மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மதமான பேய், கல்விக்கூடங்களில் இருந்து விரட்டப்பட வேண்டும்!   நம் நாடு சமயச் சார்பற்ற நாடு என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மையில் இந்தியா பலசமயச்சார்பு நாடாக விளங்குகின்றது. இதுதான் கேடுகள் யாவினும் பெருங்கேடு விளைவிக்கின்றது. சமயச் சார்பு விடுமுறைகளை நீக்கிவிட்டு எந்தச் சமயச் சார்பு நிகழ்வாயினும் ஆட்சியில் உள்ளோர் பங்கேற்காத நிலை வர வேண்டும்; குடியரசுத்தலைவர், தலைமை அமைச்சர், முதல்வர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், என உயர்பொறுப்புகளில் இருப்பவர்கள் சமயத் தலைவர்களைச் சந்திக்கக்கூடாது; எதிர்பாராமல் சந்திக்கும் நேர்வு நிகழ்ந்தாலும் அதனை வெளிப்படுத்தி விளம்பரப்படுத்தக்கூடாது. அவ்வாறில்லாமல் வாக்காளர்களைக் கவர…

ஒட்டன்சத்திரம் அருகே கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

      ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.   திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு மலை அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் உள்ள பச்சைமலை அடிவாரத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் குழுவினர் ஆறுமுகம், பெருமாள், மனோசு குமார் ஆய்வு மேற்கொண்டனர்  அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள், ஆயுதங்கள், பானைகள், ஓடுகள் என மொத்தம் 64 கற்காலக் கருவிகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. இது குறித்து, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி…

பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி – இலக்குவனார் திருவள்ளுவன்

[நட்பு – பதிவு செய்த நாள் : 31/08/2012]                                                     குமரித்தமிழ் வானம் தமிழ்ப்பேரறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவுச் சொற்பொழிவு நாள்:  ஆவணி 6, 2043   * ஆக 22, 2012 * புதன் கிழமை மாலை 6.30 மணி இடம்:  தமிழ்வானம் அரங்கம்,  50/22,கணபதிநகர்,செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோயில் 629 002 வாழ்த்துரை –       இலக்குவனார் திருவள்ளுவன் பேராசிரியரால் தமிழ் மணந்த குமரி   குமரித் தமிழ் வானம் திங்கள் தோறும் அறிஞர்கள் நினைவாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தி வருவது பாராட்டிற்குரியது. இவ்வமைப்பின் இயக்குநர்…

எல்லாச் சொல்லும் தமிழ் குறித்தனவே! – இலக்குவனார் திருவள்ளுவன்

       உணவுப் பொருளாயினும் நாம் பயன்படுத்தும் பிற பொருளாயினும் நாம் தூய்மையையே விரும்புவோம். கலப்படம் கேடு தரும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். ஆனால் தாய்மொழியாகிய தமிழ் மொழியிலும் கலப்படம் கூடா என்பதை நாம் உணருவதில்லை. கலப்படச் சொற்களும் கலப்பட நடையும் நம்மை வாழ்விக்கும் எனத் தவறாக எண்ணி நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இத்தகைய கலப்பினால்தான் தன் பரப்பினை இழந்து துன்புறுகின்றது என்பதையும் புரிந்து கொள்வதில்லை. அதே நேரம் தூய…

தமிழ் இணையக்கல்விக்கழகம் : நோக்கும் போக்கும் 4 – இலக்குவனார் திருவள்ளுவன்

(அகரமுதல 94, ஆவணி 13, 2046 / ஆக.30, 2015 தொடர்ச்சி) 4 த.இ.க.க.வளர்ச்சிக்காக அமைக்கப்பட வேண்டிய குழுக்கள்: என்னென்ன குழுக்கள் தேவை எனப் பார்ப்போம். செம்மையாக்கக் குழு:    த.இ.க.கழகத்தின் பாடங்களில் தவறுகள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியர் காலம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு அடிப்படையில் எழுத்து வளர்ச்சி எனக் கூறுவது தவறான விளக்கம். கல்வெட்டில் உள்ளதுபோன்ற எவ்வரிவடிவ மாற்றமும் ஓலைச்சுவடிகளில் இடம் பெற்றதில்லை. “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என இலக்கண நூல்களே வரிவடிவ மாற்றமின்மையைக் குறிக்கின்றன. எனவே, இது போன்ற…

துலுக்கப்பயலே! 2 -வைகை அனிசு

  சன்னி-சியாக்கள்: உலகளவில் முசுலிம்கள், சன்னி, சியாக்கள் என இரு முதன்மைப் பிரிவுகளாக உள்ளனர். திருக்குர்ஆன், அகதீசு(ḥadīth , முகமது நபியின் கருத்துகள் ஆகிய வழிகாட்டலைப் பின்பற்றுபவர்கள் சன்னி முசுலிம்கள் எனவும், முகமது நபியின் மருமகன் இமாம் அலி மற்றும் தம் மரபினர்களின் அகதீசுகளோடு இசுலாத்தைப் பின்பற்றுபவர்கள் சியாக்கள் எனவும் உள்ளனர். தமிழகத்தில் முசுலிம்கள்: தமிழகத்தில் உள்ள முசுலிம்கள். நிலங்களுக்கு தகுந்தவாறுத் தொழிலைச் செய்தனர். அந்தத் தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டு அடையாளப்படுத்தினார்கள்.   இராவுத்தர், (இ)லெப்பை, மரக்காயர்,ஓசா எனத் தாங்கள் செய்த…

இனிதே இலக்கியம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

1. எங்கும் கலந்துள்ள இறைவன் கண்ணில் கலந்தான்; கருத்தில் கலந்தான்-என் எண்ணில் கலந்தே இருகின்றான்;-பண்ணில் கலந்தான்;என் பாட்டில் கலந்தான் -உயிரில் கலந்தான் கருணை கலந்து. எல்லாச் சமயத்தவரும் ஏற்கும் வண்ணம் பொதுநோக்கான இறைநெறிப்பாடல்கள் தமிழில்தான மிகுதியாக உள்ளன. இப்பாடலும்  அனைவரும் பாடுவதற்குரிய பொதுநிலைச் சிறப்பு உடையது. இறைவன்,  அருட்பார்வை உடைய கண்ணில் கலந்திருக்கின்றான்; நற்செயல்களுக்கு அடிப்படையான நல்ல கருத்துகளில் கலந்திருக்கின்றான்;  பிறர் நலம் பேணக்கூடிய உயர்ந்த எண்ணத்தில் கலந்திருக்கின்றான்; இசையாகிய பண்ணிலும் பாட்டிலும் கலந்திருக்கின்றான்;  அருள்உணர்வுடன் நம் உயிரிலும் கலந்துள்ளான். எல்லா இடங்களிலும் கலந்து…