மொரிசியசு நாட்டில் திருக்குறள் தேசிய மாநாடு

மொரிசியசு   நாட்டில்  திருக்குறள்  தேசிய மாநாடு   மொரிசியசு  நாட்டில்  திருக்குறள்  தொடர்பான தேசிய மாநாடு இம்மாதம் 6-ஆம் நாள் மிகச்சிறப்பாக நடை பெற்றது. அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பு (INTAD), சென்னை, ஆசியவியல்  நிறுவனத்தின்  கூட்டுறவோடு   இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மொரிசியசு நாட்டின்  முன்னாள் கல்வியமைச்சரும், கஅபபஅ(யுனெசுகோ) நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும்,  மொரிசியசு நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகப் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் அமைப்பின் தலைவருமான பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன் அவர்கள் இம்மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துப் பன்னாட்டுத்தரத்துடன் மிகச்சிறப்பாக…

மாணிக்கவாசகம் பள்ளியில்விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா

 மாணிக்கவாசகம் பள்ளியில் விருது பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா    தேவகோட்டை – தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விருது பெற்ற பள்ளி மாணவிகளுக்குப் பாராட்டு  விழா நடைபெற்றது.    நிகழ்வுக்கு வந்தவர்களை மாணவர் செகதீசு வரவேற்றார்.   பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.   தேவகோட்டை த.மு.எ.ச.கலை இலக்கிய இரவு விழாவில் மாநில அளவில் பரிசுகளை வென்ற இப்பள்ளி மாணவிகள் தனலெட்சுமி, பரமேசுவரி, காவியா ஆகியோருக்கு விருதுகளும், புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன.  …

வாழும் தமிழ்அறிஞர்கள், தமிழார்வலர்கள் ஆவணத்திட்டம்

வாழும் தமிழ்அறிஞர்கள், தமிழார்வலர்கள்  ஆவணத்திட்டம் மரு.மு.செம்மல் மணவை முத்தபா  அறிவியல் தமிழ்மன்றம் சார்பில் வாழும் தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பற்றிய ஆவணப் படத்தொகுப்பு உருவாக்கப்படுகின்றது. தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் தங்களைப் பற்றியும் தமிழியல் கருத்துகள் பற்றியும் 20 நிமையக் காலஅளவில் பேசுவதை ஆவணமாக்கும் இத்திட்டத்திற்கு ஒருவருக்குக் குறைந்த அளவில் உரூபாய் ஆயிரம்  ஆகும். இதில் உரூபாய் ஐந்நூறு மணவை முத்தபா அறிவியல் தமிழ்மன்ற அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும். எஞ்சிய தொகையை உரியவர் அல்லது அவர் சார்பில் பிறர் அளித்துதவ வேண்டும். தஞ்சாவூர் – திருவாரூர் பகுதிகளில் வாழும்…

திறமையால் உயரமான பன்மொழி நடிகர் கிங்காங்கு

திறமையால் உயரமான  பன்மொழி நடிகர் கிங்காங்கு   ?] வணக்கம் கிங்காங்கு அவர்களே! முதலில் உங்கள் அப்பா – அம்மா பெயர், எப்படிப் படித்தீர்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விவரங்களைக் கூறுங்களேன்!      என்னுடைய சொந்தப் பெயர் சங்கர். சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பக்கத்தில் உள்ள வரதராசபுரம் எனும் சிற்றூர். என் அப்பா பெயர் ஏழுமலை. அம்மா பெயர் காசியம்மாள். என் உடன்பிறந்தவர்கள் அக்கா ஒருவர், தங்கைகள் மூன்று பேர். அக்கா பெயர் மகாதேவி, தங்கை பெயர் தேன்மொழி. இன்னொரு…

ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்!

ஈழவேட்கை கொல்லும் நச்சு ஊசிகள்! முடமாகும் ஈழத் தமிழினம்! ஈழத்தில் இருந்து இழவுச் செய்தி வந்திருக்கிறது. வேறு என்ன செய்தி வரும்? ஏதிலியர் (அகதிகள்) முகாம்களில் இருந்தும் மறுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட முன்னாள் போராளிகள், இனம் காண முடியாத நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார்கள் என்பதுதான் அந்தக் கொடூரமான செய்தி. இப்படி 103 பேர் இதுவரை இறந்துள்ளனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எண்ணிக்கை எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்… ஆனால், இந்த இனம் புரியாச் சாவுகளின் பின்னணியில்…

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்! – ந.அருண் பிரகாசு இராசு

இந்தத் தமிழர்களுக்காகவும் பேசுவோம்!    ‘2016, ஆகத்து ஒன்றாம் நாள், ஏதிலியர்(அகதிகள்) முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்களுக்குக் குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினார்கள்’ என்ற செய்தியை இணையத்தில் படித்தபொழுது எனக்கு ‘வேடர் குடியிருப்பு’ நினைவிற்கு வந்தது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத் தொலைவில் இருக்கிறது வேடர் குடியிருப்பு. தமிழ்நாட்டில் இருக்கும் 107 ஏதிலியர் முகாம்களில் ஒன்றுதான் இதுவும். ஒரு சிற்றூரைப் (குக்கிராமத்தை) போலத் தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்தவெளிச் சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும்….

ஆயுதப் போராட்ட எழுச்சியால்விடுதலை பெற்றோம் – கவிஞர் மு.முருகேசு

ஆயுதப் போராட்ட எழுச்சியால் விடுதலை பெற்றோம் – 70-ஆம் ஆண்டு விடுதலைநாள் விழாவில் கவிஞர் மு.முருகேசு பேச்சு     வந்தவாசி:   ஆடி 30, 2047 / ஆக. 14 அன்று, வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கம்,  ஆசிய மருத்துவக்கழகம் இணைந்து  வந்தவாசியில்  விடுதலைநாள்விழா-கருத்தரங்கம் நடத்தின.  இதில் வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்க அறிவுரைாயளர் கவிஞர் மு.முருகேசு பங்கேற்றுப்பேசினார்.    இவ்விழாவிற்கு வந்தை வட்டக் கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மொழிப்போர் ஈகையாளருமான அ.மு.உசேன் தலைமையேற்றார். செயலாளர் பா.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். தொழிலதிபர்…

விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு

விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள்   தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர்,  செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன.   இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு மிதிவண்டிகள் அன்பளிப்பு

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இரண்டு  மிதிவண்டிகள் அன்பளிப்பு  எமது புலம்பெயர் உறவான  இலண்டன்  மாநகரைச் சேர்ந்த  சந்தியா, தன் 12 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு  இரண்டு மாணவிகளுக்குப் புதிய  மிதிவண்டிகளை வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்கத்தினூடாக வழங்கி வைத்துள்ளார்.   மேற்படி விண்ணப்பம் அவர்களது பெற்றோர்களால் பாடசாலை அதிபர்களின்  பரிந்துரையின் கீழ் வட்டுக்கோட்டை இந்து இளைஞர் சங்கத்திடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக சங்கத் தலைமைச் செயலகத்தில் வைத்து வட்டுக்கோட்டை இந்து இளைஞர்(வாலிபர்) சங்க முன்னாள் தலைவரும், கனடா கிளைச் சங்க முன்னாள் தலைவரும்…

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர் வருகை

அருவினைகள் படைக்கும் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கு மாகாணக் கல்வி அமைச்சர் வே.இராதாகிருட்டிணன் திடீர்  வருகை   மலையகத்தில் காணப்படும் தேசியக் கல்லூரிகளில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளினால் மலையத்திற்கான தேசியக் கல்வியற் கல்லூரிகளின் எதிர்காலம் குறித்துக் கவலை அடைய வேண்டிய நிலை யாவரும் அறிந்ததே! இதற்குக் காரணம் கல்லூரியின்  முதன்மை குறித்து அக்கரை இன்றிச் செயலாட்சியர் செயற்பட்டமையாகும் என்று  அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இப்போது இந்தக் கல்வியற் கல்லூரியின் செயற்பாடுகள் ஒரளவு மாற்றத்தைக் கொண்டிருந்தாலும் இன்றும்  சில மாதங்களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு …