேண்டுகைகளையும் நிதித் தேவைகளையும் தெரிவிப்பதும் வாதாடிப் பெறுவதும் இயல்பான ஒன்றுதான். அந்த வகையில், நரேந்திரர் தலைமையாளராகப் பதவியேற்றதும்  தமிழக முதல்வர்  (வைகாசி 20, 2045 / சூன் 3, 2014 அன்று) அவரைச் சந்தித்துள்ளார். தமிழ் மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக ஏறத்தாழ 64 பக்க முறையீட்டை அளித்துள்ளார். தமிழ்நாட்டில் வேண்டப்படுவனவற்றைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்ற உதவுமாறு வேண்டுவது வாலாயமான ஒன்றுதான். இவைபோல், முல்லை-பெரியாறு, காவிரிநீர்  முதலான அண்மை மாநிலத்துடனான சிக்கல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். இவற்றை…

126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்

  சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்;  மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல;  பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன….

தனித்தமிழ்நாடு இயலும் – சிவா அய்யாதுரை நேரலை உரை

சிவா அய்யாதுரை – தமிழ்நாடு தனி நாட்டிற்கான முதல் இணையத்தள நேரலை உரை – தமிழாக்கம்   இந்திய நேரப்படி 05-சூன்-2014 இரவு 9.30 மணிக்கு  அவரது நேரலைஉரை தொடங்கியது. இந்த நேரலையின் தொடக்கம் முதல் இறுதி வரை அவர் முழுதும் ஆங்கிலத்திலேயே அவரது உரையை தொடர்ந்தார். அதனால் எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக நாம் இதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவிட்டுள்ளோம். அவரது இந்த நேரலை நிகழ்ச்சியானது இரு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பாதி அவரது தமிழ்நாடு தனிநாடு என்பதற்கான  தேவையையும்…

தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – முற்றுகைப் போராட்டம்

அன்புடையீர்! நேற்று இலங்கையில்… இன்று இந்தியாவில்… தொடர்வண்டித் துறை வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பதைக் கண்டித்து தொடரி வேலைவழங்கு கழகம்(ஆர் ஆர் பி) – தேர்வு மையம் முற்றுகைப் போராட்டம் தொடர்பான துண்டறிக்கை இணைத்துள்ளேன்.  பார்க்க.. படிக்க.. பரப்புக… ப.வேலுமணி   9710854760

செங்கொடி ஊடகம் (செங்கொடிமீடியா டாட் காம்) புதிய இணையத் தளம்

கவிஞர் காசி ஆனந்தன் தொடங்கி வைத்தார்! செங்கொடி வெளியீட்டு நடுவத்தின், sengodimedia.com என்ற இணைய தளம் இன்று (7.6.2014) உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இணையப் பயன்பாடு, இணைய வழி வணிகம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே  கொண்டே வருகிறது. இக் காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணையம் மூலம் ஒன்றிணைப்பதும்,  இணையவழி வணிகத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்துவதும் இன்றியமை யாதது. இதனடிப்படையில், செங்கொடி வெளியீட்டு நடுவம் என்ற தயாரிப்பு நிறுவனம் sengodimedia.com என்ற இணையத் தளத்தை உருவாக்கி உள்ளது….

தென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு 2014

  தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து தென்மார்க்கில் வாழும் தமிழ்ச்சிறார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மாலதி தமிழ்க்கலைகூடம் தமிழ் மொழியைக் கற்பித்துவருகிறது. வழமைபோன்று இவ்வாண்டும் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் தமிழ்மொழிக்கான புலன்மொழி வளத்தேர்வு 01-06-2014 அன்றும் எழுத்துத் தேர்வு 07-06-2014 அன்றும் தென்மார்க்கின் பல பகுதிகளிள் நடைபெற்றது.   இத்தேர்வு தென்மார்க்கிலுள்ள 16 தேர்வுநிலையங்களில் நடைபெற்றது. இத்தமிழ்மொழித் தேர்வுக்கு 900 மேற்பட்ட மாணவர்கள் தோற்றினார்கள். இவர்கள் யாவரும் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியுடனும் இத்தேர்வை எழுதினார்கள்.

ரோசா தமிழ்ப்பெயரா? – தமிழக அரசியல்

  சூன் 5-ஆம் நாள் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்த நான்கு சிறுமிகளுக்கு, கலைஞர் தமிழ்ப்பெயர் சூட்டினார் என்று முரசொலி செய்தி வெளியிட்டிருக்கிறது. நான்கு சிறுமிகளுக்கும்   ரோசா(ரோஜா), மல்லி, அல்லி, முல்லை, என்று பெயர் சூட்டினாராம் கலைஞர். இந்நிலையில் ரோசா என்பது தமிழ்ப்பெயரா என்று சருச்சையை க் கிளப்பியிருக்கிறார் தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவரான திருவள்ளுவன் இலக்குவனார். “தமிழில் ‘ரோ’ என்ற எழுத்தில் தொடங்கும் சொல்லே கிடையாது. ரோசா(ஜா) என்பது தமிழ்ப்பெயர் அல்ல. ரோசாப்பூவும் தமிழ்நிலத்தைச் சேர்ந்தது அல்ல. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் சொன்ன 99 பூக்களின்…