பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? – பாரதிதாசன்

வடமொழி எதிர்ப்பு பூசாரி கன்னக்கோல் வடமொழிக்குப் பொதுப்பணத்தைச் செலவழித்துக் கழகமெல்லாம் ஆரியர் அமைத்திடவும் சட்டம் செய்தார் ஐயகோ அறிவிழந்தார் ஆளவந்தார் பேசத்தான் முடிவதுண்டா? அஞ்சல் ஒன்று பிறர்க்கெழுத முடிவதுண்டா அச்சொல்லாலே? வீசாத வாளுக்குப் படைவீடொன்றா? வெள்ளியிறை பிடிஒன்றா வெட்கக்கேடே! வடமொழியைத் தாய்மொழிஎன் றுரைக்கும் அந்த வஞ்சகர், தம் இல்லத்தில் பேசும் பேச்சு வடமொழியா? பிழைப்புக்கு வாய்த்த தென்ன வடமொழியா? கிழமைத்தாள், நாளின் ஏடு வடமொழியா? எழுதும்நூல் பாடும் பாட்டு வடமொழியா? நாடகங்கள் திரைப்படங்கள் வடமொழியா? மந்திரமென்று ஏமாற்றத்தான் வடமொழிஎன் றால்அதைத்தான் மதிப்பாருண்டோ திரவிடரை அயலார்கள்…

மொழியுரிமை மாநாடு, சென்னை

  மொழி உரிமை மாநாடு – பொது நிகழ்வு     வணக்கம். எதிர்வரும் புரட்டாசி 02-03 / செப்டம்பர் 19-20   நாள்களில் நடைபெறவுள்ள, தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் நடத்தும் மொழியுரிமை மாநாட்டின் பொது நிகழ்வுக்குத் தங்களை அன்போடு அழைக்கிறோம். மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு கூட்டியக்க உறுப்பினர்களும் மொழிக்கொள்கை அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல். அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் அனைத்தும் மொழியுரிமையில் ஆர்வமுள்ள அனைவருக்குமான பொது நிகழ்வாகும்.   உள்ளரங்க நிகழ்ச்சி புரட்டாசி 02 / செப்டம்பர் 19, 2015 கவிக்கோ…