சிரீஇராமகிருட்டிண விசயம் – சிறுகதைப் போட்டி

  சிரீஇராமகிருட்டிண மடத்தில் இருந்து வெளியாகும் சிரீஇராமகிருட்டிண விசயம் பத்திரிகை நூற்றாண்டை நோக்கி நடைபோடுகிறது. இதனை முன்னிட்டு, இந்த இதழ், சிறுகதைப் போட்டியை நடத்துகிறது. மொத்தப் பரிசுத் தொகையாக ரூ.34,000 அறிவிக்கப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அந்த இதழின் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:   பகவான் சிரீஇராமகிருட்டிணர், அன்னை சிரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் எண்ணற்ற மகான்கள், உலகளாவிய மனிதநேய அருளாளர்களின் வரலாறுகள், அவர்களது அறிவுரைகள் மற்றும் நமது சாத்திரங்களின் அடிப்படையில் கரு உண்மை; உரு கற்பனை என்ற வடிவில் சிரீஇராமகிருட்டிண விசயத்தில்…

புத்தர் தென்தமிழ் தெரிந்தவரே!

கௌதமபுத்தரின் வாழ்க்கைக் குறிப்புகளைக் கதை கோப்புடன் கூறும் இலலிதாவித்தாரம் என்னும் வடமொழி வரலாற்று நூலொன்றினுள் கௌதமபுத்தர் தம் இளமையில் கற்றறிந்த மொழிகளுள் திராவிடம் அல்லது தமிழ் எனப்படும் மொழியும் ஒன்றெனக் குறிக்கப்படுகிறது. இந்நூல் சீனமொழியுள் கி.பி. முதல் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதென்றும் ஆசிரியர் ஐசக்தம்பையா தாம் எழுதியுள்ள சிவனடியாரின் அருட்பாக்கள் என்னும் ஆங்கில நூலில் குறிக்கின்றார். –          குறள்நெறி: ஆனி 32, 1995  / 15.07.64

திருக்குறளும் பொது நோக்கமும் 1

– ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்   சமரசமும், கடவுள் திருமுன் அனைவரும் சமமே என்னும் பொது நோக்கமும் நம் நாட்டில் பேசப்பட்டு நகரங்களில் மட்டுமன்றி சிற்றூர்களிலும் காட்டுத் தீயே போல் பரவி மக்களிடையே உணர்ச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணிவரும் இக்காலத்தில் ‘பொதுமறை’யாகிய திருக்குறளில், இந்நோக்கம் அமைந்திருக்கும் விதத்தை நூல் முழுவதும் பொதுவாக நோக்கிக் கண்டறிவது சாலவும் பொருத்தமுடையதேயாம்.   இருவகைச் சுவைகள் ஏற்ற அளவிற் கலந்து ஒத்து இயங்குங்கால் ஒருவித புதுச்சுவை தோன்றிச் சுவைப்போர்க்கு மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். அதேபோன்று ஒரு…

பாரதப் பண்பாடு எது? – வை.தட்சிணாமூர்த்தி

  சென்ற ஆண்டிலிருந்து இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு என்று ஏதம் வந்துவிடுமோ என்ற ஐயப்பாடு பெரிய இடங்களில் மிகுந்து விட்டது. பிரிவினைத் தடைச் சட்டம் மற்றும் சில வரையறைகள் அதன் விளைவே, பூவியல் அமைப்பை ஒட்டி இந்தியா ஒரு நாடுதானா இல்லையா என்ற ஆராய்ச்சியில் நெடுநாட்களுக்கு முன்பே மேலைநாட்டு பூவியல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். சர். சான் சிடார்ச்சி என்னும் ஆங்கிலேயப் பூவியல் ஆராய்ச்சியாளர் போன்றோர் ‘‘இந்தியா பல நாடுகளின் கூட்டேயன்றி ஒரே நாடு அன்று’’ என்பர் வின்சன்ட் சிமித்சிசோம் போன்றோர் இந்தியா…

தமிழ்மொழி – தமிழ் நூல்கள் தனிச்சிறப்பும் திருக்குறள் அறப்பெரும் சிறப்பும்

  – தூய தமிழ்க் காவலர் அண்ணல்தங்கோ –  திருப்புகழ் இசைப்பா 1. உலக முதல்மொழி! நமது தமிழ்மொழி! உரிமை தரு மொழி! உயர்வு பெறு மொழி! மலரும் அறிவெழில்! பொழியும் நறுமொழி – மலைபோல 2. மணிகள் ஒளிதிகழ் அரிய அறமொழி! மகிழப் பலகலை உணர்வுதரு மொழி! மருவும் உயிரெலாம் பயிலவரும் மொழி! – வளம்நாடும் 3. பலநல் லறிவுளோர் பரவும் பெருமொழி! பயனுணரும் கலை அறிஞர் புகழ்மொழி! பரிவோ டருள்புரி பழமை(த்) தமிழ்மொழி! – பயில்வோர்கள் 4. பழைய குறை –…

பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’   ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…

திருக்குறள் வட சொற் கலவாத தூய தமிழ் நூலாகும்

செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார்   ஒரு மொழியாளர் இன்னொரு மொழியாளருடன் கூட்டுறவு கொள்ளுங்கால் இருசாரார் மொழிகளின் சொற்களும் அயலவர் மொழிகளில் கலப்புறுதல் இயற்கை. அக்கலப்பின் மிகுதியும் குறைவும் அந்தந்த மொழியின் வளத்திற்கு ஏற்ப அமையும், சொல்வளம் குறைந்த மொழி, சொல்வளம் நிறைந்த மொழியிடம் கடன் பெறும்.   இமயம் முதல் குமரி வரை வழங்கி வந்த தமிழோடு முதன்முதல் கூட்டுறவு கொண்டது ஆரியமே. ஆரியத்தின் கலப்பாலேயே தமிழ்மொழி பல்வேறு மொழிகளாகப் பிரிவுபட்டது. பரத கண்டத்தின் வடபகுதி (விந்தியத்திற்கு வடக்கு)யில் ஆரிய மொழிக் கலப்பு…

பூங்கோதை 4 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)   காளையப்பனுக்குத் தன் தாயினிடத்திலோ, தங்கைமாரித்திலோ மிகுதியான பற்று இருந்ததென்று கூறமுடியாது; ஆனால் பூங்கோதையினிடத்து அவனுக்கு அருவருப்பு மிகுதி என்பது மட்டும் உறுதி. தொடர்ந்து அவளுக்குத் துன்பங் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவனுடைய குரலைக் கேட்ட அளவிலேயே பூங்கோதையின் நாடி நரம்புகளெல்லாம் ஒடுங்கிவிடும். அவனுடைய கொடுமைகளை யாரிடத்திலே சென்று முறையிடுவது? அவன் பூங்கோதையை அடித்தாலும் மிதித்தாலும், உதைத்தாலும் அவனுடைய தாயாருக்குக் கண் தெரியாது; அவன் அவளை எவ்வளவு இழிவாகத் திட்டினாலும் அவளுக்குக்…

மொழித்திற முட்டறுத்தல் – 4 பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர்

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி)     ஒரு மொழி நீண்டகாலம் மாறாத நிலையிலிருப்பதற்கு அதன் எழுத்தமைப்புப் பெரிதும் உதவுகின்றது. தமிழில் 12 உயிர்களும், 19 மெய்களும், 3 சார்பெழுத்துக்களும் உள்ளன. மெய்களில் மேல்லெழுத்தாறும் வல்லெழுத்தாறின் பிறப்பிடங்களிலேயே பிறந்து தலைவளியுடன் மூக்கு வளியாப் புறப்பெற்று வல்லெழுத்துக்களுக்கு நேரிய இனவெழுத்துக்களாய் அமைந்திருத்தலால் ஒரு வகையில் மெய் 12 எனவும் கூறலாம். இவ்வாறு கொள்ளின் 12 உயிர்களுக்கு 12 மெய்கள் அமைந்திருத்தல் மிகவும் பொருத்தமாகும். உடல்மேல் உயிர் வந்தொன்றுவது…

கலப்பினால் வரும் கேடு! – நெல்லை ந.சொக்கலிங்கம்

மறுமலர்ச்சி இயக்கம்:   மனிதன் பண்பாடு பெற்ற நாள் தொட்டுப் பயன்பட்டு வரும் கருவி மொழி, நாட்டிற்கேற்பவும், சூழ்நிலைக்கேற்பவும் மொழிகள் வேறுபட்டு நிற்கின்றன. மனிதன் எப்படித் தனித்து வாழவியலாதோ அது போன்றே மொழியும் தனித்து வாழவியலாது என்பது ஓரளவிற்குப் பொருந்தும். இருப்பினுங் கூட கூடுமான வரை தனித்து – அதாவது தூய்மையுடன் இயங்க முடியும். ஆனால் சிலர் கூறுகின்றார்கள். வடமொழி செத்தொழிந்தது அதன் தூய்மைப் பண்பினால்தான் என்பர். மொழி நூலறிஞர்களின் கருத்துப்படி ஒரு மொழி தன் தூய்மையைப் பாதுகாத்ததனால் அழிந்து விடாது என்பதாகும். வடமொழி…

மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம் ஆண்டு விழா

  சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை மெரினா வளாகம்,  சென்னை – 600 005. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை 200 –ஆம்   ஆண்டு விழா நாள் : வைகாசி 28, 2045 /11-06-2014 புதன் கிழமை, நேரம்: காலை 10.30 மணி இடம்: பவளவிழாக் கலையரங்கம், மெரினா வளாகம். வரவேற்புரை: பேராசிரியர் அரங்க. இராமலிங்கம், தலைவர், தமிழ் மொழித்துறை. தலைமை : பேராசிரியர்  இரா. தாண்டவன் அவர்கள் மாண்பமை துணைவேந்தர், சென்னைப் பல்கலைக்கழகம். சிறப்புரை : திருமிகு கே. வைத்தியநாதன் அவர்கள் ஆசிரியர்…

மாமூலனார் பாடல்கள் – 21 : சி.இலக்குவனார்

(வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) உக. “சில நாள் பொறுத்திருப்பாய்” – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்     தலைவனும் தலைவியும் பகற்குறியினும் இரவுக் குறியினும் கண்டு மகிழ்ந்து கலந்து உரையாடிக் காதலைப் பெருக்கிவிட்டனர். தலைவியின் தாய் தலைவியின் ஒழுக்கத்தை உற்று நோக்கிக் கண்ணும் கருத்துமாய்க் காவல்புரிந்தாள். சிறைகாப்பு எவன் செயும். தலைவி சிறைப்பட்டவள் போல் ஆனாள். தலைவன் இந்நிலையை உணர்ந்து தலைவியைத் தன் ஊர்க்கு அழைத்துச் சென்று மணப்பதாகக் கூறினான். அவ்விதம்…