ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா

நன்னன் குடி நடத்திய நூல்கள் வெளியீட்டுடன் கூடிய ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா 2014 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 30 ஆம் பக்கல் அன்று புலவர்.நன்னன்  எழுதிய8 நூல்கள் வெளியீடும் மாணவர்களுக்கும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கும்பரிசளிப்பு விழாவும் இனிதே நடந்தேறியது.  நன்னன்குடிகடந்த11 ஆண்டுகளாகத்  தொடர்ந்து இவ்விழாவை நடத்தி வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது. இவ்விழாவிற்குக்  கம்பன் கழகத் தலைவரும்எம் சி ஆர் கழகத்தலைவருமாகிய இராம.வீரப்பன் தலைமைத் தாங்கி நூல்களைவெளியிட்டு பரிசுகளை வழங்கி  உரையாற்றினார். புலவர் நன்னன் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றும் விழாவின் நோக்கங்களைப் பற்றி…

மாமூலனார் பாடல்கள் 29: சி.இலக்குவனார்

(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி)   உகூ. “நாட்டனர் வாழி!”  -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தோழி : அம்ம! நின் காதலர் நின்னை விட்டுப் பிரியவே மாட்டார் என்றாய்! பிரிந்தாலும் விரைவில் வந்துவிடுவார் என்றாய், சென்றவரை இன்னும் காணமுடியவில்லையே. தலைவி: வராது என்ன செய்வார்? வருவார். தோழி: எப்போழுது? உன் அழகு எல்லாம் மறைந்து உன் உடல் இளைத்து உருமாறிய பின்பா? தலைவி: அப்படிக் கருதேல் அவர் அன்பின் திறம் நீ அறியாய்?…

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 126-150: இலக்குவனார் திருவள்ளுவன்

  (ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 126. அனைய திருப்பதிகம்உடன் அன்பு உறு வண் தமிழ் பாடி அங்கு வைகி நினைவுஅரியார் தமைப் போற்றி நீடு திருப்புலியூரை நினைந்து மீள்வார். –பெரியபுராணம்: 5. திருநின்ற சருக்கம் :22. திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்: 173   127 & 128. அரியானை என்று எடுத்தே அடியவருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத் தாண்டகச் செந்தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்று எவ் உலகும் விளங்கிய…

பன்னாட்டுக் கருத்தரங்கு

    அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பன்னாட்டுக் கருத்தரங்கு-தமிழறிஞர்கள்-எழுத்தாளர்கள் குறித்த பொருண்மையில் நூலாக்கப்பணி-ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று நூல்கள் எழுத அரிய வாய்ப்பு. பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.  தமிழ்ப்பணியின் தொடர்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்க. அழைப்பும் விவரங்களும் காண்க:   அறிவிப்பு மடல்   மேலும் தகவல்களுக்கு : முனைவர் அரங்க.பாரி(ஒருங்கிணைப்பாளர், 9842281957) முனைவர் ப.சு,மூவேந்தன்,(இணை ஒருங்கிணைப்பாளர்,) முனைவர் சா.இராசா (இணை ஒருங்கிணைப்பாளர் 9976996911,8680901109)    

உலக நட்பு நாள் வாழ்த்துகள் – சேது சுப்பிரமணியம்

   (ஆகத்து முதல் ஞாயிறு) சாதி, இனம் சாராது சமயம், மொழி பாராது நாடு, நிறம் நாடாது கல்வி நிலை காணாது செல்வநிலை தேடாது பாலினமும் பாராது ஊனங்களை உணராது குற்றங்குறை கூறாது எத்தனை இடர் வரினும் எள்ளளவும் மாறாது சொத்து சுகம் இழந்தாலும் சொந்த பந்தம் இகழ்ந்தாலும் தத்தளிக்கும் சூழ்நிலையில் தனது நிலை பாராது உள்ளமொன்றிப் பழகிடும் உன்னத நிலையிது கள்ளமின்றிப் பழகிடும் அற்புத உறவிது இவ்வுறவுக் கெவ்வுறவும் ஈடு இணை இல்லையே இவ்வுறவுக் கென்றேன்றும் வானம்தான் எல்லையே!  நட்புடன் சிலேடைச் சித்தர்…

செஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி

  (ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும்    சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…

மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…

இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் – 52, திருவாரூர்

இலக்கிய வளர்ச்சிக் கழகம், திருவாரூர் இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் – 52 த.ச.தமிழனார் விழா

தமிழ்மொழிக் கல்வி வீழுதடா மண்ணில்!- ச. சாசலின் பிரிசில்டா,

    தேடும் பொருள் கைவர  ஏற்றம் தரும் கல்வி  தலை முறைகள் கடந்து  திறமை ஊட்டும் கல்வி                                          இன்று வெறுமை யுற்று  சிறுமையுற்று வீழுதடா மண்ணில்!  சந்தையிலே கூவி விற்கும்  சரக்கு ஆனதடா கல்வி  சிந்தை உறைய வைக்குமளவில்  சிக்கலில் தமிழ்க் கல்வி  நாம்வெந்து நொந்து போனாலும் மீட்க வேண்டும் அதனை!  அறிவு மொழியாய் ஆங்கிலம்  நாட்டில் ஆனதடா மாயையாய்  அம்மா அப்பா எல்லாரும்  ‘மம்மி டாடி’ போதையாய்  தனியார்மயக் கல்வியில் தவிக்குதய்யா…

தமிழக உணர்விற்கு எதிரான ‘மெட்ராசு’ திரைப்படத்தைப் புறக்கணிப்போம்!

    தமிழ் மக்களுக்காக உருவாக்கப்படும் தமிழ்த்திரைப்படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் என்பது முறையான வேண்டுகோளே! ஆனால், திரைத்துரையினர் பலரும் இதற்கு மாறாகப் பிற மொழிகளில் தமிழ்ப்படங்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.   அடித்தளம், அரண்மனை, உ, உயிருக்கு உயிராக, எதிர்நீச்சல், களவாடிய பொழுதுகள், கோச்சடையான், கோவலனின் காதலி, சித்திரை திங்கள், சுற்றுலா, திருப்புகழ், நினைவில் நின்றவள், நெடுஞ்சாலை, நேர் எதிர், புலிவால், மாதவனும் மலர்விழியும், மாலை நேரப் பூக்கள், முறியடி, முன் அந்திச் சாரல், விடியல், விரட்டு, வெற்றி கொண்டான் எனத்…

74 ஆவது திங்கள் பாவரங்கம்

ஆடி 12, 2045 / 28.07.2014 புதுச்சேரி மாணவர் பொதுநலத் தொண்டியக்கம் 74 ஆவது திங்கள் பாவரங்கம் மரபுப் பா,புதுப் பா, துளிப்பா, மொழிபெயர்ப்புப் பா, சிறார் பா பாவரங்கம் மற்றும் கழக இலக்கியம் அறிமுகம் நடைபெற்றது. கலந்துகொண்டோர்: பாவலர் ஆலா, மஞ்சக்கல் உபேந்திரன், பைரவி, சோ.கு,செந்தில்குமரன், பரிதியன்பன், சி. வெற்றிவேந்தன், கதிர். முத்துரத்தினம், இரமேசு, அரச.மணிமாறன், உரு.அசோகன், இராச.முருகையன், தி.சி.செம்மல், கு.அ. அறிவாளன், கு.அ. தமிழ்மொழி, பெ.குமாரி மற்றும் புதுவைத் தமிழ்நெஞ்சன் தீர்மானம்: தமிழ்வழிக் கல்வியை மறுக்கும், இந்தி சமற்கிருதத்தைத் திணிக்கும், நடுவண்…