தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் தமிழ் ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்

  தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம்: பணி: தமிழ் ஆசிரியர் – 02 பணி: ஓட்டுநர் – 01 பணி: அலுவலக உதவியாளர் – 02 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8. இம்முகவரிக்கு நேரிலும் வந்து கொடுக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.03.2016 மேலும் முழுமையான விவரங்கள் அரிய…

இந்திய அஞ்சல் துறை: நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!     இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 நாள்: 29.02.2016 பணி: பல்வினைப் பணி (Multi Tasking Job) காலியிடங்கள்: 127 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,800 மற்றும் உரூ.1,900. அகவை வரம்பு: 27.03.2016 நாளின்படி 18 – 25க்குள்…

தமிழர்களின் அடையாளம் திருக்குறள் – அமெரிக்கவாழ் தமிழர் உரை

      தமிழர்களின் அடையாளம் திருக்குறள் அமெரிக்க வாழ் தமிழர் உரை   காட்சி வழியாகத் தமிழில் இயற்பியல் கணிதம்,  பாடங்களைப்   பெருந்தொடர் குறுந்தகடாக  வழங்குதல் விழா      தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்  நடைபெற்ற காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும், அவற்றின் விளக்க உரையும் கொண்ட பெருந்தொடர் வரிசையின் குறுந்தகடு வழங்குதல் விழா நடைபெற்றது.        பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம், விழாவிற்கு வந்திருந்தோரை வரவேற்றார்.   பள்ளிச் செயலர்…

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு

ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…

மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் கொண்டாட்டம்

 சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்தவர்களை மாணவி காயத்திரி வரவேற்றார்.பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசிய அறிவியல் நாள் தொடர்பாகவும், அதன் சிறப்பு குறித்தும் விளக்கமாக பேசினார். ஆசிரியை செல்வமீனாள் அறிவியல் ஆய்வுகளை எளிய முறையில் மாணவர்களுக்குச் செய்து காண்பித்துச் செயல் விளக்கம் அளித்தார். விழாவில் 6ஆம் வகுப்பு மாணவி காவியா, சென்னை அக்கினி கல்வி நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல்…

ஏழு பேர் விடுதலையில் கலைஞர் – செயலலிதா நாடகங்களை மக்கள் மறந்துவிடவில்லை! – வை.கோ

ஏழு பேர் விடுதலையில் கலைஞர் – செயலலிதா நாடகங்களை மக்கள் மறந்துவிடவில்லை! – வைகோ ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:   கடந்த பிப்பிரவரி 23ஆம் நாள், வேலூர்ச் சிறையிலிருந்து காப்பு விடுப்பில்(parole) வந்த நளினி, மறைந்த தன் தந்தையின் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார். “பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்தபொழுது என்ன பேசினார்” என்ற சூனியர் விகடன் செய்தியாளரின் கேள்விக்கு, “அதை இப்பொழுது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து கிளம்பும்பொழுது எனக்கு எந்த வசதியும்…

இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம்! புதுக்கோட்டை மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்   இலங்கைத் தூதரக முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மாசி 17, 2047 / 29.02.2016 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சென்னை,…

42 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் தடை

தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காத 42 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகள் தடை   நாடாளுமன்ற – சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவு வெளியான முப்பது நாட்களுக்குள் தங்கள் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்க வேண்டும். அப்படிஅளிக்காதவேட்பாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிடாதவாறு தடை போடத் தேர்தல் ஆணையத்துக்கு உரிமை உண்டு. 1951-ஆம் ஆண்டின் மக்கள் சார்பாளுகை(பிரதிநிதித்துவ)ச் சட்டம் 8ஏ 11(ஏ) (2) மற்றும் 10ஏ ஆகிய பிரிவுகளின்படி, தமிழகத்தில் தேர்தல் செலவுக் கணக்கை அளிக்காதவேட்பாளர்கள் 42 பேருக்கு…