மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள் – பேரா.சி.இலக்குவனார்

புலவர்களே அரசர்களின் அறிவுரையாளர்கள்   புலவர்கள் தாம் அக்காலத்து அரசர்தம் அறிவுரையாளர்கள் ; மக்களை நல்வழிப்படுத்தும் விதிகள் பல அமைக்கும் சட்ட மன்றம் போன்றவர்கள். அரசரேயாயினும் யாவரே யாயினும் நெறிதவறிச் சென்றால் அதனை எடுத்துக்காட்டி நேர்வழி நடக்க அறிவுரை கூறுவார்கள். இக்காலத்து மக்களாட்சி அரசு மக்களுக்குச் கேடு பயக்கும் நெறி முறைகளை மேற்கொள்ளத் தொடங்கினால் எதிர்க் கட்சிகள் எதிர்த்து நின்று அரசின் குற்றங்களை எடுத்து இயம்புகின்றன. அக்காலத்தில் கட்சி முறையில் ஆட்சி இல்லை. ஆகவே புலவர்களே அப்பணியையும் ஆற்றிவந்தனர். -பேரா.முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய…

299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்

299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம் தமிழ்நாடு அரசு தொடக்கம்   தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா   அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்.   மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet…

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ  “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…

மூத்த குடிமக்களுக்கான கட்டணமின்றிப் பயணச்சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது

    முதலமைச்சர் செல்வி செயலலிதா அறிவித்துள்ள, சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் புதிய சலுகைத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பேருந்துகளில் பயணம் செய்வதற்கான அடையாளச்சீட்டுகளை முதியோர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.   அரசுப் பேருந்துகளில், 60 அகவைக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள வகை செய்யும் புதிய திட்டம் ஒன்றை, முதலமைச்சர் செல்வி செயலலிதா, கடந்த 18- ஆம் நாள் சட்டப்பேரவையில் அறிவித்தார். முதற்கட்டமாக, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், இன்றுமுதல்…

சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!

சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!   அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.   அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர்.

தென்னாட்டு வடமொழியாளர் தமிழ்ப் பெயர்களைத் தங்கள் சப்த சாத்திரத்திற் கியைந்த வண்ணம் மாற்றிப் புகுத்தினர். இவ்வாறு தமிழருட் பண்டிதராயானார் வடமொழியைத் தமிழின்கண் விரவவொட்டாது விலக்கியும், பாமரராயினார் வடமொழிச் சொற்களுட் பலவற்றை மேற்கொண்டு வழங்கப் புகுந்தமையின் நாளாவட்டத்தில் வட சொற்கள் பல தமிழ்மொழியின்கண்ணே வேரூன்றிவிட்டன. அவ்வாறாயின் இதுபோலவே வடமொழியின் கண்ணும் தமிழ்ச் சொற்கள் பல சென்று சேர்ந்திருத்தல் வேண்டுமன்றோ? அதையும் ஆராய்வாம்.   வடமொழி தமிழ் மொழியொடு கலக்கப் புகுமுன்னரே, முன்னது பேச்சுவழக்கற்று ஏட்டுவழக்காய் மட்டிலிருக்கும் நிலைமைக்கு வந்துவிட்டது. ஏட்டுவழக் கொன்றுமேயுள்ள மொழியோடு இருவகை வழக்கமுள்ள…

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.

ஆரியர் முயற்சிக்கு இணங்காமல் தமிழ்ப் புலவராவார் தமிழ்மொழியின் போக்கையே தழுவிச் செல்வாராயினார்.   தமிழருட் சாமானிய சனங்கள் அவ்வாரியரது விருப்பத்திற்கேற்ப எவ்வளவிணங்கிய போதிலும், புலவராயினார் அவர்களது திருத்தப் பாட்டிற்குப் பெரிது மிணங்கினரல்லர். ஒழுக்கச் சீர்ப்பாடு ஏற்பட்டபோதினும் மொழித் திருத்தம் ஏற்படவில்லை. தமிழின் முப்பத்தோரெழுத்துகளும் அவ்வறே யின்றளவு மிருக்கின்றன; சிறிதும் வேறுபடவில்லை. தாங்கள் செல்லுமிடங்களுக்குத் தக்கபடி புதிய புதிய இலிபிகள் ஏற்படுத்திக் கொள்ளுமியல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற்கேற்றபடி தமிழிலிபியை யொட்டிக் ‘கிரந்தம்’ என்னும் பெயரிற் புதுவதோர் இலிபிவகுத்தனர்; தமிழரை வசீகரிக்குமாறு அவ்விலிபியிற் பல நூல்கள் வரைந்தனர். தமிழ்ப்…

ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…

இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்கள்

இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகம், கேரளம், கருநாடகம், புதுச்சேரி மாநிலங்களின் இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் காலியாக உள்ள பட்டயத் தொழில் பயிலுநர் (Diploma Trainee), இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (Junior Officer Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: பட்டயத் தொழில் பயிலுநர் (மின்னியல்) (Diploma Trainee – Electrical) – 43 பணி: இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (மனிதவளம்)…

இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி

பாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி   மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant). காலியிடங்கள்: 20 அகவை (வயது) வரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பட்டயக் கணக்காளர் படிப்பை (C.A) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுக்…

இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி

தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி   புது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்: அ. வணிகத் தொழில் பயிலுநர் (Trade apprentice): கட்டுமானம் (Civil) – 16 இயந்திரவியல் (Mechanical) – 14 தகுதி: கட்டுமானம், இயந்திரவியல் போன்ற…