மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2

 மதுரையில் தை 12, 2047 / சனவரி 26, 2016 அன்று நடைபெற்ற மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு!

மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1

 மதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள்   (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3  

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு! – க.தமிழமல்லன்

மீதிநாள் மீட்சிநாள் ஆவதே சிறப்பு!   அடிமையில் வீழ்ந்து நிலை தடுமாறி அழிவினை விரும்பிடும் தமிழ்நாடே! – நீ மிடிமையில் உழன்றே மீள்நினை வின்றி மிகநலிந் தால்எவர் மீட்பாரே? உரிமையை இழந்தாய் உயர்வுகள் துறந்தாய்! நரிமையின் காலடி வீழ்ந்தாய் – உன் சரிவுகள் நீக்கும் சான்றவர் உளரோ சடுதியில் சேர்ந்தெழுந் தார்க்கு? கட்சியில் புகுந்தாய் காட்சியில் நெளிந்தாய் களம்காணும் மறத்தினை இழந்தாய் – நீ காசுக்குப் பறந்தாய் கவர்ச்சிக்குக் குனிந்தாய்! கடைத்தேற்றும் காவலைத் துறந்தாய்! சாதியில் புரண்டாய் மதங்களை மறைத்தாய் பாதியில் உன்போக் கொழிந்தாய்!…

நேற்றும் நாளையும் எதற்கு? – கலீல் கிப்ரான்

இன்று இனிக்கும் போது ? ஒற்றை இதயத்தால் நான் இப்போது உரைப்பவை எல்லாம் நாளை ஆயிரம் இதயங்கள் ஓதும் ! பிறக்க வில்லை நாளை இறந்து விட்டது நேற்று ஏன் அவலம் அவைமேல் இன்று இனிக்கும் போது ? ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா 

வளர்த்திடுவீர் செந்தமிழை! – இலக்கியன்

வருக இன்றே! எல்லாரும் எழுதுகின்றார் பேசு கின்றார் இதுவரைக்கும் நந்தமிழ்க்கோ ஆட்சி யில்லை வல்லவராம் வாய்ப்பேச்சில் எழுத்தில், ஆய்வில் வளர்ப்பதுவோ தம்பெருமை, வருவாய்க் காகச் செல்வரெங்கும் வண்டமிழைப் புகழ்வர் எங்கும்! செழித்ததுவோ செந்தமிழும்! முனைவ ரெல்லாம் பொல்லாரே! காசுக்கே வாழு கின்ற போலிகளே! இவராலே தமிழா வாழும்? முனைவரென்ற பேராலே பல்லோர் உண்டு முன்வந்து தமிழ் வளர்க்க யாரு மில்லை தினமணியில் கட்டுரைகள் எழுதிச் செல்வார் திணையளவும் தமிழ்த்தொண்டில் நாட்ட மில்லார் வினைத்தூய்மை வினைத்திட்பம் கற்றி ருந்தும் விளையாட்டாய் இருக்கின்றார் பயனே இல்லார்! பனைமட்டைச்…

வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா?

வரிவிலக்கு தர வேண்டும் எனக் கேட்பதற்கு உதயநிதி வெட்கப்படவில்லையா?   உதயநிதிதாலின் தான் உருவாக்கி(நடித்துள்ள) ‘கெத்து’ என்னும் திரைப்படத்திற்குத் தமிழ்ப்பெயருக்கான வரிவிலக்கு தரவில்லை என உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.   இது குறித்து இரு செய்திகளைக் குறிப்பிட வேண்டும். முதலாவது தமிழ்ப்பெயர் பற்றியது.   ‘கெத்து’ என்பது தமிழ்ப்பெயர் அல்ல என உரிய குழு பரிந்துரைக்காமையால் வரிவிலக்கு மறுத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.   ‘கெத்து’ என்பது கன்னடம், துளு, படகு முதலான தமிழ்ச்சேய்மொழிகளில் இருந்தாலும் தமிழ்ச்சொல்தான். தமிழ்ச்சொல் அதன் சேய் மொழிகளில் உள்ளதாலேயே அதனை நாம்…

சேதுக்காப்பியம் 7ஆம் காண்டம் வெளியீட்டு விழா, சென்னை

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் படைப்பாக்கமான சேதுக்காப்பியம் 7 ஆம் காண்டம் நூல் வெளியீடு   தை 25, 2017 / பிப்.09,2016 மாலை 5.30 சென்னை 600 005   தலைமை :  அறிஞர் ஔவை நடராசன் தொடக்கவுரை: பேரா.மறைமலை இலக்குவனார் நூல் வெளியிடுநர்: பேரா.அ.இராமசாமி

கி.சிரீதரன் சொற்பொழிவு : இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு

தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு : கி.சிரீதரன் தலைப்பு :  இந்தியத் தொல்லியல் ஆய்வின் வரலாறு தை 23, 2047 / பிப். 06, 2016  ஆர்.கே.   மரபு மையம்Arkay Convention Center), 146/3, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை 600 004 தலைப்பு பற்றி: ஒரு நாட்டின் தொன்மைச் சிறப்புமிக்க வரலாற்றை அறிய உதவும் சான்றுகளில்  முதன்மையானவை தொல்லியல் ஆய்வுகள். தொல்லியல் என்னும் பெரும் பிரிவில் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச் சுவடிகள், பண்டைய காசுகள், அகழாய்வு, சிற்பம்/ஓவியம்/திருமேனி அடங்கிய நுண்கலைகள், கட்டடக்கலை போன்றவை…

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி

தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுவர் பாடல் போட்டி  மொத்தப் பரிசு உருவா 1050.00 கடைசிநாள்  மாசி 08, 2047 / 20.2.2016 சிறுவர் பாடிமகிழ்வதற்கேற்ற 12வரிப்பாடல்கள் 5 எழுதி அனுப்ப வேண்டும்! முதற்பரிசு உருவா 300.00 இரண்டாம் பரிசு உருவா200.00 மூன்றாம் பரிசு உருவா150 ஆறுதல் பரிசுகள் உருவா100.00 நான்கு பேர்களுக்கு. நெறிமுறைகள்: 1.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. 2.பிறமொழிச்சொற்கள் கலவாத தனித்தமிழ்ப் பாடல்கள் இயற்றப்பட வேண்டும் 3.பாடல்கள் மதநம்பிக்கை தவிர்த்த எப்பொருளிலும் இயற்றப்படலாம். 4.பாடல்களின் 2 படிகள் கட்டாயம் அனுப்பப்பெற வேண்டும். ஒருபடியில்…

கம்பன் கழகம், காரைக்குடி போட்டி முடிவு விவரம்

கம்பன் கழகம், காரைக்குடி    தை 17, 2047 / 31-1-2016 ஆம் நாள் காரைக்குடி கம்பன் கழகத்தின்அனைத்துக் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளும், பள்ளிகளுக்கான ஒப்பித்தல் போட்டிகளும் காரைக்குடி கிருட்டிணா கல்யாண மண்டபத்தில்  நடைபெற்றன. 28 கல்லூரி மாணாக்கர்களும், 60 பள்ளி மாணாக்கர்களும் பங்கேற்றுக், கீழ்க் குறிப்பிடுவோர் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மு.சாசகான் கம்பராமாயணத்தில் முதற் பரிசினையும் (உரூ 3.500), திருக்குறளில் இரண்டாம் பரிசினையும் (உரூ 1,000) வென்றார். அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி…