சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்

சிறியன சிந்திக்கலாமா? சிந்தனையைச் சிதற அடிக்கலாமா?   திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம்.   சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் திறமையும் வாய்ப்பும் உள்ளவர்; காதலில் தோல்விகளைச் சந்தித்த பொழுதும் தாடி வளர்த்து ஊக்கமிழந்து சோர்வடையாதவர்; தன்னம்பிக்கை மிக்கவர். இத்தகைய…

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 2 – தொடர்ச்சி) 03     ஆண்மை கைக் கொள்!   உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும்.   அச்சத்தை விட்டிடடா – நல் ஆண்மையைக் கைக் கொள்ளடா இச்சகத்தினிமேலே நீ – என்றும் இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார்.   அச்சம் நீங்கினாயோ – அடிமை ஆண்மைத் தாங்கினாயோ (பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை) என்று அச்சம் நீங்க ஆண்மையைத் தாங்க வலியுறுத்துகிறார்….

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி “இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் – திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!” -கலைஞர் மு.கருணாநிதி (1945)

புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்

இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…

இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு

மார்கழி 05, 2046 /  திசம்பர் 21, 2015  நண்பகல் 2.00 சல்லிக்கட்டு, தமிழ்ப்பண்பாடு  தொடர்பில் இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு கி.வீரலக்குமி, தமிழர் முன்னேற்றப்படை

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11:   தொடர்ச்சி) 12   1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு  உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் செல்வர்; கோவை நகரைச் சார்ந்தவர். இவரை எதிர்த்து கருமவீரர் காமராசர் போட்டியிட்டார். காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவராய் விளங்கியவர். தமிழ்நாட்டு அமைச்சரவையை ஆக்கவும் நீக்கவும் ஆற்றல்…

காஞ்சி மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை 9ஆம் ஆண்டு விழா -போட்டிகள்

 <utpkaanchi@gmail.com> அன்புடையீர் வணக்கம் வாழிய நலத்துடன் உலகத் திருக்குறள் பேரவை  •காஞ்சிபுரம் மாவட்டம்•  9ஆம் ஆண்டு விழா -போட்டிகள் பொது: 1) கட்டுரைத் தலைப்பு – சமயம் கடந்த சமநீதி நூல் 2) மரபுக் கவிதைத் தலைப்பு – வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து 3) புதுக்கவிதைத் தலைப்பு – ஈரடியால் உலகளந்தான் கல்லூரி மாணவர்க்கு: 1) கட்டுரைத் தலைப்பு – இருளறுக்கும் மங்கல விளக்கு 2) மரபுக் கவிதைத் தலைப்பு – எல்லாப் பொருளும் இதன்பால் உள 3) புதுக்கவிதைத் தலைப்பு –…

ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய் 30,000/

தமிழ்மொழி முதன்மை குறித்த ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” –  விடை காண முயல்வோம். ஆ) கட்டுரைகள் 1500  சொற்களுக்கு மேலும், 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இ) உங்கள் கட்டுரைகளை  ஒருங்குகுறி(Unicode) வடிவில்,  சொல்ஆவணமாக(MS- Word Document) ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000 இரண்டாம்…

கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’

கவிஞர் மு.முருகேசுக்குச் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது   வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த இதழாளர் கவிஞர் மு.முருகேசுக்குப் புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது.     மார்கழி 01, 2046 / திசம்பர் 17, 2015 இல் புதுச்சேரியில் நடைபெற்ற இவ்விழாவிற்குப் புதுச்சேரி கம்பன் கழகச் செயலாளர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமையேற்றார். குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத தலைவர் கலைமாமணி அ.உசேன் அனைவரையும் வரவேற்றார்.     புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி…

எங்கள் பெரியார் – கவிமதி

எங்கள் பெரியார் – மனு வேதம் கொளுத்திய திரியார் மூடிமறைத்துப் பேச அறியார் மூடப் பழக்கம் எதுவும் தெரியார் நூலார் திமிர் அறுத்த வாளார் நூற்றாண்டு கடந்து வாழும் வரலாறார் நரியார் தோலுரித்த புலியார் நால்வகை வருணம் கலைத்த கரியார் எளிதாய்க் கடந்து செல்லும் வழியார் ஏதிலியார்க்கு வெளிச்சம் தந்த விழியார் தெளியார் அறிவு நெய்த தறியார் தெளிந்தோருக்குத் தெளிவான குறியார் உலகத் தமிழருக்கு உரியார் உணர்ந்தால் விளங்கும் மொழியார் மனு வேதம் கொளுத்திய திரியார் மாதருக்குத் தெளிவான ஒலியார் தேடிப் படிக்க சிறந்த…