திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்

(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044.  குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும்,  வராதபடி கடிந்து விலக்குதல்   செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார்      பெருக்கம், பெருமித நீர்த்து.        செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம்,        இல்லார் முன்னேற்றம் பெருமையது.   இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா      உவகையும், ஏதம் இறைக்கு.        கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு,        ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள்.   தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…

தமிழ்நலப் பகுத்தறிவுக் கவிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் – 4: இலக்குவனார் திருவள்ளுவன்

  (அகரமுதல 95, ஆவணி 20, 2046 / செப்.06, 2015 தொடர்ச்சி)     4   ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்னும் தொடர் மக்கள் இடையே உலவினாலும் அதன் பொருள் யாருக்கும் புரிவதில்லை. உண்மையில் இவ்வரிகள் வால்மீகியால் இராமாயணத்தில் சொல்லப்பட்டதாகும். இராவணனின் எதிர்ப்பைச் சமாளிக்க இயலாமல் பின்வாங்கி ஓடும் வானரப் படையினர், தமக்குரியதல்லாத அயல்நாட்டை யார் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் அயலவர் நாட்டுப் போரில் மாள வேண்டும் என்று நொந்து கூறியதாகும். இதனை, யார் ஆண்டால்…

இலட்சுமி என்னும் பயணி – வாசிக்கவேண்டிய ஒரு நூல் : இரவிக்குமார்

பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவு  இலட்சுமி அம்மா எழுதிய ‘இலட்சுமி என்னும் பயணி’ என்ற தன்வரலாற்று நூல் ‘மைத்திரி புத்தகங்கள்’ என்ற புதிய பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.  தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது; மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது; அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க. -மார். (சிபிஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து…

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச அறியேன்நான் அல்லும் பகலும் கண்டவற்றை-என்…

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக              ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது – நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு      திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது.      இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு நல்ல நூல் என்பது அதனைப் படிக்கும் வாசகருக்கு, நாமும் இப்படி எழுத வேண்டுமென்கிற ஆசையைத் தூண்ட வேண்டும். இந்த ‘வடகரை’ நூலைப்…

தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை இராசபாண்டியன்

நாள்   : ஆவணி 25, 2046 / 11.09.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025.   வழங்கும்   தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-11 “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்னும் தலைப்பில் முனைவர் முகிலை இராசபாண்டியன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார்.   அனைவரும் வருக! அன்புடன் இயக்குநர் தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி…

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர்

 காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே! யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்! கடல் தின்றதில் கலங்காத நீ காற்று, புயலென வீசியதில்…

நயினைத்தவம் மணிவிழா

நயினைத்தவம். அவர்களின் மணிவிழா சென்னை மேற்கு மாம்பலம் ஆனந்து சந்திரசேகரரங்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆவணி 20, 2046 / செப்.09, 2015 காலை நடைபெற்றது. பெருங்கவிக்கோ வா.மு.சே.தலைமையில் கவிக்கொணடல் மா.செங்குட்டுவன், மேனாள் மாநகரத்தலைவர்(மேயர்) சா.கணேசன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கனடாநாட்டுத்தமிழ் .எழுத்தாளர் நயினைத் தவம் ஏற்புரையாற்றினார். தமிழ்ப்பணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். கவிச்சிங்கம் கண்மதியன் நன்றிநவின்றார். – மறைமலை இலக்குவனார்

தொல்காப்பியர் சிலை – எதுவும் சொல்ல வேண்டுமா?

தொல்காப்பியர் சிலை -உங்கள் கருத்து என்ன? தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை வார்ப்பாக்கத்திற்குச் செல்லக்கூடிய நிறைநிலையை எட்டியுள்ளது. இப்படங்களைப் பார்த்து மேற்கொண்டு செம்மையாக்கம்  தேவை யெனின் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். சற்றுப்  பெரிதாகக் காணச் சொடுக்கிப் பார்க்கவும் தொல்காப்பியர் சிலையமைப்புக்குழு