மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி

மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30 சென்னை பாரதிய வித்யா பவன் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  மறு வாசிப்பில் வை.மு.கோ. தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்.  

தமிழ்ப் புலவர்கள் வடசொற்கலப்பைத் தடுத்தனர் – பரிதிமாற்கலைஞர்

பௌத்தர் தலையெடுத்த பொழுது தமிழ்ப் புலவர்கள் வடசொற்களைத் தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர்.   பின்னர்ப் பௌத்தராயினார் தலையெடுத்துத் தம் மதத்தை யாண்டும் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான சனங்களைச் சேர்த்துக் கொண்டு அக்காலத்திருந்த ஆரியரை யெதிர்த்தனர். இப்பகைமை தென்னாட்டினும் பரவிற்று. பரவவே தமிழருட் பலர் பௌத்தமதம் மேற்கொண்டு ஆரியரை யெதிர்ப்பதில் நோக்கமுற்றிருந்தனர். அக்காலத்தில் மறுபடியும் தமிழ்ப் புலவர்கள் தங்களாற் கூடியமட்டில் வடசொற்களைத் தமது தமிழ்மொழியின் கண்ணே கலக்கவொட்டாது தடுத்தனர். முன்னரே தமிழிற் போந்து வேரூன்றி விட்ட வடசொற்களைத் தொலைப்பது அவர்கட்குப் பெருங் கடினமாய் விட்டது. ஆதலின்…

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை! – பரிதிமாற்கலைஞர்

பழந்தமிழ் நூல்களில் இரண்டொரு வடசொற் காணப்படலாமேயன்றி, அதற்குமேலில்லை.   இனித் தமிழ்ப் புலவர்களாயினார், சற்கிருதச் சொற்களை எவ்வளவோ விலக்கிப்பார்த்தும் அவற்றை விலக்குதல் முடியாது போயிற்று. போகவே தமிழ்ப்புலவர்களுந் தங்கள் முயற்சிகளெல்லாம் வீணாதல் கண்டு வேண்டா வெறுப்பாய்த் தமக்கு வேண்டிய சிற்சில சொற்களை மட்டில் தங்கள் எழுத்திலக்கண விதிகட்குத் தக்கவாறு திரித்து மேற்கொள்வாராயினார்; ஆரியச் சொற்கள் தமிழில் வருவதற்கேற்ற விதிகளும் வகுத்தனர். பின்னர்க் கொஞ்சங் கொஞ்சமாக வட சொற்கள் பல தமிழ் மொழியின்கண் இடம் பெறுவன வாயின.   அதன்மேல் முதலிடை கடையெனும் முச்சங்கத்தார் காலத்தினும்…

பெருஞ்சித்திரனார் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு

பெருந்தகையீர்,  அனைவரும் வருக! தமிழ்த்தேசத்தந்தை பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் 83 ஆம் ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு அனைவரும் வருக! நாள்: மாசி 30, 2047 / 13-3-2016 ஞாயிறு மாலை 3 மணிக்கு தலைமை: முனைவர்மா.பூங்குன்றன் வரவேற்புரை: திரு.தழல் தேன்மொழி சிறப்புரை: சொல்லாய்வறிஞர் அருளியார் திரு.அன்புவாணன்,  பொதுச்செயலர்(உ.த.மு.க) நன்றியுரை:  தோழர்.இளமுருகன் ஒருங்கிணைப்பு: தென்மொழி இயக்கம் இடம்: பாவலரேறு தமிழ்க்களம், மேடவாக்கம் கூட்டுச்சாலை, மேடவாக்கம், சென்னை-100 தொடர்புக்கு: 9444440449, 9443810662.    

ஆதித்தமிழர்களின் அரசியல் எழுச்சி மாநாடு, மதுரை

பங்குனி 01, 2047 / மார்ச்சு 14, 2016 தலைமை: கு.சக்கையன் தொடக்கவுரை:  சி.வெண்மணி சிறப்புரை: வைகோ இராமகிருட்டிணன் இரா.முத்தரசன் தொல்.திருமாவளவன்   ஆதித்தமிழர் கட்சி , நெல்லை

மாசிலாக்கருவூலம் – காவிரிமைந்தன்

மானுடம் முழுமைக்கான மாசிலாக்கருவூலம் இட்டது ஈரடிகூட இல்லை! இருப்பினும் தொட்டது வான்புகழ் என்றார்! சொற்களில் சுருக்கம் வைத்து பொருள்தனின் பரப்பை நீட்டும் வையத்தின் பொதுமறை தந்த – திரு வள்ளுவன் புகழ்தான் என்ன? பாலென மூன்றைப் பிரித்து – அதி காரங்கள் நூற்று முப்பத்து மூன்றெனக்கண்டு உலகம் வழக்கத்தில் கொண்டு உள்ள தலைப்புகள்தனிலே குறள்கள் பத்து வாழைதான் குலைதான் தள்ளி வைத்ததைப் போல அழகு வழிவழி வந்தவரெல்லாம் வாசித்து மகிழமட்டுமின்றி.. வழியாய் பூசித்து ஏற்கவைத்தார் வாசுகி கணவர் அன்றோ? ஆக்கமும் ஊக்கமும் அங்கே பாக்களாய்…

த.இ.க.க. – தகவலாற்றுப்படை – தொடர் பொழிவு 13

மாசி 28, 2047 /  11.03.2016 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி   த.இ.க. கலையரங்கம், சென்னை கீழடி அகழாய்வுகள் : கி.அமர்நாத்து இராமகிருட்டிணா (தொல்லியல் கண்காணிப்பாளர், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறை)   தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில் சென்னை – 600 025. தொ.பே: 2220 1012 / 13 மின்வரி: tamilvu@yahoo.com  www.tamilvu.org

உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்! – கவிஞர் கலைக்கூத்தன்

நினைக்கிறதை உயிர்த்தமிழில் பாடி வைப்பேன்!                 நீடுலகில் தான்வாழும் வரையென் அன்பு மனைக்கிழத்தி மேடைகளில் முழங்கி நிற்பாள்!                 மக்களெலாம் முத்தமிழ் பயின்று போற்றும் வினைக்கென்றே வளர்த்திடுவேன்! இம்மா ஞாலம்                 வெல்தமிழன் சிறப்புணரக் கேட்ட பின்பு எனைக்கொன்று விடுபடைப்பே! புலமை மூத்தோன்                 என்சிதைக்குத் தமிழ்ப்பாடித் தீமூட் டட்டும்!                                                                                                                                 – கவிஞர் கலைக்கூத்தன்     (மும்பையில் வாழ்ந்து மறைந்த கவிஞர்)   http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=534

அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள்!

அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்!   முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு (+2) வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு மின் சேவை மையத்தில் பணம் செலுத்திப் பதிவு செய்தால், வீட்டுக்கே அவை அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  “மாணவர்களுக்குத் தேவையான, முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு வரையிலான பாடநூல்களை இணையவழி…

தெய்வத்தரிசனம் இணையத் தளமாக வெளிவர உள்ளது

அன்பான வாசகர்களே!   உங்களின் தெய்வத்தரிசனம் விரைவில் இணையத் தளமாக வெளிவர உள்ளது. இது முழுவதும் இறைநெறியையே – ஆன்மிகத்தையே – கொண்டதாக இருக்கும். இது ஒரு தனி மனிதனின் தொகுப்பாக இல்லாமல் வாசகர்களின் குரலாகவே இயங்க உள்ளது. இந்த இணையத்தளத்தில் செய்திகளாக இருந்தாலும் சரி, விளம்பரங்களாக இருந்தாலும் சரி வாசகர்களின் பங்களிப்பையே விரும்புகிறது.   உங்கள் குலத்தெய்வக் கோயில்கள்பற்றிய தகவல்களையும், உங்களுக்குத் தெரிந்த இறைநெறித் தகவல்கள், கதைகள், கழுவாய்கள்(பரிகாரங்கள்), அற்புதங்கள்பற்றிய விளக்கமான செய்திகளையும் எழுத்து மூலமாகவோ, தட்டச்சு செய்தோ அனுப்பலாம். ஏதோ தகவல்களை…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் வாழ்வாதார உதவி   கிளிநொச்சி செல்வாநகரைச் சேர்ந்த பெண்தலைமைத்துவ குடும்பமான வனசுதர் அன்னலட்சுமிக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பில் ஏற்கெனவே வேல்லிசன் நிறுவனத்தினால் மாடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மாட்டுக் கொட்டகை அமைத்துதருமாறு கோரியிருந்தர். இதற்கிணங்க எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்ற புலம்பெயர் உறவான இலண்டனைச் சேர்ந்த திரு. சு. இரவிராசன் 20,000 உரூபா நிதி உதவியினை வழங்கியிருந்தர். நல்லுள்ளம் கொண்ட இரவிராசனின் உதவியினால் வனசுதர் அன்னலட்சுமி தனது வாழ்வாதரத்தினை முன்னேற்றுவதற்கான வழியினை ஏற்படுத்தியுள்ளர்.   எமது சங்கத்தின் ஊடாக…