இலக்கு – கூட்டம் : ஆடி 27, 2045 – 12.08.2014

வணக்கம்.. இந்த மாத இலக்கு – கூட்டம். ஆடி 27, 2045 – 12.08.2014- மாலை 6.30 மணிக்கு,  பாரதியவித்யா பவன் சிற்றரங்கில்  நிகழ இருக்கிறது..  தங்களோடு, இளைய தலைமுறையையும் அழைத்து வந்து, நிகழ்ச்சியைச் சிறபிக்க  வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்.. இலக்கியவீதி இனியவன்.. (நெறியாளர் இலக்கு..)  ப. சிபி நாராயண்.. (தலைவர் இலக்கு.) ப. யாழினி.. (செயலர் இலக்கு..)​​

மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) ௩௰ “உடையும் என் உள்ளம்” – தலைவன் -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்   எல்லா வகையிலும் மேம்பட்டு விளங்கிய தலைவனும் தலைவியும் தம்முள் காதலித்தனர். ஒருவர்கொருவர் வாழ்க்கைத் துணைவர்களாக இருப்பதற்கு உறுதிசெய்து கொண்டனர். பிரிந்து அவர் அவர் வீட்டிற்குச் சென்றனர். தலைவன் தலைவி நினைவோகவே இருந்தான்; தலைவி தலைவன் நினைவாகவே இருந்தாள். தலைவன் காதலியை அடைந்து காதல் உரையாடிக் களிப்பெய்தக் கருதினான். ஒரு பெண் – மணமாகாத பெண்…

“நான் முகவரி அற்றவளா?” – புத்தகம் வெளியீட்டு விழா

    நான் முகவரி அற்றவளா? …. அன்று நடைபெற்றது. செல்வி மாளவி சிவகணேசன் அவர்களின் பாடலுடன் நிகழ்வுகள் தொடங்கின. புத்தகவெளியீட்டை வைகோ, காசி ஆனந்தன் ஆகியோர் அறிமுகம் செய்தனர். புத்தகத்தை வைகோ வெளியிட அதனை இல.கோபாலசாமி பெற்றுக்கொண்டார். அருணகிரி, இளங்கோவன் ஆகியோருக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார். மாளவிகாவின் தந்தை மருத்துவர் சிவகணேசன் வைகோவிற்குப் பொன்னாடை அணிவித்தார். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் புத்தக ஆய்வுரை ஆற்றினார். வைகோ வின் சிறப்புரைக்குப்பின் ஓவியர் சந்தானம் உரையாற்றினார். அருணகிரி நன்றி நவின்றார்.

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்

                                 – அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு –                வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து   உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…

தொடரித்துறையில் வேலைவாய்ப்பு – எழுச்சிப் பேரணி

ஒருங்கிணைந்த தொடர்வண்டிப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறையில் பயிற்சி முடித்த தமிழர்களுக்கு வேலை வழங்கக்கோரி   தமிழர் எழுச்சி இயக்கம் நடத்திய கோட்டை நோக்கி மாபெரும் பேரணி! ஒருங்கிணைந்தரெயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எப்) மற்றும் தென்மண்டல தொடர்வண்டித்துறையில் பயிற்சி முடித்த 5000 தமிழர்களுக்கு உடனடியாக வேலை வழங்கவேண்டும், ஐ.சி.எப் மற்றும் தென்மண்டல தொடர்வண்டித் துறை வேலைவாய்ப்புகளில் 70 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் நேற்றுஎழும்பூர் இராசரத்தினம் விளையாட்டுத் திடலில் தொடடங்கி  கோட்டைநோக்கிப்பேரணி நடைபெற்றது. பேரணியைத்தமிழர் எழுச்சி…

செஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி

(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை   நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது!    பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…